அரசின் பெருந்திரள் கண்காணிப்பு கருத்து சுதந்திரத்தை முடக்கி விடுகிறது

அரசின் பெருந்திரள் கண்காணிப்பு கருத்து சுதந்திரத்தை முடக்கி விடுகிறது என்கிறது ஒரு ஆய்வு. சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி அனைவரும் தத்தமது கருத்துக்களை வெளியிட வாய்ப்புகளை உருவாக்கியிருக்கிறது என்ற கண்ணோட்டத்தை இந்த ஆய்வு கேள்விக்குள்ளாக்குகிறது.

பொதுவாக, தமது நண்பர்கள் வட்டத்தில் மற்றவர்களோடு ஒத்துப் போவதற்கும், மற்றவர்களால் ஒதுக்கப்பட்டு விடாமல் தவிர்ப்பதற்கும் அவர்களால் ஏற்றுக் கொள்ளப்படாது என்று நினைக்கும் கருத்துக்களை ஒருவர் பேசாமல் முடக்கி விடுவது “மௌனச் சுழல்” என்று அழைக்கப்படுகிறது. பேஸ்புக்கிலும், டுவிட்டரிலும் நமது நண்பர்களின் கருத்துக்களோடு முரண்படாமல் பேசுவதில் இது வெளிப்படுகிறது.

சமீப காலமாக அரசுகள் பெருமளவு கண்காணிப்பில் ஈடுபடுகின்றன என்பதை உணரும் போது பலர் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்துக்களுக்கு மாறான தமது எண்ணங்களை இணையத்தில் வெளியிடாமல் முடக்கி விடுகிறார்கள் என்று அந்த ஆய்வு கண்டறிந்திருக்கிறது. இந்த ஆய்வின்படி “என்னிடம் ஒளிப்பதற்கு ஒன்றும் இல்லை” என்று சொல்பவர்கள், நாட்டின் பாதுகாப்புக்காக அரசாங்கம் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்று நம்புபவர்கள்தான் மற்றவர்களை விட தமது கருத்துக்களை அதிகமாக சுய தணிக்கை செய்து கொள்கிறார்கள்.

“அரசுகளும் தனியார் நிறுவனங்களும் கண்காணிப்பு உத்திகளை கடைப்பிடிப்பது நேர்மையான வெளிப்படையான கருத்து பரிமாற்றத்துக்கான நடுநிலை மேடையாக இணையத்தை பயன்படுத்துவதை குறைத்து விடுகின்றது; பல வகை கருத்துக்கள் கொண்டவர்களுக்கான இடமாக விளங்குவதற்கு பதிலாக, அதிகபட்ச ஆதிக்கம் செலுத்தும் கருத்துக்களுக்கு மட்டுமே சேவை செய்வதாக இணையத்தை மாற்றி விடுகின்றது.”

https://www.washingtonpost.com/news/the-switch/wp/2016/03/28/mass-surveillance-silences-minority-opinions-according-to-study/

http://jmq.sagepub.com/content/early/2016/02/25/1077699016630255.full.pdf

https://en.wikipedia.org/wiki/Spiral_of_silence

Permanent link to this article: http://new-democrats.com/ta/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%be/

Leave a Reply

Your email address will not be published.

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
அனிதாவை காவு வாங்கிய நீட்! – போஸ்டர்

மத்திய, மாநில அரசுகளும் உச்சநீதிமன்றமும் பொறுப்பு! கல்வியில் தனியார்மயத்தை ஒழிப்போம்! பார்ப்பனிய பா.ஜ.க-வையும் அதன் ஆதரவாளர்களையும் எதிர்ப்போம்.

பத்திரிகை செய்தி : யமஹா தொழிலாளர் போராட்டத்துக்கு ஐ.டி ஊழியர்கள் ஆதரவு

தொழிலாளர் போராட்டம் வெல்லவும், யமஹா ஊழியர்களின் உரிமைக் காக்கவும் நமது பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர்கள் பிரிவு எப்போதும் துணை நிற்கும். தொழிலாளி வர்க்கத்தின் உரிமைகளை காக்கவும், வர்க்க...

Close