தென் ஆப்பிரிக்காவின் மருந்து உற்பத்தி நிறுவனமான டிரான்ஸ்பார்மை தேசிய உடைமையாக்கக் கோரி அந்நிறுவன தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்:
தென் ஆப்பிரிக்காவின் மருந்துப் பொருட்களை விநியோகிக்கும் டிரான்ஸ்பார்ம் நிறுவனத்தின் தொழிலாளர்கள் தங்களுக்கு மாதம் 12,500 ராண்ட்ஸ் கூட வழங்க முடியாத நிறுவனத்தை அரசு உடைமையாக்க வேண்டும் என்று செப்டமர் 12 ம் தேதியன்று வேலைநிறுத்தம் செய்தனர்.
இதற்கு முன்னதாக இத்தொழிலாளர்கள் இந்நிறுவனத்துடன் நடத்திய பேச்சு வார்த்தையில் , மருந்து விலையானது அரசுக் கட்டுப்பாட்டில் இருப்பதால் தங்கள் ஊழியர்களுக்கு, அவர்கள் கோரிய ஊதியத்தை வழங்க முடியவில்லை என்று இந்நிறுவனம் அரசின் மீது குற்றம் சாட்டியது. அதே சமயத்தில் இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி 2017 ஆம் ஆண்டு மட்டும் 31.26 மில்லியன் ராண்ட்ஸ் (2.1 மில்லியன் டாலர்) ஊதியமாகப் பெற்றுள்ளார் என்று தொழிற்சங்கம் குற்றம் சாட்டுகிறது. இந்நிறுவனம் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை தடுத்து நிறுத்த நீதிமன்றத்திற்கு சென்றபோதிலும் இத்தொழிலாளர்கள், நிறுவனத்தின் கடுமையான தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து போராட்டத்தை அறிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, தொழிலாளர்கள் தங்கள் நிறுவனத்தை அரசுயுடைமையாக்க வேண்டும், மருந்துகளின் விலையை அரசுக் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் ,தங்களுக்கு ஒரு குடும்பத்தின் அத்தியாவசத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான ஊதியமான மாதம் 12500 ராண்ட்ஸ்(840 டாலர்) வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் தென்னாப்பிரிக்கா அரசின் சுகாதாரத்துறை நோக்கி செப்டமர் 13 ம் தேதியன்று பேரணியாக சென்றனர். தற்போது இந்நிறுவனத் தொழிலாளர்களுக்கு மாதம் 4500 ராண்ட்ஸ் மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது.
பிரான்சில் அரசு எரிசக்தி துறை நிறுவனம் இரண்டாகப் பிரிக்கப்படுவதைக் கண்டித்து அதன் தொழிலாளர்கள் போராட்டம்
பிரான்சின் அரசு எரிசக்தி நிறுவனமானது அந்நிறுவனத்தை இரண்டாகப் பிரிக்கத் திட்டமிட்டு அதற்கு ஹெர்குலிஸ் திட்டம் என்று பெயரிட்டுள்ளனர். இதன் படி அந் நிறுவனத்தை முதலில் இரண்டாகப் பிரிப்பதோடு மட்டுமில்லாமல், அந்நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு தாரை வார்ப்பதற்கான திட்டம் இது என்று கூறி அந்நிறுவனத்தின் தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இத்திட்டமானது தங்களுக்கு பணிப்பாதுகாப்பு இல்லாமை, சமுதாய சேவையில் ஒரு அரசு நிறுவனர் என்ற நிலையை இல்லாமல் ஆக்குவது என்று கூறி அதன் தொழிலாளர்கள் போராடுகின்றனர்.
கீரிசில் அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கையைக் கண்டித்து தொழிற்சங்கங்கள் அணிவகுப்பு:
கீரிசின் கன்சர்வேட்டிவ் நியூ டெமாகிரேசி அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கையைக் கண்டித்து அங்குள்ள பல்வேறுத் தொழிற்சங்கங்கள் போராட்டத்திற்கு செப்டமர் 17 ம் தேதி அழைப்பு விடுத்தன.
தொழிலாளர் விரோதக் கொள்கையின் படி அரசானது தொழிலாளர்கள் ,எந்த தொழிற்சங்கத்தில் இருக்கிறார்கள் என்று மின்னணு பதிவு அட்டையை வழங்க நிர்ப்பந்திக்கிறது. இதன் மூலம் அரசானது, தொழிலாளர்களைப் பற்றிய தகவல்களை காவல் துறைக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் எளிதாக அளிக்க முடியும்.
அனைத்து தொழிற்சங்கத்தின் முடிவுகளை மின்னனு வாக்கு மூலம் பதிவு செய்ய வேண்டும் என்று அரசு நிர்ப்பந்திக்கிறது. இதன் மூலம் தொழிற்சங்கங்களின் கூட்டு முடிவுகளை சிதைப்பதை அரசு நோக்கமாகக் கொண்டிருக்கிறது
இந்த அணிவகுப்பைத் தொடர்ந்து தொழிற்சங்கங்கள், வரும் செப்டமர் 24ம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது
https://peoplesdispatch.org/2019/09/21/trade-unions-in-greece-mobilize-against-anti-labor-policies/
அமெரிக்காவில் ஜெனரல் மோட்டார்ஸின் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்:
அமெரிக்காவின் யுனைட்டேட் ஆட்டோ தொழிற்சங்கம் ஆனது GM உடன் மேற்கொள்ளப்பட்ட 2015 கூட்டு ஒப்பந்தம் கடந்த செப்டமர் 14ம் தேதியன்று முடிவுக்கு வந்ததை ஒட்டி அந் நிறுவன கவுன்சில் உடன் நடத்திய பேச்சு வார்த்தையில் நியாயமான ஊதியம், பணிப்பாதுகாப்பு, இலாபத்தில் பங்கு, சுகாதரத்தில் உதவி போன்றவற்றிற்கான கோரிக்கைகளில் உடன்பாடு எட்டாததால் வேலை நிறுத்தத்தில் செப்டமர் 15ம் தேதி நள்ளிரவு முதல் ஈடுபட்டனர்.
https://peoplesdispatch.org/2019/09/19/massive-strike-by-gm-workers-in-the-us-enters-third-day/
பாகிஸ்தானில் 2012 ஆம் ஆண்டு தீ விபத்தில் பலியான ஆயத்த ஆடைத் தொழிலாளர்களுக்காக தொழிலாளர்களின் ஏழாம் ஆண்டு நினைவேந்தல் & உள்ளிருப்புப் போராட்டம்:
கடந்த 2012 ஆம் ஆண்டு கராச்சியில் அலி எண்டர்பிரைசசில் நடந்த உலகின் மிக கோர தொழிற்துறை தீ விபத்தில் பலியான 255 தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரியும், அபாயகராமான வேலை நிலைமைகளின் கீழ் பணியாற்றுவதை எதிர்த்தும் கடந்த ஆறு ஆண்டுகளாக இந்நிறுவனத் தொழிலாளர்கள் தொடர்ந்து போராடி வந்தனர். இதற்குப் பலனாக கடந்த மே மாதம் 2018 ஆம் ஆண்டு 5.2 மில்லியன் டாலர் இழப்பீடாக ஜெர்மன் ஆயத்த ஆடை நிறுவனமான கிக் மூலம் வழங்கப்பட்டது. இந்த கிக் நிறுவனத்தின் தயாரிப்புகளை அலி எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் உற்பத்தி செய்கிறது .
மேலும் இந்நிறுவனத் தொழிலாளர்கள் இந்த நினைவு நாளில் பணிப் பாதுகாப்பு அம்சங்களை வலியுறுத்தி செப்டமர் 11ம் தேதியன்று நினைவேந்தல் மற்றும் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.