கலிஃபோர்னியா, நியூயார்க் குறைந்த பட்ச ஊதியம் ஒன்றரை மடங்கு ஆகிறது

கலிஃபோர்னியா மாநில அரசு சட்டப்படியான குறைந்த பட்ச ஊதியத்தை அடுத்த ஆண்டு மணிக்கு $10.50 ஆகவும் 2022-க்குள் படிப்படியாக $15 ஆகவும் உயர்த்துவதற்கு ஒத்துக் கொண்டுள்ளது.
அதைத் தொடர்ந்து நியூயார்க் நகரில் குறைந்த பட்ச ஊதியத்தை 2018-க்கும் $15 ஆக உயர்த்துவதற்கான ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளாக (2013 முதல்) உணவகங்கள், சில்லறை விற்பனை கடைகள் முதலான சேவைத் துறை ஊழியர்களின் விடாப்பிடியான உறுதியான போராட்டங்களைத் தொடர்ந்து இந்த ஊதிய உயர்வு சாதிக்கப்பட்டுள்ளது. 2014-க்குப் பிறகு 12-க்கும் அதிகமான மாநிலங்கள் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்துவதற்கான சட்டங்களை இயற்றியிருக்கின்றன. சான் பிரான்சிஸ்கோ நகரிலும், லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியிலும் ஏற்கனவே 2020-க்குள் குறைந்த பட்ச ஊதியத்தை $15 ஆக உயர்த்துவதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. 2013-ம் ஆண்டு சியாட்டில் மாநகராட்சி அவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட நகரில் சோசலிஸ்ட் அல்டர்னேடிவ் கட்சியைச் சேர்ந்த சாமா சாவந்த் தான் தேர்ந்தெடுக்கப்பட்ட 6 மாதங்களுக்குள் மணிக்கு $15 ஊதிய சட்டத்தை நிறைவேற்ற வைத்திருக்கிறார். ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் தேர்வில் போட்டியிடும் பெர்னி சாண்டர்ஸ் மணிக்கு $15 ஊதியம் என்ற கோரிக்கையை ஆதரிக்கிறார்.
கலிஃபோர்னியா மாநிலம் தழுவிய பல கருத்துக் கணிப்புகள் இந்த ஊதிய உயர்வுக்கு பெரும்பான்மை ஆதரவு இருப்பதாக தெரிவித்திருக்கின்றன.
இந்தச் செய்திக்கு சில ஊழியர்களின் எதிர்வினை :
சாந்த்ரா கரேரா, வயது 38, லாஸ் ஏஞ்சல்ஸ். ஒரு உணவகத்தில் பணி புரிபவர்
இப்போதைய குறைந்த பட்ச ஊதியத்தில் வாடகை, மற்றும் பிற மாதாந்திர செலவுகளான $1,050-ஐ சமாளிக்க முடியவில்லை. துண்டு விழுவதை சமாளிக்க அவர் விருந்துகளுக்கு சப்ளை செய்யும் வேலை செய்கிறார். அதிலும் வருமானம் குறைந்து விட்டிருக்கிறது. ஊதிய உயர்வு எவ்வளவு சீக்கிரம் வருகிறதோ அவ்வளவு நல்லது என்கிறார் இவர்.
ஹை லேண்ட் பார்க்கைச் சேர்ந்த 43 வயதான மிகுவேல் சான்செஸ் ஒரு உணவகத்தின் சமையலறையில் வேலை செய்கிறார். வாடகையையும் கட்டணங்களையும் கட்டிய பிறகு, குறைந்த பட்ச ஊதியம் தரும் இரண்டு வேலைகள் பார்க்கும் அவர் கையில் உணவுக்கும் அவரது மனைவி, 2 குழந்தைகளுக்கான தேவைகளுக்கும்
$440 தான் மிஞ்சுகிறது.
22 வயதான ஜிவான் பார்க், லீஸ் நூடுல்ஸ் உணவகத்தில் வேலை செய்கிறார். கூடுதல் சம்பளம் பாடப் புத்தகங்களுக்கும், ஆங்கில வகுப்புகளுக்கும், அம்மாவுக்கு மளிகை வாங்கிக் கொடுக்கவும், சிறிதளவு சேமிக்கவும் உதவியாக இருக்கும். ஜனவரியில் மாநிலம் தழுவிய $1 ஊதிய உயர்வு ஏற்கனவே உதவுகிறது. “அது ஒரு டாலர்தான் ஆனால், 50 மணி நேர வேலைக்கு $50 அதிகம், 500 மணி நேரம் வேலை செய்தால் $500 அதிகம்” என்கிறார் அவர்.
இந்நிலையில் கார்ப்பரேட்டுகளோ, ஊதியத்தை உயர்த்தினால் நாங்கள் ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கி விட்டு தானியக்கத்தை (ஆட்டமேஷன்) அதிகப்படுத்த ஆரம்பித்து விடுவோம் என்று மிரட்டவும் எச்சரிக்கை விடவும் செய்கின்றன. ஊதிய உயர்வை ஈட்டிய தொழிலாளர் போராட்டங்கள் இத்தகைய ஆட்குறைப்பு நடவடிக்கையையும் வெற்றிகரமாக தடுத்து நிறுத்த முடியும். மேலும் உணவகங்கள் முதலான சேவைத் துறை வேலைகளை குறைந்த ஊதியத்துக்கு வேலை செய்யும் வெளிநாடுகளுக்கு அவுட் சோர்ஸ் செய்வது சாத்தியமற்றது என்பதை இங்கு கருத்தில் கொள்ள வேண்டும்.

தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து போராடுவதன் மூலம் அவர்களது வாழ்க்கையின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும்படி அரசையும், நிறுவனங்களையும் கட்டாயப்படுத்த முடியும் என்பதற்கு இது ஒரு உதாரணமாக உள்ளது.

http://www.latimes.com/politics/la-me-0327-minimum-wage-20160328-story.html
http://www.motherjones.com/mojo/2016/04/new-york-reaches-deal-raise-minimum-wage-15

Permanent link to this article: http://new-democrats.com/ta/%e0%ae%95%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%83%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%af%e0%af%82%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d/

Leave a Reply

Your email address will not be published.

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
ஐ.டி ஆட்குறைப்புக்கு எதிராக பு.ஜதொ.மு சட்டப் போராட்டம், மக்கள் திரள் பிரச்சாரம்

ஐ.டி ஊழியர்கள் மீதான கார்ப்பரேட் தாக்குதலை எதிர்த்தும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட விப்ரோ, காக்னிசன்ட் மற்றும் பிற நிறுவன ஊழியர்களுக்கு ஆதரவாகவும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி...

உழவர்களின் துயரத்தில் குளிர்காயும் நிதி மூலதனம்

உழவர்களுக்கு பயிர் காப்பீட்டு திட்டத்தை கொண்டு வருவதில் அரசுக்கு என்ன பலன்? இது ஒரு புதிரான கேள்வி, ஏனென்றால் பயிர் காப்பீட்டுத் திட்டம் அரசுக்கு பொருளாதார ரீதியாக...

Close