நவீன அடிமையுகத்தின் உச்சகட்டம் – மனித மூளையை கணினியுடன் இணைக்கும் திட்டம்

நான்காம் தொழில் புரட்சி சமீபத்தில் தொடங்கியுள்ளது. இதன் முக்கிய தொழில்நுட்பங்கள் – பொருட்களின் இணையமும் (IOT), செயற்கை நுண்ணறிவும் (AI) ஆகும். பொருட்களின் இணையம் என்பது நாம் அன்றாடம் பயன்படுத்தும் அனைத்துப் பொருட்களையும் இணையத்துடன் இணைக்கும் ஒரு திட்டமாகும். அந்த பொருட்கள் அனைத்தையும் செயற்கை நுண்ணறிவு என்னும் செயற்கை மென்பொருள் அறிவு கட்டுப்படுத்தும். இதன் மூலம் அந்த பொருட்கள் தன்னிச்சயாக செயல்படும்.

உதாரணமாக, தெருவில் ஓடும் அனைத்து வாகனங்களையும் பொருத்தமான செயற்கை நுண்ணறிவு செயலியுடன் இணைத்து விட்டால், சாலையில் அனைத்து வாகனங்களையும் மனிதத் தலையீடு இல்லாமல் ஒன்றுக்கொன்று தகவல்களை பரிமாறிக்கொண்டு தன்னிச்சையாக நேர்த்தியாக விபத்துக்கள், போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் உலாவ விட முடியும். அதே போல, வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தையும் செயற்கை நுண்ணறிவுடன் இணைப்பதன் மூலம் உலகம் முழுக்க உள்ள பொருட்கள் செயற்கை நுண்ணறிவின் கட்டுப்பட்டுக்குள் வரும்.

IOT-யின் (பொருட்களின் இணையம்) இறுதியான இலக்கு பொருட்களை cloud (மேகக் கணியம்) எனப்படும் இணையத்துடன் இணைப்பதோடு நிற்கவில்லை. மனித மூளையையும் cloud-ல் இணைப்பதே இந்தத் தொழில்நுட்பத்தின் இறுதி இலக்கு.

ஆம், மனித மூளை கணினி வலைப்பின்னலுடன் இணைக்கப் பட்டால், மனிதனின் சிந்தனைகளை செயற்கை நுண்ணறிவு கட்டுபடுத்தும். அந்த செயற்கை நுண்ணறிவை யார் கட்டுப்படுத்துகிறார்களோ அவர்களுக்கு ஒட்டு மொத்த மனித இனமும் அடிமைப் படும் அபாயம் உள்ளது.

சரி, எப்படி மூளை இணையத்துடன் இணைக்கப்படும்? அதற்கு பல தொழில்நுட்பங்கள் உள்ளன. அவற்றில் எளிமையானது, மூளையில், மின்னணு சிப் ஒன்றை பொருத்தி, அது, மூளையில் ஏற்படும் மின்னோட்டங்களை அல்லது மூளை வெளியிடும் கதிர்வீச்சை கிரகித்துகொண்டு அதன்படியான தகவல்களை கணினி வலைப்பின்னலுக்குக் கொண்டு செல்லும் வேலையைச் செய்யும்.
மனித மூளையில் ஏற்படும் மின்னூட்டங்களே, மனிதனின் சிந்தனையையும் மற்றும் செயல்களையும் கட்டுபடுத்துகின்றன. உதாரணத்திற்கு, நீங்கள் கோபப்பட்டு ஒருவரை அடிக்க முயன்றீர்கள் என்றால், அந்த சிந்தனை முதலில் மூளையில் மின் அதிர்வுகளாக தோன்றி பின்னரே உங்கள் சிந்தனையாகவும், செயல்களாகவும் வெளிப்படுகின்றது. அந்த மின் அதிர்வுகளை கட்டுப்படுத்த முடியுமானால் உங்கள் சிந்தனைகள் மற்றும் செயல்களை கட்டுப்படுத்த முடியும். இதை நம்பமுடியவில்லை எனில், சமீபத்தில் வெளியான, மூளையால் கட்டுப்படுத்தப்படும், ஊனமுற்றோருக்கான செயற்கைக் கரங்கள், கால்கள், மனித சிந்தனையால் இயக்கப்படும் குட்டி பறக்கும் ட்ரோன்கள் பற்றி இணையத்தில் ஆய்ந்து பாருங்கள். அவை அனைத்தும், மூளையில் வெளிப்படும் மின்னோட்டங்கள் அல்லது மின்காந்த அலைகளை உபயோகபடுத்தி அதை தரவுகளாக மாற்றி இயங்குவதை புரிந்து கொள்ளலாம்.

இதெல்லாம் சரி, இந்தத் தொழில்நுட்பத்தை மனிதர்கள் எப்படி தங்கள் தலையில் பொருத்திக் கொள்வார்கள்? எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்ய மாட்டார்களா என்று கேட்கிறீர்களா? அதுதான் இல்லை. எதிர்க்க மாட்டார்கள். மாறாக, தாங்களே முன்வந்து தங்கள் தலையில் அந்தத் தொழில்நுட்பத்தை பொருத்திக் கொள்வார்கள். அதுமட்டுமில்லாமல், தங்கள் மூளையை கணினி வலைப்பின்னலில் இணைத்துக்கொள்ள, மாதமாதம் அலைபேசி data recharge செய்வதைப்போல், அந்த தொழில்நுட்ப சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு பணம் கொடுப்பார்கள்!
ஏன் என்றால், செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியானது, மனிதனின் அனைத்து சிறப்புத் திறமைகளையும் விழுங்கி மனிதனை விட லட்சக்கணக்கான மடங்கு அதிக திறம் வாய்ந்ததாக மாறிவிடும். ஆக, பெரு நிறுவனங்களுக்கு, மனிதனை வேலையில் பணியமர்த்தும் தேவை இருக்காது. மனிதர்கள், குறிப்பாக வசதியாக வாழும் ஐ.டி துறையினர் போன்ற மேல் நடுத்தவர்க்கத்தினர் பெரும் அச்சத்துக்குள்ளாவார்கள்.

அப்போது செயற்கை நுண்ணறிவை கட்டுப்படுத்தும் நிறுவனங்கள், “உங்களின் மூளையின் திறனை வேகப்படுத்திக்கொள்ள உங்கள் மூளைக்கு எங்கள் செயற்கை நுண்ணறிவுடனான இணைப்பைப் பெறுங்கள்“ என்று வியாபாரம் செய்யும்.

உண்மையாகவே, AI உடன் இணைக்கப்பட்ட மனிதர்கள் திறம்பட வேகமாக சிந்திப்பதை பார்க்கும் அனைவரும் தங்களது மூளையையும் இணையத்துடன் இணைக்க முன் வருவார்கள். வந்துதான் ஆக வேண்டும். இது மட்டுமில்லாமல், அனைவரின் மூளைகளும், இணையத்தில் இணைவதால், அலைபேசி இல்லாமலே, யாருடன் வேண்டுமானாலும், நமது சிந்தனைகளை பரிமாறிக் கொள்ளலாம். வருங்காலத்தில் தொலை தொடர்பு இவ்வாறுதான் இருக்கும். மனித சிந்தனை வியாபாரமாக்கப்படும். உலகம் அடிமை படுத்தப் படும்!

மீண்டும் மக்களை அடிமை காலத்திற்கு கொண்டுசெல்வதே இன்றைய கார்ப்பரேட் முதலாளித்துவத்தின் விளைவாக இருக்கும். இதற்கான ஆராய்ச்சிகள் ரகசியமாக பல வருடங்களாகவே நடந்து வந்திருந்தாலும், தற்போது இதை வெளிப்படையாகவே ஒரு சில முக்கிய புள்ளிகள் தெரிவிக்கின்றனர். கூகிள் நிறுவனத்தின் பொறியியல் தலைமை நிர்வாகி, ரே குர்ச்வேல் இதை வெளிப்படையாகவே கூறியுள்ளார். அவர், 2030-க்குள் மனித மூளை எந்திரம் மற்றும் உயிரியலின் கலப்பாக இருக்கும் என்றும் அது cloud-ல் இணைக்கப்பட்டிருக்கும் என தெளிவாக கூறியுள்ளார். neuralink எனப்படும் நிறுவனம் முழுமையாக இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது என்று அந்த நிறுவனத்தின் முக்கிய பங்குதாரர் எலோன் மசக் கூறியுள்ளார்.

Reference:

– ஐன்ஸ்டீன் மாணவன்

Permanent link to this article: http://new-democrats.com/ta/%e0%ae%a8%e0%ae%b5%e0%af%80%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
ஆட்குறைப்புக்கு எதிராக NDLF-ல் அணிதிரண்ட விப்ரோ ஊழியர்கள் – தொழிலாளர் கூடம்

“அவர்கள் பிறந்த தேதி என்னவென்று பார்ப்பார்கள். 70-களில் பிறந்தவர் என்றால் உடனடியாக வேண்டாம் என்று சொல்லிவிடுவார்கள்“, என்றார் அந்த ஊழியர்.

ஜி.எஸ்.டி ஓராண்டு நிறைவு : உழைக்கும் வர்க்கத்தைச் சுரண்டும் மோடி அரசின் சாதனை

இந்த அரசும் அதிகாரிகளும் முதலாளித்துவ வர்க்கத்தின் நிர்வாகக் குழுதான் என்பதை பலமுறை நிரூபித்து விட்டார்கள். ஆனால் முதலாளிகளுக்கான உயிர்நீர் தொழிலாளிகளின் உழைப்பில்தான் உருவாகிறது. எனவே, வரி யார்...

Close