அஜித் நடித்த நேர்கொண்டபார்வை. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளிவந்த படம். ஹிந்தியில் பிங்க் என்ற பெயரில் அமிதாப் பச்சன் நடித்த வேடத்தில் அஜித்குமார் தமிழில் நடித்துள்ளார்.
ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளதா?
போனி கபூர் தயாரிப்பில் பிங்க் படம் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான பிரச்சனையை கையாண்ட படம்.. படத்திற்கு மூன்று விதமான பார்வைகள் படத்தின் பரிணாமத்தை விளக்குகிறது.
முதல் பார்வையில் பாதிக்கப்பட்ட பெண்களின் கண்ணோட்டத்திலிருந்து
இரண்டாவது பார்வை நடுநிலையான வழக்கறிஞரான அஜித்குமார் பார்வையிலிருந்து
மூன்றாவது பார்வை குற்றமிழைத்தவர்கள் பார்வையிலிருந்து
முதலில் ஒரு குற்றம் நடக்கிறது. முதல் பார்வையில் இருந்து குற்றம் என்னவென்றால் பாலியல் அத்துமீறல் செய்தார் என்ற காரணத்திற்காக மது பாட்டில் உடைத்து கண்ணாடி குத்தி காயம் ஏற்படுத்துகிறாள் கதையின் நாயகி. ரத்தம் கொட்டுகிறது.
காயம்பட்டவரை மருத்துவமனை அழைத்துச் செல்கிறார்கள். காயம் பட்டவர் குணமானபின் கோபத்தினால் பழிவாங்க துடிக்கிறார். மன்னிப்பு கேட்ட பிறகும் படத்தின் கதாநாயகியை காரில் கடத்தி பாலியல் அத்துமீறலில் ஈடுபடுகின்றனர்.
இந்த பெண்கள் சரி இல்லை என நடத்தை சரியில்லாதவர்கள் என்று குடியிருப்போர்களை காலி செய்ய உரிமையாளரை மிரட்டுகின்றனர். உறவுக்கு மறுத்து குடிபோதையில் ஒரு பெண் அடித்து காயம் ஏற்படுத்தியது, இந்த மாதிரி பெண்ணுக்கு இதுதான் நடக்கும் என்று சொல்லும் பணக்கார ஆணின் ஈகோ .
பாலியல் சீண்டலில் ஈடுபடும் கோபத்திற்கு காரணம் என்னவென்றால் தற்காப்புக்காக புகார் கொடுத்தது. காவல்துறையிடம் சென்று புகார் கொடுப்பாயா என்று கடத்தப்பட்டு மிரட்டுகிறார்.
முக்கிய நிகழ்வாக புகார் கொடுக்கச் செல்லும் போது காவல்துறையினர் நைச்சியமாகப் பேசி நீங்களும் அடித்துள்ளீர்கள் .உங்கள் மீதுதான் வழக்கு தொடுக்க வேண்டும் . புகார் கொடுத்தால் உங்கள் மீது கண்டிப்பாக வழக்கு பாயும். பிறகு என்னாகும்? வாழ்க்கை வீணாகும் அடிக்கடி கோர்ட்டிற்கு வரவேண்டும் . பெண் மது குடிக்கும் பழக்கம் சரியில்லை என்று காவல்துறை அதிகாரியின் விவரமாக பேசி குற்றத்தை கண்டும் காணாமல் ஒதுங்குகிறார்.
புகார் கொடுப்பது எளிதல்ல, விசாரிக்கும் காவல் அதிகாரி சார்பு தன்மையுடன் நடந்து கொண்டது.பாதிக்க பட்ட நபரையே காயம் விளைவித்தல், கொடுங்காயம் விளைவித்தல் என்பதை அடிப்படையாகக் கொண்டு அரெஸ்ட் செய்து மகாபலிபுரம் காவல் நிலைத்தில் வைக்கின்றனர்.
நண்பர்கள் மற்றும் பெற்றோரை, பார்க்க வருபவர்களை காவல் நிலையத்தில் காக்க வைக்கின்றனர். Bailable offence, non bailable offence என்று குழப்ப வழக்கறிஞரை எதிர்தரப்பு விலைக்கு வாங்கிக் கொள்கிறது.
Non bailable offence என்று வழக்கறிஞர் திங்கட்கிழமை தான் கிடைக்கும் என்று சொல்கிறார். வெள்ளிக்கிழமை கைது. பெண்கள் கூட்டத்தால் தனியாக ஒன்றும் செய்யமுடியாது என்ற நிதர்சனமான உண்மையை காட்டுகிறார்கள்.
லஞ்சத்துக்கு விலை போக காவல்துறை பழிவாங்க ஆரம்பித்தால் என்று சுற்றுப்புற குடியிருப்போர்கள் எல்லோரும் கூடியிருக்க மத்தியில், கைது செய்து அசிங்கப்படுத்துவது என்பதை காட்சியாக எடுத்துள்ளனர்.
உள்ளே வந்து பேசலாமே என்பது மறுக்கப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் காவல்நிலையம் வந்தால் மணிக்கணக்காக காத்திருக்க வேண்டும் என்ற உண்மையை கொஞ்சம் கொஞ்சமாக வெளிக் கொண்டு வந்திருப்பார். பாதிக்கப்பட்ட மூன்று பெண்களுக்கும் மூன்று விதமான சமுதாய அமைப்பில் இருந்து வெளிவந்து இருப்பர்.
சென்னையில் இருக்கும் பெண், அலுவலகத்திற்கு மிக அருகில் பெண்களுடன் சேர்ந்து குடியிருப்பது என்று முடிவு செய்து இருப்பார். மற்றொரு பெண் IT சார்ந்த துறையில் வேலை செய்துகொண்டு தனது ஸ்பெஷல் child சகோதரனை மருத்துவ உதவிக்கு சேர்த்து சம்பாதித்து கொண்டிருப்பார்.
இன்னொரு மேகாலயாவில் இருந்து வந்த பெண் சலூனில் வேலை செய்துகொண்டு மியூசிக் குரூப்பில் வேலை செய்துகொண்டு இருப்பார்.
இந்தப் பெண்களுக்கு இருக்கும் பொதுவான குணம், மியூசிக் ட்ரூப் கச்சேரி செய்து சம்பாதிப்பது சந்தோஷமாக இருப்பது, சுயமரியாதையுடன் தனித்து வாழ்வது. சுகந்திரமாக இருப்பது.
ஒரு பிரச்சனை ஏற்பட்டவுடன் கூட்டாக சேர்ந்து மன்னிப்பு கேட்டு பிரச்சனையை தீர்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்கின்றனர். மன்னிப்புக் கேட்கும்போது அவமானப்படுத்தப்பட்டு அசிங்க படுகின்றனர்.
தொடர்ச்சியாக செல்போன் மற்றும் வாட்ஸ் அப் மூலம் மிரட்டல். சமாதான தீர்வை நோக்கிப் போகும்போது பிரச்சனை ஓயவில்லை.
காவல்துறை நீங்களே பிரச்சினையை வரவு எடுத்துக்கொண்டீர்கள், குடித்து கும்மாளமிட ஆசைப்படுகிறீர்கள் உங்களுக்கு இந்த வழக்கு தேவையா? என்று புத்திசாலித்தனமாக அறிவுரை செய்கிறது. பக்கத்தில் இருக்கும் கைதியை குரல் உயர்த்தி பேசி திட்டி தனது ஆளுமையை வெளிப்படுத்துகிறது காவல் துறை.
இந்த சூழ்நிலையில் முக்கிய கதாநாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத் கடத்தப்படுகிறார். காரில் நான்கு பேர் மத்தியில் மானபங்கப் படுத்தப் பட்டு மிரட்டப்பட்டு திருப்பி அனுப்பப் படுகிறார். பாதிக்கப்பட்ட போது துடிக்கிறார். தவறு செய்த நபர்கள் மீது புகார் கொடுக்கிறார்.
மற்றொரு நபரை தவறாக விபச்சாரம் செய்யும் நபராக சித்தரிக்கப்பட்டு அசிங்கப்படுத்தபடுகிறார். அலுவலகத்தில் நீக்கப்படுகிறார். பெண்களுக்கு எதிரான குற்றத்துக்கு எதிராக போராடாமல் நீங்களே விலகி விடுங்கள் என்று கைகள் கழுவிடுகிறது நிறுவனம்.
கம்பெனி கையகப்படுத்தல் நடவடிக்கையின் போது இதைப் போன்ற ஒரு அவமானம் தேவை இல்லை என்று முடிவு செய்து கட்டாய பணி நீக்கம் செய்கிறது ஐடி துறை நிறுவனம்.
காவல்துறையை பாதிக்கப்பட்ட பெண்ணின் மீது ஏற்கனவே கொலை முயற்சி என்று புகார் கொடுத்ததாக காவல்துறை கைது செய்து வெள்ளிக்கிழமை கைது செய்து சிறையில் அடைக்கிறது. நண்பர்களை, பெற்றோர்களையும் அலைகழிக்கிறது.
காவல்துறையில் இருக்கும் சகிப்புத்தன்மையும், வக்கீல்கள் எதிரிகளுடன் சோரம் போகும் தன்மையும் அவர்களே படித்த பெண்களையே என்னிடம் வராதீர்கள் என்று சொல்லும் வக்கீலின் மனோபாவமும், கேள்வி கேட்டால் பதில் சொல்லாத வக்கீல்கள் முக்கியத் தன்மையையும் படத்தில் காட்டப்பட்டுள்ளது. கேள்வி கேட்டால் காவல்துறை அதிகாரி எரிந்து விழுவார் என்பது எவ்வளவு சர்வசாதாரணம் என்பது காட்டப்படுகிறது
இரண்டாம் பார்வை
வக்கீலாக அஜித்குமார் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தன்னால் ஏதேனும் செய்ய முடியுமா? என்று பார்க்கும் பார்வை. தனக்கு இருக்கும் நோயால் பாதிக்கப் பட்ட பெண்களுக்கு எதுவும் செய்ய முடியாத நிலையில் அட்வைஸ் செய்கிறார்.
பெண்ணுக்கும் குழந்தைக்கும் Emergency பெயில் கிடைக்கும் அப்ளை செய்யுங்கள் என்று ஆலோசானை செய்கிறார். மருந்து சாப்பிட்டால் நிகழ்வுகளை உன்னிப்பாக கவனிக்க முடியாது என்று மருந்துகளை வேண்டாம் என்று சொல்லிவிட்டு பாதிக்கப்பட்ட பெண்களுக்காக போராடும் அரியவகை வக்கீல் கதாபாத்திரம்.
தனது குடும்பத்தை இழந்த தான் சோகத்தில் இருந்தாலும் தன்னால் முடிந்தவரை பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவலாம் என்பது பாத்திரம்.. முக்கியமாக சில தகவல்களை சொல்வார்.
1) ஒரு பெண் விடுதியில் உள்ள வேற்று ஆண் அறையில் சென்று ஒன்றாக மது அருந்தினால் அவள் எல்லாவற்றுக்கும் தயார் என்பது அர்த்தம்.
2) ஒரு ஹோட்டலில் ஆண் இருக்கும் அறையில் ஒரு பெண் குளியலறையை பயன்படுத்தினால் அந்தப் பெண் உடலுறவுக்கு தயார் என்று அர்த்தம்.
3) ஒரு அன்னிய ஆடவன் ஒருவனை தொட்டு பேசினால் அவள் எதர்க்கும் தயாரான பெண் என்று அர்த்தம்.
4) குடித்து விட்டு ஒரு பெண் பிளேபாய் ஜோக் ஆண்கள் கூட்டத்தில் சொன்னால் சகஜமாக எடுத்துக்கொள்ளும் பெண் என்று எண்ணப்படுவாள்.
5) ஒரு பெண் ஆணிடம் உறவு கொண்ட பிறகு அந்த ஆணின் நண்பர்களை சென்று சந்தித்தால் அவள் எதற்கும் தயாரான பெண் என்று எண்ண படுவாள்.
உடலுறவுக்கு சம்மதம் இல்லை என்றால் அது பாலியல் குற்றம் முக்கியமாக இல்லை என்றால் இல்லை. ஆம் என்றால் ஆமாம். வசந்த மாளிகை படத்தில் சிவாஜிகணேசன் சொல்லும் வசனம்
சரி என்றால் யாராயிருந்தாலும் விடக்கூடாது. வேண்டாம் என்றால் விலைமாது என்றாலும் தொடக்கூடாது.
அமிதாப் பச்சன் பிங்க் படத்தில் சொல்வதும் அதை தான். அஜித் குமார் சொல்வதும் அதை தான்.
வேண்டாமென்றால் கட்டிய மனைவியாக இருந்தாலும் தொடக்கூடாது ஆனால் அது மீறீ தொட்டால் அது பாலியல் குற்றம் என்றே பார்க்கப்படும்
மூன்றாவது பார்வையாக குற்றம் செய்த ஆண்கள் என்ற பார்வையில் பார்க்கலாம். பெண் பணம் பெற்ற பிறகு, ஒரு விபச்சாரி விபச்சாரம் செய்ய மாட்டேன் என்றால் சட்ட திருத்தத்திற்கு இவர்கள் போராட வேண்டுமா?
விபச்சார சேவை பெறும் உரிமை சட்டம் கேட்பது தங்கள் உரிமை என்று ஆண்கள் சங்கமும், போலி பெண்ணிய அமைப்புக்களும் யோசிக்கலாம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடாமல் விபச்சாரம் செய்யும் பெண்களை நாடும் நபர்களை யோக்கியர்கள் என்று சொல்ல வேண்டாம்.
பணத்திற்கு விலை போகும் ஆல்பா பெண்கள் சொல்லுவது போல இந்த பணம் கொடுத்து நான் விபச்சாரியிடம் போவேன் என்று சொல்வது ஆல்பா ஆண்கள் உரிமை என்று சொல்லப்படுகிறது.
கதையில் வரும் பெண்களில் பெமி என்ற பெண் தன்னைவிட 10, 15 வயது மூத்த ஆண் ஒருவருடன் உறவில் இருக்கிறார். பிரச்சனை என்று வந்தவுடன் தான் சார்ந்த குடும்பத்தை இதில் இழுக்க வேண்டாம் என்று அவர் ஒதுங்கிக் கொள்கிறார்.
வில்லனாக வருபவர்கள் தாங்கள் அடிபட்டவுடன், அடியாட்களை வைத்துக்கொண்டு அந்த பெண்ணை மிரட்டுகிறார்கள். ஆனாலும் படத்தின் வில்லன் வில்லத்தனமாக செய்ய வேண்டும் என்ற காரணத்திற்காக ஓடும் காரில் பெண்ணை மானபங்கப் படுத்துகிறார்.
மொத்தத்தில் இந்த படம் என்ன சொல்ல வைக்கிறது என்றால். பெண் விபச்சாரத்தில் ஈடுபடலாம். ரேட் பேசிக்கொண்டு ரிசார்ட்டில் விபச்சாரத்தில் ஈடுபடலாம். உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் ஆணிடம் தெளிவாக தெரிவிக்கவும். இல்லையெனில் பிரச்சனை விபரீதமாகும் என்பது alpha male or alpha female பெண்களுக்கு எச்சரிக்கை.
கண்டிப்பாக அஜித் குமார் போன்ற நேர்மையான வக்கீல்கள் தேசத்தில் அரிது. பெண்ணை போகப் பொருளாக பிரச்சினையை வைத்துக் கொண்டு காசு பார்க்கலாம் என்று நினைக்கும் காவல்துறை இருக்கும் ஊரில் நல்ல வழக்கறிஞர் மலிவு விலையில் கிடைப்பது அரிது.
Settlement பேசி விலகிக் கொள்வது சரி. காசு கொடுத்து உறவு வைத்துக் கொள்ளுங்கள் (GST வரியுடன் விபச்சார பணத்திற்கு வருமான வரி விலக்கு கோரலாம்). பிடித்தால் உறவு வைத்துக் கொள்ளுங்கள். பிடிக்கவில்லை என்றால் சொல்லி விட்டு ஒதுங்கி விடுங்கள்.
பிடிக்காத பெண்ணுடன் உடல் உறவு வைக்க விருப்பமில்லை என்றால் விலகி விடுங்கள் என்று சொல்வதை இனிப்பு விஷத்தை சமுதாயத்திற்கு தூவி உள்ளார்கள்.
சமூக விழிப்புணர்ச்சி என்பதை இந்த படம் திட்டமிட்டு கலாச்சார சீரழிவு என்ற பரிமாணத்தில் இந்த படம் உச்ச நடிகர்களை வைத்து சமுதாயத்தை சீரழிக்கும் விதமாக வெளிவந்து உள்ளது.
அமிதாப்பச்சன் மூலம் இந்தியாவின் ஹிந்தி பேசும் மாநிலங்களுக்கும், அஜீத் குமாரை வைத்து தமிழ்நாட்டிற்கும் விபச்சாரியாக இருந்தாலும் தொடாதீர்கள் என்ற அரிய கருத்தை சமுதாய சீர்திருத்தம் என்ற பெயரில் இந்த படத்தில் மெசேஜாக சொல்லியுள்ளார்கள்.
தவறு செய்யும் ஆண்களும் பெண்களும் தெளிவாக தவறு செய்யுங்கள் இல்லை அலைந்து பாதிக்கப்படுகிறார்கள் என்று சமுதாயத்தின் பணக்கார சிறுபான்மை சமூகத்திற்கு ஆல்பா ஆண்களுக்கும் ஆல்பா பெண்களுக்கும் புத்தி சொல்லியுள்ளார்கள்.
அடித்தட்டு மக்கள் பலருக்கு இந்த படம் பைவ் ஸ்டார் ஹோட்டலில் நடக்கும் மேல்தட்டு கதை என்பதால் புரிந்து கொள்ள கஷ்டமாக உள்ளது. அஜித் குமார் போன்ற நடிகர்கள் கேடுகெட்ட கதைக்களத்தை தேர்தெடுத்து நடித்தது வருத்தமாகத்தான் உள்ளது.
2005 “ஜி” படத்தில் இளைஞருக்கு அரசியல் வேண்டாம் என்று சொல்லப்பட்ட கதை போல, மாணவர்கள் அரசியலில் சேர்ந்தால் வீணாகப் போவார்கள் என்று சொன்னது போல இந்த நேர்கொண்ட பார்வை படத்தில் நட்சத்திர விடுதி போன்ற இடங்களில் விபச்சாரத்தில் ஈடு படாதீர்கள், குடித்து விட்டு வன்முறையில் ஈடுபடாதீர்கள், விபச்சாரத்தில் வன்முறை வேண்டாம் என்று மேல்தட்டு வர்க்க நியாயங்களை பேசுகிறார்கள் .
படத்தை பார்த்து விட்டு பெண் எவரும் உண்மையில் பாதிக்கப்பட்டாலும் புகார் கொடுக்க யோசிப்பார்கள். காரணம், எவ்வளவு கஷ்டங்கள் தாங்க வேண்டும்? அசிங்கப்பட அவமானப்பட வேண்டும்?
வக்கீல்கள் ஏமாற்றம், பெண் போலீஸ் விசாரணை வலிகள், கோர்ட் ரூமில் ஏற்படும் ட்ரயல் கேள்விகள் உருவாக்கும் வலிகள் என்ற சிந்தனையே பெண்களை குற்றத்துக்கு எதிராக செயல்பட தயங்க வைக்கும். இந்த படத்தைதான் பெண்ணியம் கொண்டாடுகிறார்களா ?
தங்கள் வீடுகளில் விபச்சாரத்தில் ஈடுபடலாம் ஹோட்டலில் ஈடுபட வேண்டாம் என்று சொல்லாமல் சொல்லி உள்ளது போல் உள்ளது…
பெரும்பான்மையான பெண்களின் சொத்துரிமை, வேலைவாய்ப்பில் உரிமை, கௌரவக்கொலை, பெண்ணடிமைத்தனம், அரசியலில் பெண்களுக்கு உரிமை பிரச்சினைகளை பேசாமல் மேல்தட்டு வர்க்க ஆண்களுடன் உறவாடும் தவறு செய்யும் சுகந்திரமான பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் என்று சொல்வதனால் தமிழ்நாட்டு மக்களுக்கு அந்நியப்பட்ட படமாக இது தெரிகிறது..
சமுதாய சீரழிவிற்கு இது போன்ற படங்கள் பெண்ணியம் அழிவு பாதைக்கு சென்று கொண்டிருப்பதை கண்கூடாகக் காணமுடிகிறது. இந்த படத்தின் மூலம் ஐடி துறையை சேர்ந்த பெண்கள் சுதந்திரம் என்ற பெயரில் குடிப்பது, கூத்தடிப்பது சகஜம் என்ற ஒரு தோற்றம் உருவாக்கப்படுகிறது.
இன்போசிஸ் பானீஷ் மூர்த்தி விவகாரம் 15 கோடி செட்டில் மென்டில் முடிந்தது பிறகு IGATE கம்பெனியிலும் CEO பதவி விலக நேர்ந்தது. 27 வயது பெண்ணுடன் கெவின் பேக்கர் என்னும் Fidelity CEO பாலியல் சீண்டல் என்று 2017ல் பதவி விலகினார் .
மொத்தத்தில் நேர்கொண்ட பார்வை படம் நெறி தவறிய பார்வையில்
— காசிராஜன்