சங்க உறுப்பினர்களே, நண்பர்களே,
நமது சங்கத்தின் மாதாந்திர கூட்டம் வரும் சனிக்கிழமை 17.02.2018 அன்று மாலை 3 மணியளவில் நடைபெறுகின்றது.
இன்றைய சூழலில் நமது துறையில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாவது என்பது மிகவும் குறைந்துள்ளது. இருக்கும் வேலையைத் தக்கவைத்துக் கொள்ளவே நாம் போராட வேண்டியுள்ளது. நமது வேலை எப்போது வேண்டுமானாலும் பறிபோகலாம் என்ற ஆபத்து நமது தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக நம்மை பயமுறுத்திக் கொண்டே இருக்கிறது.
வேலையைத் தக்க வைக்க கடினமாக உழைக்கவும், அதிக நேரம் வேலை செய்யவும், புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்ளவும் பலர் அறிவுரைகளை அள்ளி வழங்குகிறார்கள்.
ஆனால் நாம் என்னதான் கடினமாக உழைத்தாலும், அதிக நேரம் அலுவலகத்திற்குள்ளேயே செலவிட்டாலும், புதிய புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக் கொண்டாலும் நாம் வேலை செய்யும் நிறுவனம் நம்மை வெளியேற்றுவது என முடிவு செய்துவிட்டால் நாம் உடனடியாக வெளியே தூக்கி எறியப்படுகிறோம்.
வெள்ளைக்காரன் ஒரு நாயைக் கொன்றாலும் அதைச் சட்டப்படிதான் கொல்வான் என்பதைப் போல, நம்மை வெளியேற்றுவதை நியாப்படுத்துவதற்கு, அதனை நம்மையே ஏற்றுக்கொள்ளச் செய்வதற்கு நமது நிறுவனங்கள் வைத்துள்ள வழி முறைதான் அப்ரைசல்.
நம்மில் வேலை இழந்தவர்கள், காத்திருப்போர் பட்டியலில் (bench) இருப்பவர்கள் அனைவரும் இந்த நிலைக்கு வர இந்த அப்ரைசல் முறைதான் காரணமாக இருக்கிறது.
எனவே நாம் அப்ரைசல் முறை குறித்துத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியமாகிறது. அதனடிப்படையில் இது குறித்து வரும் சங்கக் கூட்டத்தில் நாம் பேசவிருக்கிறோம்.
மேலும் ஜனவரி மாத சங்க நடவடிக்கைகள் குறித்தும், அடுத்த மாதம் நாம் செய்யவிருப்பது குறித்தும் விவாதிக்கப் போகிறோம்.
அனைவரும் தவறாமல் வந்து கலந்து கொள்ளுங்கள்.
இங்கணம்,
சுகேந்திரன்
செயலாளர்
பு.ஜ.தொ.மு. ஐ.டி. ஊழியர் பிரிவு.