பி.பி.ஓ ஆட்டமேசன், செலவுக் குறைப்பு – ஊழியர்களுக்கு என்ன கதி?

பி.பி.ஓ நிறுவனங்களும் அவற்றின் வாடிக்கையாளர்களும் மேலும் மேலும் செலவுக் குறைப்பில் ஈடுபட்டுள்ளனர். அதன் பொருள் ஊழியர்களுக்கு மேலும் மேலும் அதிக வேலைப் பளு, மேலும் மேலும் குறைவான வேலை வாய்ப்புகள், சம்பள வெட்டு, வசதிகள் குறைப்பு.

“நமது வாடிக்கையாளர்கள் 10-15%-க்கும் அதிகமான செலவுக் குறைப்பையும், திறன் அதிகரிப்பையும் கோருகின்றனர். அதற்கு விடையாக நாம் தலையீடு இல்லாத மென்பொருள் நுட்பத்தின் மூலம் பணி நடைமுறையில் திறனை அதிகப்படுத்தும் ரோபோடிக்ஸ்-ஐ பயன்படுத்த விரும்புகிறோம்.”

“பி.பி.ஓ 1.0 ஆஃப்-ஷோரிங் மூலம் சம்பள ஏற்றத் தாழ்வை பயன்படுத்துவதால் கிடைக்கும் பலன்கள் தொடர்பானது. பி.பி.ஓ 2.0-ல் பணிமுறையை ஒழுங்குபடுத்தல், புதிய உத்திகள், புதிய பிசினஸ் மாடல் மூலம் வாய்ப்புகளை பெருக்குவதுதொடர்பானது. இப்போது பி.பி.ஓ 3.0 என்பது தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செலவுகளையும் உற்பத்தித் திறனையும் அதிகரிப்பதைப் பற்றியது.”

“செலவுக் குறைப்பு, சேவை அதிகரிப்பு தொடர்பான வாடிக்கையாளர்களின் புதிய தேவைகளை எப்படி நம்மால் நிறைவேற்ற முடியும் என்று பார்க்கும் போது நமக்குக் கிடைத்ததுதான் “தானியக்கம் (ஆட்டோமேஷன்)”. தானியக்கம் என்பது புதிதல்ல, ஏற்கனவே சில காலமாகவே நடந்து வருவதுதான். ஆனால், அதை தீவிரப்படுத்துவதுதான் மீண்டும் தொழிலில் உறுதியாவதற்கான வழி.”

“ஒரு ரோபோவை மேசையின் மீது வைத்து, இப்போது பணியாற்றும் ஊழியர்களின் எளிமையான, திரும்பத் திரும்ப செய்ய வேண்டிய பணிகளை செய்யும்படி அதற்கு உத்தரவிடுவதுதான் நமக்கு மிக உகந்ததாக இருக்கும்.”. ஆனால், “சில விஷயங்களை முறையான வரிசைப்படி செய்வித்து ரோபோக்களுக்கு வழி வகுப்பதுதான் இப்போதையே தேவை”

“ரோபோடிக்ஸ் தொடர்பான ஒரு முழுமையான அணுகுமுறையின் மூலம்தான் நமக்கு உகந்த பலனை அறுவடை செய்ய முடியும். அதற்கு தேவையானவை 1. மனிதத் தலையீட்டை முடிந்த அளவு குறைக்கும் உயர்நிலை தானியக்க நுட்ப மேடை 2. …..”

மேலே தந்திருக்கும் மேற்கோள்கள் பி.பி.ஓ துறையில் தானியக்கத்தை (ஆட்டமேஷன்) செயல்படுத்துவது பற்றி ciol.com என்ற தளத்தில் வெளியான கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்டவை. பி.பி.ஓ ஊழியர்களும், இந்தத் துறையில் வேலை தேட விரும்பும் பொறியியல் பட்டதாரிகளும் இதிலிருந்து தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

To read the full article http://www.ciol.com/when-soft-robots-are-at-work-in-the-bpos/

Permanent link to this article: http://new-democrats.com/ta/%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%93-%e0%ae%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%87%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%af%8d/

Leave a Reply

Your email address will not be published.

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
கொலை விளையும் நிலம் – ஆவணப்படம் அறிமுகம்

வறட்சியால் அழியும் போதும், அதிகமாக விளையும்போதும் அரசு விவசாயிகளுக்கு ஆதரவாக இல்லை. வறட்சி குறித்த ஆய்வறிக்கை தயார் செய்த ராஜீவ் சஞ்சன் என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியும், முதல்வரும்...

மாருதி தொழிலாளர்களை பழிவாங்கும் கார்ப்பரேட்டுகளின் அரசு

‘அமைதிமுறை’யில் எதிர்ப்பு தெரிவிப்பதுகூட அங்கு தடை செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர் தலைவர்களது நெற்றியில் துப்பாக்கியை வைத்து பகிரங்கமாக மிரட்டுகிறார், எஸ்.பி. இதுதான் அரசு எந்திரம் கூறும் நடுநிலையின் இலட்சணம்.

Close