உலகைக் குலுக்கிய 10 நாட்கள் – மகத்தான ரசியப் புரட்சி

100 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் உலகெங்கிலும் உள்ள சுரண்டல்காரர்களின் மோசமான கொடுங்கனவு நனவானது; இன்றுவரை அன்று நடந்த நிகழ்வை அவர்களால் புரிந்து கொள்ளவும் முடியவில்லை; ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை. ஆனால், உலகின் உழைக்கும் மக்களுக்கோ அந்த நாள் மீண்டும் மீண்டும் நினைவு கூர்ந்து கொண்டாட வேண்டிய நாள்; அதன் சாதனைகளை மீட்டெடுக்க உறுதி பூண வேண்டிய நாள்.

உழைக்கும் மக்களின் படைப்பாற்றல் கட்டவிழ்த்து விடப்பட்டது.

ஆம், 1917 நவம்பர் மாதம் 7-ம் தேதி, போல்ஷ்விக் கம்யூனிஸ்ட் கட்சியின் ரசிய மக்கள் ஜாரிச எதேச்சதிகாரத்திலிருந்தும், முதலாளித்துவ கூலி அடிமைத்தனத்திலிருந்தும், விவசாயச் சுரண்டலிலிருந்தும், தேசிய இன அடிமைத்தனத்திலிருந்தும் தம்மை விடுவித்துக் கொண்டார்கள்.

ரசியப் புரட்சி உலக வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தை தொடங்கி வைத்தது. அதற்குப் பிறகு எந்த நாட்டிலும் யாரும் உலக மக்கள் அனைவருக்கும் உணவை உற்பத்தி செய்யும் நவீன தொழில்நுட்பத்த்தை மனித குலத்திற்கு சேவை செய்ய வைக்கும் உழைக்கும் வர்க்கத்தின் கோரிக்கைகளை மேல் அலட்சியப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

ரசிய சோசலிசப் புரட்சி இந்தியா, சீனா போன்ற முதலாளித்துவ காலனிய அடிமை நாடுகளில் விடுதலை போராட்டங்களுக்கு புத்துயிர் ஊட்டியது. முதலாளித்துவத்தின் ‘சாதனை’யான நாஜி ஜெர்மனி ஐரோப்பிய கண்டத்தை விழுங்கி, இங்கிலாந்தை அச்சுறுத்திக் கொண்டிருந்த போது, அதற்கு சோவியத் மக்களால் மரண அடி கொடுக்கப்பட்டது.

முதலாளித்துவத்தின் கீழ் தொழில்நுட்ப முன்னேற்றமும் தானியக்கமும் உழைக்கும் மக்களின் வேலைச் சுமையை குறைக்க பயன்படுத்தப்படுவதில்லை; மாறாக, பெரும் எண்ணிக்கையில் வேலை இழப்பு, வேலையில் இருப்பவர்களுக்கு அதிகரித்த சுமை. வேலையிலிருந்து நீக்குவது, ஒரு சிறு கூட்டத்துக்கு ஆடம்பர வாழ்க்கை, உழைப்பின் செல்வங்களை பயன்படுத்தி உழைக்கும் வர்க்கத்தின் மீதான ஒடுக்குமுறையை மேலும் அதிகரிப்பது என பயன்படுத்தப்படுகிறது.

முதலாளித்துவத்தின் இந்த நச்சுச் சுழல் மகத்தான ரசியப் புரட்சியில் உடைக்கப்பட்டது. தொழிற்சாலைகளையும், எந்திரங்களையும் தொழில்நுட்பத்தையும் தனியார் முதலாளிகளும், முதலாளித்துவ வர்க்கமும் கட்டுப்படுத்துவதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

முதலாளித்துவத்தின் ‘சாதனை’யான நாஜி ஜெர்மனிக்கு சோவியத் மக்களால் மரண அடி கொடுக்கப்பட்டது.

அதன் பிறகு,

உழைப்பின் பலன்கள் உழைக்கும் மக்களுக்கு கூட்டு உடைமையாக இருந்தன. முடிவுகள் சமூகத்தின் நலனை மனதில் கொண்டு முடிவுகள் எடுக்கப்பட்டன. உழைக்கும் வர்க்கம் முதலாளித்துவ வர்க்கத்தினால் சுரண்டப்பட்டு அதன் தயவில் வாழ்வது ஒழித்துக் கட்டப்பட்டது.

உழைக்கும் மக்களின் படைப்பாற்றல் கட்டவிழ்த்து விடப்பட்டது. மருத்துவம், கல்வி, விண்வெளி துறை ஆகியவற்றில் பிரமிக்கத்தக்க சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. கல்வி, உணவு, இருப்பிடம், மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகள் அனைவருக்கும் உத்தரவாதப்படுத்தப்பட்டன.

இருப்பினும், தம்மைத் தாமே ஆளும் வர்க்கமாக அணி வகுத்துக் கொள்ளும் உழைக்கும் வர்க்கத்தின் முயற்சி தற்காலிக பின்னடைவை சந்தித்து. இந்த உலகை இயக்கும் வர்க்கம் இந்த பின்னடைவில் இருந்து பாடங்களை கற்றுக் கொண்டு எதிர்கால வரலாற்றை படைக்கத் தயாராகிறது.

முதலாளித்துவமோ அதன் மரணப் படுக்கையில் உள்ளது.

அமெரிக்காவில் டிரம்பும், இந்தியாவில் மோடியும், ஜப்பானில் அபேயும், துருக்கியில் எர்டோகனும் முதலாளித்துவத்தின் அவலட்சணத்தை முழு உலகுக்கும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

அமெரிக்காவில் நிகழும் துப்பாக்கிச் சூட்டு கொலைகள், உலகெங்கும் அமெரிக்கா விடாமல் தொடருப் போர்கள், கார்ப்பரேட்+அரசு ஊழல், விவசாயிகளின் துயரம், தொழிலாளர்களின் அவலம் என முதலாளித்துவ அமைப்பு காலாவதியாகி விட்டது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

உலக மக்களையும், இந்த பூமிப்பந்தையும் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கும் இந்தக் கொடூர மிருகத்துக்கு ஒரு முடிவு கட்டி புதிய ஜனநாயக சமூக அமைப்பை படைப்பது நமது கடமை.

சென்னை மழையின் காரணமாக இன்று (நவம்பர் 7, 2017) மாலை ஒய்.எம்.சி.ஏ அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டம் தள்ளி வைக்கப்படுகிறது. புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

– மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.

அக்டோபர் : உலகைக் குலுக்கிய பத்து நாட்கள் – செர்ஜி ஐசன்ஸ்டைன் திரைப்படத்தை பாருங்கள்

https://www.youtube.com/watch?v=k62eaN9-TLY

Permanent link to this article: http://new-democrats.com/ta/10-days-that-shook-the-world-the-mighty-russian-revolution-ta/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
புதிய தொழிலாளி செப்டம்பர் 2018 பி.டி.எஃப் டவுன்லோட்

பெட்ரோல் - டீசல் விலை உயர்வு, மருத்துவக் காப்பீடு, சாலையோர வணிகர்கள் இன்னும் பல கட்டுரைகளுடன்

இந்திய ஜனநாயகம் பெருமையுடன் படைத்து வழங்கும் இந்துத்துவ பாசிசம் – அருந்ததி ராய்

நாமும் நமது சக மனிதர்களின் பார்வையிலிருக்கும் அருவருப்பை அடையாளம் கண்டுகொள்ள கற்றுக் கொள்வோம். எதைச் செய்தோமோ, எதைச் செய்யாமல் விட்டோமோ, எதை நடக்கவிட்டோமோ அதன் அவமானத்தினால் நாமும்...

Close