போராடாமல் எஸ்கேப் ஆகிறவர்களின் 12 சாக்குகள்

(இணையத்தில் கண்டது)

ஏகத்தாளமான கேள்விகளுக்கு ஏகாந்தமான பதில்கள்

ஜாக்டோ – ஜியா விற்காக மட்டும் அல்ல காவலர்களுக்கு மட்டும் அல்ல ஐ.டி ஊழியர்களுக்கும் சேர்த்துத்தான்

கே: என் வீட்டில் நான் ஒருத்தன் தான் சம்பாதிக்கிறேன் அதனால் 22.08.17 ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் எப்படி கலந்து கொள்வது?
ப: நீங்கள் ஒருத்தர் மட்டும் சம்பாதிக்க நாங்கள் 12 லட்சம் அரசூழியர் ஆசிரியர்கள் உங்களுக்காக நடுத்தெருவில் நடுரோட்டில் ஒரு நாள் ஊதியம் விட்டு கொடுத்து போராடனுமா?

கே: நான் குழந்தை குட்டிக்காரன். என் வேலை போயிட்ட என் குடும்ப நிலை என்னவாகும்?
ப: அப்போ வேலை நிறுத்தத்தில் பங்கு பெறுவோர் அனைவரும் துறவிகளா? இல்ல அவர்களின் இல்லதாரையும் மக்களையும் நாட்டுகே அர்ப்பணித்து விட்டார்களா? இல்ல அவர்கள் குடும்பம் எப்படி போனால் எனக்கென்ன என்கிறீர்களா?

கே: என் கணவர்/மனைவி போராட்டத்தில் கலந்து கொண்டால் வீட்டிற்கே வராதே என்கிறார். நான் என்ன செய்வது?
ப : சுதந்திர போராட்டத்தில் அன்னியர்களை எதிர்க்க வீட்டுக்கு ஒரு நபரை அனுப்பி வைத்த வீரமுள்ள மானமுள்ள நாட்டில் இந்த கேள்வி கேலிக் கூத்தாக உள்ளது.

கே: போராட்டத்தில் கலந்து கொண்டு எனக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் எந்த சங்கம் என்னை காப்பாற்றும்? எந்த சங்கமும் என்னை காப்பாற்றாது ஆகவே நான் எப்படி கலந்து கொள்வது?
ப: உங்களுக்கு போராட்டமும் தெரியவில்லை போராட்டத்தின் வரலாறும் தெரியவில்லை. உங்கள் பயத்தை பச்சை குழந்தையிடம் கூறுங்கள்.

கே: எனக்கு ஏற்கனவே போதுமான அளவு சம்பளமும் பென்சனும் (GPF) உள்ளது. நான் ஏன் வர வேண்டும்?
ப : நீங்கள் இன்று வாங்கும் சம்பளமும் பென்சனும் (GPF) நேரடியாக உங்கள் வீட்டு கூரை பிய்த்து யாரும் போடவில்லை. பல தொழிற்சங்கங்களின் வேர்வை மற்றும் உழைப்பின் கூலியையே பெறுகிறீர்கள்.

கே: உங்களுக்கு எவ்வளவு சம்பளம் வாங்கினாலும் எப்போ பார் சம்பள உயர்வு கேட்கீறீர்கள். இது நியாமா?
ப : ஐயா திருப்(ப)தி அவர்களே மாறி வரும் ஏறி வரும் விலைவாசிக்கு ஏற்றாற்போல் சீரான இடைவெளியில் சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்று தொழிலாளர் அடிப்படை சட்டம் கூறுகிறது.

கே: எல்லோருக்கும் ஒய்வூதியம் வழங்குவது அரசால் இயலாது அது அரசிற்கு பெரும் நிதிச்சுமையை தரும் ஆகவே நான் எப்படி வருவது?
ப: இயலாத அரசால் எங்களுக்கு மட்டுமில்லை மற்றவர்களுக்கும் எங்ஙனம் சேவை செய்ய முடியும் அரசூழியர் ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது செலவாக பார்ப்பது நிதிச்சுமை என்று கூறுவது பிரச்சனையை தீர்க்க முடியாத கையாளாகாதனத்தை காட்டுகிறது.

கே: இந்த அரசின் தற்போதைய நிலையை உணர்ந்தும் போராட்டம் ஆர்ப்பாட்டம் நடத்தினால் எதுவும் நடக்காது எந்த பயனும் இல்லை?
ப: ஐயா தீர்க்கதரசி அவர்களே அடுத்து வரும் அரசு இந்த ஆட்சியில் போராடாமல் நாங்கள் சோம்பேறியாய் தூங்கிக் கொண்டிருந்தோம் என்றல்லவா நினைப்பார்கள். ஆக அனைத்து வகை மக்களுக்கும் உணர்த்தவே இவ்வறப்போராட்டம்.

கே: வேலை நாளில் வேலை நிறுத்தம் செய்வது என் மனம் ஒப்புக் கொள்ளவில்லை ஆகையால் நான் எங்ஙனம் கலந்து கொள்வது?
ப : ஐயா, ராமனுஜம் அவர்களே அலுவலக பணி நேரம் முடிந்த பிறகும் விடுமுறை நாளிலும் எங்களின் போராட்டத்தை அற வழியில் நடத்தினோம். எங்களை அழைப்பாரில்லை, பின்பே இந்நாளை தேர்ந்தெடுத்துள்ளனர். இதற்காக நாள், நட்சத்திரம்,முகூர்த்தமா பார்க்க முடியும்.

கே : வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாதவர்களுக்கு மறுநாள் மாலை அணிவித்து மரியாதை செய்யப்படும் எனில் வேலை ஒழுங்காக செய்யாதவர்களுக்கு வேலைக்கு வராமல் வந்தததைப் போல் கணக்கு காண்பிப்பவர்களுக்கு மாலையிடப்படுமா?
ப : உங்கள் அலுவலகத்தில்/பள்ளியில் வேலை ஒழுங்காக செய்யாதவர்களுக்கு, வேலைக்கு வராமல் வந்தததைப் போல் கணக்கு காண்பிப்பவர்களுக்கு மாலையிட உங்களாலே முடியும். ஆனால் அதுக்கும் திராணியற்று பயந்து எங்களை கூப்பிடுகிறீர்கள். ஐயோ எந்தோ பரிதாப நிலை உங்களுடையது.

கே: நான் தகுதி காண் பருவம் முடிக்கவில்லை காலமுறை ஊதியத்தின் கீழ் இல்லை. நான் எப்படி வருவது?
ப : தமிழ்நாட்டில் தகுதி காண் பருவம் முடிக்காதவர்கள், காலமுறை ஊதியத்தின் கீழ் இல்லாதவர்கள் நடத்திய போராட்டமும் அதன் வெற்றியும் நாடே அறியும். நீங்கள் அறியாதது உங்கள் அறியாமையை காட்டுகிறது.

இதன் பிறகும் என் மனம் ஒப்புக் கொள்ளவில்லை என்வழி தனி வழி என்றீர்களானால்

தனிமரம் தோப்பாகாது

ஒரு கை ஓசை தராது

ஊரோடு ஒத்து வாழ்

ஒற்றுமையே பலம்

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை

நாங்கள் வெற்றி பெற்ற பிறகு கிடைக்கும் பரிசில் உங்களுக்கு எங்களுடைய ஆழ்ந்த அனுதாபங்களோடு பங்களிப்போம்.

ஜாக்டோ – ஜியா விற்காக மட்டும் அல்ல காவலர்களுக்கு மட்டும் அல்ல ஐ.டி ஊழியர்களுக்கும் சேர்த்துத்தான்

More from New Democrats

Permanent link to this article: http://new-democrats.com/ta/12-excuses-by-people-trying-to-evade-struggles/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
ஒப்பந்த உழைப்பு முறை ஒழிப்பு கருத்தரங்கம் – அழைப்பு வீடியோ, படங்கள்

ஜனவரி மாதம் 26-ம் தேதி சென்னையில் நடைபெற்ற ஒப்பந்தத் தொழிலாளர் உழைப்பு முறை ஒழிப்பு கருத்தரங்கு தொடர்பான அழைப்பு வீடியோ, புகைப்படங்கள்.

பொள்ளாச்சி பாலியல் குற்றக் கும்பலைத் தண்டிக்க முடியாதா?

சமூகம் இப்படித்தான் இருக்கிறது, நாம் என்ன செய்ய முடியும் என்று நம்மையே நாம் சமாதானம் செய்து கொள்கிறோம். இது போன்ற செய்திகளைக் கேட்டுக் கேட்டு மரத்துப் போன நமது உணர்வுகளைத்...

Close