“முன்னேற்றத்துக்கு” நாடு கொடுக்கும் விலை என்ன?

ந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 18.5 லட்சம் டன் மின்-கழிவுகள் (அதாவது ஒரு நபருக்கு 1.5 கிலோ) உருவாக்கப்படுகின்றன என்கிறது ஒரு ஆய்வு. 2018-ல் இந்த அளவு 30 லட்சம் டன்களை (ஒரு நபருக்கு 2 கிலோ) எட்டும்.

இவற்றில் 70 சதவீதம் அரசு, பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களிலிருந்து வருகின்றது. தனிநபர் பயன்பாடுகளிலிருந்து 15 சதவீதம் கழிவுகள் போடப்படுகின்றன. இந்தக் கழிவுகளில் 2.5% மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகின்றன.

துறைவாரியாக

70 சதவீதம் – கம்ப்யூட்டர்
12 சதவீதம் – தொலைதொடர்பு துறை
8 சதவீதம் – மின் கருவிகள்
7 சதவீதம் – மருத்துவத் துறை

1990-களிலிருந்து பெரிதும் வளர்ந்துள்ள ஐ.டி-ஐ.டி சேவைத் துறையின் இருண்ட பக்கம் இது. ஐ.டி ஊழியர்களை குறி வைத்து அவர்களது வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு மேற்கத்திய உணவகங்களையும், மால்களையும் உருவாக்கியிருக்கும் முதலாளிகளின் இலாபவேட்டை, அதே போன்று ஐரோப்பிய தரத்திலான கழிவு மறுசுழற்சி செய்வதை புறக்கணித்து நாட்டின் மீது சுமையை ஏற்றியிருக்கிறது.

நகரவாரியாக
மும்பை – 1.2 லட்சம் டன்
டெல்லி – 98,000 டன்
பெங்களூரு – 92,000 டன்
சென்னை – 67,000 டன்
கொல்கத்தா – 55,000 டன்
அகமதாபாத் – 36,000 டன்
ஹைதராபாத் – 32,000 டன்
பூனே – 26,000 டன்

நடைமுறையில் இந்தக் கழிவுகளை கையாளுவதில் லட்சக்கணக்கான இளம் குழந்தைகள் பலியிடப்படுகின்றனர். 95 சதவீதத்துக்கும் அதிகமான கழிவுகள் அமைப்புசாரா துறையில், பழைய பொருட்களை கையாளும் வியாபாரிகளால் கையாளப்படுகின்றன. 10-14 வயதிலான சுமார் 5 லட்சம் குழந்தைகள், எந்த விதமான பாதுகாப்பும் இல்லாமல் மின் கழிவு தொடர்பான வேலைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

ஐ.டி துறையின் பலன்களை சுவைத்துக் கொண்டிருக்கும் நாம் என்ன செய்யப் போகிறோம்?

1.85 Million Tonnes of E-Waste generated annually in India

 

Permanent link to this article: http://new-democrats.com/ta/18-lakh-tonne-e-waste-generated-annually-ta/

Leave a Reply

Your email address will not be published.

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
வேலையை விட்டால் 5 மடங்கு சம்பளம் வெகுமதி

சென்ற ஆண்டு (2015) இறுதியில் இன்ஃபோசிஸ் நிதித்துறை தலைமை அலுவலர் ராஜீவ் பன்சால் பதவியை விட்டு, டாக்சி அழைப்பு நிறுவனம் ஓலாவின் நிதிப் பிரிவின் தலைவராக சேர்ந்தார்....

சமையல் தொழிலாளர்கள்

நமக்கு அறுசுவை விருந்தாக, பசிப்பிணி தீர்க்கும் மருந்தாக உணவு சமைத்துப் பரிமாறும் தொழிலாளர்களின் வாழ்க்கையில் அவலச்சுவை மண்டிக் கிடக்கிறது. தூக்கம் துறந்து, அடுப்படியில் வெந்து உணவு சமைக்கும்...

Close