2.0 – 548 கோடியில் ஒரு சமூகக் குப்பை

ந்திரன் 2.0 படத்தை தினமலர் பாராட்டி எழுதும்போது தொழிலாளர் வர்க்கம் வேதம் ஓதலாமா? என்று கேட்கிறீர்கள் என்றால் மேலே படியுங்கள்.

அப்படி என்னதான் முக்கி முக்கி முக்கிய படம் எடுத்தார்கள் என்று தெரியவில்லை..

அப்படி என்னதான் முக்கி முக்கி முக்கிய படம் எடுத்தார்கள் என்று தெரியவில்லை..பறவைகள் மேல் அக்கறை கொண்ட ஒரு நல்லவன் பறவை இனம் செல்போன் டவர்கள் கதிரியக்கத்தால் அழிவதை தடுக்க முனைகிறார்.

அரசாங்கத்தை அணுகி தீர்வு இல்லை.
நாட்டை ஆளும் அரசியல்வாதிகளை அணுகுகிறார் தீர்வு இல்லை.
நீதிமன்றத்தை அணுகினார் இல்லை தீர்வு இல்லை.
சம்பந்தப்பட்ட corporate ஆட்களையே இது நியாயமா என்று கேட்கிறார் உன்னால் ஆனதைப் பார்த்துக்கொள் என்று கூறுகிறார்கள்.
மக்களிடம் பேசி பார்க்கிறார் மக்கள் அலட்சியப்படுத்துகின்றனர்.

நிலத்தை விற்ற நிலப்பிரபுக்களிடம் பேசுகிறார். “மனுசன் வாழறதுக்கு இடமில்லை. சில பறவைகளுக்கு காலத்தை வென்று பறவைகளுக்கு எதிர்காலத்தை பற்றி நான் ஏன் யோசிக்க வேண்டும்” என்றபோது அந்த நல்லவனுக்கு வேறு என்ன தீர்வு கிடைக்கும்?

பறவைகள் சமாதியை வீடு முழுக்க நிறுவும் அந்த ‘நல்லவன்’ ஒரு கட்டத்தில் செல்போன் டவரில் தூக்குபோட்டு தொங்கினார்..

செத்த பிறகு மின் காந்த சக்தியாக உருமாறி பறவைகள் எல்லாவற்றையும் ஒன்றிணைத்து பறவைகள் மனிதனாக, ராட்சசனாக உருமாறுகிறார். உரு மாறிய பிறகு தவறு செய்த அரசியல் முக்கிய நபர்களை தொழிலதிபர்களை பழிவாங்குவது வில்லனின் செயலாக இருக்கிறது.

வேலைவாய்ப்பை இழந்து நடக்கும் தொழிலாளர்களுக்கும் அலைந்து திரியும் it layoff victims, தொழிற்சங்கம் ரஜினி போன்ற சந்தர்ப்பவாதிகளை எந்தச் சூழ்நிலையிலும் ஆதரிக்கப் போவதில்லை.

வில்லனை எப்படி தடுப்பது என்று கேள்வி கேட்கும்போது சிட்டி என்கிற கெட்ட ரோபோவை வைத்து வைத்து நீதிக்கதைகள் போதிக்கலாம் என்று அப்பாட்டக்கர் டைரக்டர் ஷங்கர் படம் எடுத்துள்ளார்.

என்ன சொல்ல வர்றீங்கன்னு தலை சுற்றுகிறது. இதை எப்படி இரண்டரை மணி நேரம் பார்த்தீர்கள் என்றால், ஆம் எங்கள் மீது நீங்கள் தான் பரிதாபம் கொள்ள வேண்டும்.

ஒரு மெசேஜை இரண்டரை மணி நேரம் வளைச்சி வளைச்சி சொல்றதுக்கு, ஒரு சிறுகதையில் முடிக்க வேண்டிய கதையை 548 கோடி போட்டு எடுத்த Producer போட்ட பணத்தை எடுப்பாரா என்று பார்க்கலாம். பத்தாயிரம் திரையில் வருவதால் ஒவ்வொரு நாளும் 70 லிருந்து 100 கோடி வசூல் வரலாம் என்று கணக்குப் போட்டாலும் படம் தோல்வி அடைய பல சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.

சமூகத்தில் தொழிலாளர்களுக்கு பிரச்சினை, வேலைவாய்ப்பு இல்லாமை, காண்ட்ராக்ட் பிரச்சனைகள், பெண்கள் முன்னுரிமை ஆகிய எதைப் பற்றியும் கவலைப்படாமல் 540 கோடிக்கு  எடுத்த படத்தில் ஒரே ஒரு மெசேஜ் உள்ளது. இதற்கு ஒரு கட்டுரை போதும். இரண்டரை மணி நேரம் உட்கார வேண்டிய அவசியமில்லை.

படத்தைப் பார்த்துவிட்டு படம் நல்லா இருக்கு என்று பச்சை தண்ணி குடித்துவிட்டு பாயாசம் குடிப்பது போல் பில்டப் கொடுக்க வேண்டாம். ரஜினி, பி.ஜே.பி-ஐ ஆதரிப்பதால் இந்த படத்தை தினமலர் வேண்டுமானால் ஆகா ஓகோ என்று புகழலாம். ஆனால் வேலைவாய்ப்பை இழந்து நடக்கும் தொழிலாளர்களுக்கும் அலைந்து திரியும் it layoff victims, தொழிற்சங்கம் ரஜினி போன்ற சந்தர்ப்பவாதிகளை எந்தச் சூழ்நிலையிலும் ஆதரிக்கப் போவதில்லை.

பறவைகள் சமாதியை வீடு முழுக்க நிறுவும் அந்த ‘நல்லவன்’ ஒரு கட்டத்தில் செல்போன் டவரில் தூக்குபோட்டு தொங்கினார்..

இந்தப் படத்தை பார்க்காவிட்டால் no loss உங்களுக்கு அல்லது பார்த்தால் ஏன் பார்த்தோம் என்று நீங்கள் வருத்தப்பட போவது நிச்சயம். அதனால் சொல்லவேண்டியதை சொல்லி விட்டோம் அதற்கப்புறம் உங்கள் விருப்பம்..

தற்கொலையை தவறில்லை என்று நீதிமன்றம் தீர்ப்பு கூறி விட்டது. நீங்கள் படம் பார்த்துவிட்டு சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டால் உங்களை யார் தடுக்க முடியும்..

“அப்படியே ஹாலிவுட் கணக்கா படம் எடுத்திருக்காங்க”ன்னு யாராவது சொல்லுவாங்க.. மக்களே, ஹாலிவுட் படத்தை பார்த்ததே இல்லையே, ஷங்கர் எடுத்த படத்தை அவதார் ஜேம்ஸ் கேமரூன் ரேஞ்ச் என்று செய்திகள் எல்லாம் கொடுக்காதீங்க. படத்தை படமா பாருங்க…

பிஜேபி பக்தர்கள் எல்லாருமே படத்தை ஆகா ஓகோ என்று புதிதாக முளைத்த ரஜினி ரசிகர்கள் போல் பேசுவது சிரிப்பையே வரவழைக்கிறது.

தொழிலாளர் நலனுக்கு எதிராக இருக்கும் ரஜினி படத்தை புறக்கணிக்க தான் செய்கிறோம். இந்தப் படத்தை பார்த்துவிட்டு படம் சூப்பர் என்று சொன்ன ரஜினி ரசிகர்களை தேடிக் கொண்டிருக்கிறோம். படம் பார்த்து படம் பிடிக்காவிட்டால் நஷ்டஈடு கொடுப்பார்களா?

“ரஜினி அவர்களே தெரியாத்தனமாக போய் படம் பார்த்து விட்டேன் நீங்கள் தான் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும்” என்று மக்கள் கிளம்ப வாய்ப்புகள் அதிகம்.

– காசிராஜன்

கருத்துக்கள்

  1. ஏதோ பொதுகாரியங்களுக்கு செலவு பண்ண மாதிரி பில்ட் அப்

“Well said!!

ஷங்கர், ரஜினி மற்றும் ரஜினி ரசிகர்களெல்லாம் ஏதோ 500 கோடிய பொது காரியங்களுக்கு செலவு பண்ண மாதிரி build up கொடுக்கிறது தாங்க முடியல.

இந்த article-ஐ ஷங்கர் நாமம் ரஜினி நாமம் பாடற சில அரவேக்காடுங்களுக்கு அனுப்பனும்.”

2. தொழிலாளர்களின் உழைப்பு, தொழிலாளர்களின் பணம்

“இந்த திரைப்படத்தின் பின்னணியில் 100-க்கும் மேற்பட்ட இந்திய தொழிட்நுட்ப தொழிலாளர்களின் உழைப்பும் முயற்சியும் உள்ளது. அவர்களுக்கு இது புது அனுபவமாகவும் இருக்கலாம், எனவே தொழில்ட்நுட்ப வகையில் இதை அவதார் போன்ற படங்களுடன் ஒப்பிட்டு குறைகளை கூறுவதுடன் அவர்களது உழைப்பை ஒரு வரி பாராட்டலாம் …”

கதை மற்றும் கருத்தியல் அடிப்படையில் பதிவை ஆதரிக்கிறேன்.

சர்கார் (200+) வடசென்னை (100+), கடந்த சில மாதங்களில் மட்டுமே தமிழ் சினிமா 300+ கோடிக்கு மேல் வருமானத்தை ஈட்டியுள்ளது. 2.0 கண்டிப்பாக 300 கோடியை எட்டும். ஆக மொத்தம் 3 மாதங்களில் மட்டும் 600 கோடி வசூல். அதில் பெரும்பாலும் 6.7 கோடி தமிழ்நாட்டு மக்களிடமிருந்து (70%)..இந்த வருமானம் மக்களிடம் பெரும்பான்மை தொழிலாளல்களிடம் இருந்து பெறபட்டது. தொழிலாளர்களுக்கு எதிராக கருத்து இருப்பின் கண்டிப்பாக கண்டிக்கலாம்…”

3. அரசியலை பின்னுக்கு இழுக்கும் இயக்குனர் சங்கர்

“இயக்குனர் சங்கர் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள் இல்லை, என்ற ரீதியில் அறிவியலுக்கு பேய் சாயமும், “மக்கள் போராட்டங்களுக்கு மாற்றாக வானத்திலிருந்து தூதுவன் வருவான்” என்ற ரீதியிலும் படத்தில் தன் தீர்வை முன் வைத்துள்ளார்.

ஆனால், சமீப காலமாக மக்களின் அரசியல் புரிதல்கள் மேம்பட்டுள்ளது. இங்குள்ள சமூக பிரச்சனைகளுக்கு கார்ப்பரேட்டுகளின் கொள்ளை லாப வெறியும் அரசின் கார்ப்பரேட் ஆதரவு கொள்கையும் தான் காரணம் என்பதை மக்கள் நன்றாகவே புரிந்து வருகிறார்கள். அதிலிருந்துதான் வேதாந்தா ஸ்டெர்லைட் போன்ற கார்ப்பரேட்டுகளுக்கு எதிராகவும் மோடி, எடப்பாடி அவர்களது பிரநிதிகளுக்கு குரல் எழுப்புகிறார்கள்.

இவ்வாறு, முன்னேறிச் செல்லும் மக்களின் அரசியல் புரிதல்களையும், மேம்பாட்டை எதிர்வினைகளையும் மட்டுப்படுத்தும் விதமாக பின்னுக்கிழுக்கும் விதமாக தனது தீர்வை வைத்துள்ளார். இந்தப் படத்தின் மூலமாக ஆளும் வர்க்கத்தினால் உருவாக்கப்படும் பிரச்சினைகளுக்கு பேய் வந்து உதவும் என்று நம்ப வைக்க முயற்சிக்கிறார்.”

Permanent link to this article: http://new-democrats.com/ta/2-0-a-548-crore-social-garbage/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
மூலதனம் 150, ரசியப் புரட்சி 100 – ஒய்.எம்.சி.ஏ அரங்கு கூட்டம் நவம்பர் 19 அன்று

நவம்பர் 7-ம் தேதி ரசியப் புரட்சி நினைவு நாளன்று நடைபெறவிருந்த ரசியப் புரட்சி 100, கார்ல் மார்க்சின் மூலதனம் நூலின் 150 விழா கூட்டம், சென்னையில் மழை...

மோடியைத் தாக்கும் யஷ்வந்த் சின்ஹா

"மோடி அரசின் இந்த நான்கு வருட ஆட்சி இந்தியாவை பின்னோக்கி கொண்டு சென்று இருப்பதுடன், சுதந்திர இந்தியாவில் இதுவரை கட்டிகாக்கப்பட்ட நடுவண் அரசின் மாண்பை சீர்குலைத்திருக்கிறது. பிஜேபி...

Close