இந்த ஆண்டு டி.சி.எஸ் நிறுவனத்திற்கு 28000 கூடுதல் அடிமைகள்

டிசிஎஸ் நிறுவனம் வழக்கமாக பட்டதாரிகளை மொத்த எண்ணிக்கையில் வேலைக்கு எடுத்து வருகிறது – 2017-ம் ஆண்டில் 20,000 பட்டதாரிகளையும் 2016-ம் ஆண்டில் 35,000 பட்டதாரிகளையும் வேலைக்கு எடுத்தது. 2015-ம் ஆண்டு 40,000 பட்டதாரிகள் வேலைக்கு அமர்த்தப்பட்டனர்.

2018-ஆம் ஆண்டில் 1,800 பொறியியல் கல்லூரிகளில் 2.7 லட்சம் மாணவர்களில்  28000 பட்டதாரிகளை பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளனர். 50,000 பேர் நேர்காணலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். முன்பெல்லாம், சுமார் 400 கல்லூரிகளில் வளாக நேர்காணல் மூலம் புதிய பட்டதாரிகளை பணியமர்த்தி வந்தது.

இங்கே முக்கிய பிரச்சினை வேலையற்ற பொறியியல் பட்டதாரிகளின் ரிசர்வ் பட்டாளமாகும். டி.சி.எஸ் 10 விண்ணப்பதாரர்களில் 1 பொறியியலாளரை தேர்வு செய்கிறது. தனியார் (இலாபத்திற்கான) பொறியியல் கல்லூரிகள் தொடர்பான  அரசின் கொள்கை இந்திய இளைஞர்களை ஐ.டி நிறுவனங்களுக்கு குறைந்த சம்பளத்தில் வழங்குவதற்கு வழிவகுத்தது. வேலைக்கு போட்டியிடும் பட்டதாரிகள் எண்ணிக்கையை அளவுக்கு அதிகமாக ஆக்கி அனைவருக்கும் சம்பளத்தை குறைக்க வழிவகுக்கிறது.

டி.சி.எஸ் இந்த ஆண்டு வேலைக்கு எடுக்கும் 28,000 ஊழியாளர்களில், 1000 பேருக்கும் மட்டும் ஒரு வருடத்திற்கு 6 லட்சம் ரூபாய் ஆரம்ப சம்பளத்தில் அதன் டிஜிட்டல் பிசினஸ் பிரிவில் அமர்த்தவிருக்கிறது. இது ஒரு திறமையான ஐ.டி ஊழியருக்கு வழங்க வேண்டிய குறைந்தபட்ச ஊதியத்தை (வருடத்திருக்கு 12 இலட்சம்) விட குறைவாகவே உள்ளது. மீதி 27,000 பேருக்கு இதை விடக் குறைந்த சம்பளமே வழங்கப்படும்.

முக்கியமாக, இந்த பட்டதாரிகளுக்கு டி.சி.எஸ் கொடுப்பதை வாங்கிக்கொள்வதைத் தவிர வேறெந்த வழியில்லை.  திறமையுள்ள ஊழியர்களுக்கு அரசு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிப்பது இல்லாததால், நிறுவனங்களால் இன்னும் அதிகமாக கொடுக்க முடியும் என்றாலும் நிறுவனங்கள் ஏழை படித்த இளைஞர்களின் நிலைமையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

ஒருவேளை தேவையை மட்டும் பூர்த்தி செய்ய அரசாங்கம் திட்டமிட்டிருந்தால் என்ன நடந்திருக்கும்? டி.சி.எஸ் நிறுவனத்திற்கு 28,000 பணியிடங்களுக்கு 30,000 விண்ணப்பங்கள் மட்டுமே வந்திருக்கும், நிறுவனம் அதிக ஊதியம் (வருடத்திற்கு ரூ 10 லட்சம்?) கொடுக்க வேண்டியிருந்திருக்கும்.

மற்றவர்கள்? அவர்களுக்கு மற்ற துறைகளில் வாய்ப்புகளை வழங்கியிருக்க வேண்டும்.

நடைமுறையில், பொறியியல் பட்டதாரிகளின் சம்பளத்தை குறைத்துக் கொடுத்து ஏமாற்றி ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை சம்பாதித்து (அதன் மூலம் இந்தியாவை ஏழை நாடாக்கி) மேற்கத்திய வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் சேவை வழங்கும் வாய்ப்பை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இந்திய அரசு வழங்கியிருக்கிறது.

ஒரு ஆரம்பநிலை திறன் ஊழியரின் சம்பளம் 2001-ம் ஆண்டிலிருந்து இன்றுவரை வருடத்திற்கு 3.3 இலட்சம் ரூபாய் என்றே தொடர்ந்தால் அது அடிப்படையில் அடிமைத்தனமே. 2001-ம் ஆண்டில் 3.3 இலட்சம் ரூபாய் என்பது தற்போது, 12 இலட்சம் ரூபாய்க்கு சமமானதாகும். மேலும் விவரங்களுக்கு டி.சி.எஸ் : இந்தியாவை ஏழையாக்கும் அயல் சேவை திருப்பணி! என்ற கட்டுரையை படிக்கவும்.  டி.சி.எஸ் ஒவ்வொரு ஆண்டும் ஆரம்ப நிலை ஊதியத்தை உயர்த்தாமல் இருப்பதால் அது இந்தியாவை எப்படி வறுமையை நோக்கித் தள்ளுகின்றது என்று அந்தக் கட்டுரை பேசுகிறது அறியலாம். இப்படி தொடங்கும் அடிமைத்தனம் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் அனைத்து மட்டங்களுக்கும் கடத்தப்படுகிறது.

காலின்ஸ் அகராதியில் அடிமைத்தனம் பற்றி சில வரையறைகள்:

  • “செல்வாக்கிற்கு கீழ்ப்படிதல் அல்லது நிபந்தனைக்கு அடிபணிதல்”
  • “குறைந்த ஊதியத்திற்கு மோசமான சூழ்நிலையில் வேலை செய்வது”
  • “ஒரு நபர் மற்றொருவர் மீது முழுமையான அதிகாரத்தை செலுத்துதல், அவருடைய வாழ்க்கை, சுதந்திரம் மற்றும் செல்வத்தைக் கட்டுப்படுத்துதல்”

1650-ம் ஆண்டில் வெள்ளையர்கள் இந்தியாவுக்கு வந்து இந்திய அடிமைகளை உருவாக்கினர். இது இரண்டாம் உலகப் போர் வரை தொடர்ந்தது, பின்னர் வெள்ளையர்கள் இந்தியா போன்ற நாடுகளை விட்டு தங்கள் சொந்த நாட்டிற்கு சென்றனர்.

1600-களில் வெள்ளையர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து ஆட்களை வாங்கி அமெரிக்கா என்ற ஒரு நாட்டைக் கட்டத் தொடங்கினார். ஆபிரகாம் லிங்கன் போன்றவர்கள் இதற்கெதிராக போராடி மாற்றும் வரை இந்த நிலைமை நிலவியது.

1950-களில் வெள்ளையர்கள் தங்கள் நாட்டில் இருந்துகொண்டே அடிமைகளை அவரவர் சொந்த நாடுகளில் இருக்க விட்டனர், நடுவில் இணைய இணைப்பை மட்டும் ஏற்படுத்திக்கொண்டனர். அடிமைத்தனம் வெர்சன் 1.0-லிருந்து 3.0-ற்கு மாற்றப்பட்டது, ஆனால் அடிமைத்தனம் தொடர்கிறது. டாட்டா, பிரேம்ஜி, நாராயண மூர்த்தி போன்றவர்கள் இந்த அடிமைத்தனத்திற்கு உதவியதோடு ஆன்லைன் அடிமைகளுக்கு கங்காணிகளாக இருப்பதன் மூலமும் தங்களை பணக்காரர்களாக்கிக்  கொண்டார்கள்.

– பிரசாந்த் 

மொழிபெயர்ப்பு : மணி

Permanent link to this article: http://new-democrats.com/ta/28000-additional-slaves-for-tcs-this-year-ta/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
புதிய தொழிலாளி ஜூன் 2018 பி.டி.எஃப் டவுன்லோட்

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு, சுண்ணாம்புச் சூளைகள், பி.பி.ஓ / கால்சென்டர்கள், என்.எல்.சி-யில் தற்கொலைப் போராட்டம், கிராமப்புற அஞ்சலக ஊழியர்கள், பசுமை வழிச் சாலை, இன்னும் பிற கட்டுரைகளுடன்

ஜல்லிக்கட்டு காவல்துறை வன்முறை : சென்னை உண்மை அறியும் குழு அறிக்கை

வழக்குரைஞரகளாகிய நாங்கள் முழு உண்மையை வெளிக்கொண்டுவரும் பொருட்டு குழுவாக சென்று 24, 25, 26 ஆகிய தேதிகளில் நடுக்குப்பம், வி.ஆர்.பிள்ளை தெரு, மாட்டாங்குப்பம், அனுமந்தபுரம், ஐஸ் அவுஸ்,...

Close