«

»

Print this Post

“8 மணி நேரம்தான் வேலை” – சி.டி.எஸ் பணிந்தது! பு.ஜ.தொ.மு போராட்டம் வெற்றி!

This entry is part 2 of 2 in the series 8 மணி நேர வேலை நாள்
 1. சி.டி.எஸ்-ல் அதிகார பூர்வமாக 9.5 மணி நேர வேலை டி.சி.எஸ்-ன் கிரிமினல் டிரெயினிங் மோசடி
 2. “8 மணி நேரம்தான் வேலை” – சி.டி.எஸ் பணிந்தது! பு.ஜ.தொ.மு போராட்டம் வெற்றி!

சென்னையை அடுத்த தாம்பரத்திலுள்ள காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் எனப்படும் சி.டி.எஸ் நிறுவனம் சென்ற ஆண்டு, “XL Catlin என்ற ப்ராஜெக்டில் பணிபுரியும் தனது ஊழியர்கள் தினமும் 9 மணி நேரம் (உணவு இடைவேளையை சேர்க்காமல்) கட்டாயம் வேலை செய்தாக வேண்டும்” என அந்த ஊழியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தது.

cognizant-mepz-chennaiசட்ட விரோதமான இச்செயல் குறித்து சி.டி.எஸ்.-ல் பணிபுரியும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் ஐ.டி. ஊழியர் பிரிவில் உறுப்பினராக உள்ள சில தோழர்கள் ஆதாரத்துடன் நமக்கு தகவல் அனுப்பியிருந்தனர். இது தொடர்பாக அவர்களிடம் நேரில் விசாரித்து உண்மை நிலையை அறிந்து கொண்ட நமது சங்கம், மாநில நிர்வாகக் குழுவின் ஆலோசனைப்படி சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க முடிவு செய்தது.

அதன்படி, சி.டி.எஸ் சட்ட விரோதமாக 8 மணி நேரத்துக்கு அதிகமாக ஊழியர்களை வேலை செய்ய வைப்பது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட தொழிலாளர் ஆய்வர் கவனத்துக்கு நமது சங்கத்தின் சார்பில் 19-07-2016 அன்று புகார் அனுப்பப்பட்டது.

வழக்கம் போல புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதைத் தொடர்ந்த ஒரு மாதம் கழித்து 23-08-2016 அன்று ஒரு நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டது.

அதற்கும் பதில் வராத நிலையில் 06-10-2016 அன்று நேரில் சென்று புகார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று விசாரித்து தொழிலாளர் துறை தனது கடமையை செய்வதற்கான நெருக்கடி ஏற்படுத்தப்பட்டது.

அதைத் தொடர்ந்து தொழிலாளர் ஆய்வர் விசாரணையை துவக்கி, இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி சி.டி.எஸ்-க்கு கடிதம் அனுப்பினார். மேலும், தாம்பரம் மெப்ஸ் வளாகத்தில் உள்ள சி.டி.எஸ் நிறுவனத்தின் அலுவலகத்தில் பரங்கிமலை தொழிலாளர் துணை ஆய்வர் மற்றும் தாம்பரம் தொழிலாளர் உதவி ஆய்வர் கூட்டாக ஆய்வு செய்தனர்.

cts-8hrs-work-day-letter-2ஆய்வின் போது, “XL Catlin என்ற Project-ல் பணிபுரியும் பணியாளர்கள் தினமும் 9.00 மணி நேரம் பணிபுரிய வேண்டும்” என்று நிர்வாகத்தின் மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறித்து விசாரிக்கப்பட்டது. உடனிருந்த சி.டி.எஸ் எச்.ஆர் அதிகாரி திருமதி ரூபா “பணியாளர்கள் உணவு மற்றும் இதர இடைவெளி நேரங்கள் உட்பட 9.00 மணி நேரம் பணிபுரிவதாகவும், அதன்படி வேலை நேரம் 8.00 மணி மட்டுமே” என்றும் தெரிவித்திருக்கிறார்.

மேற்படி தகவலை காஞ்சிபுரம் மாவட்ட தொழிலாளர் ஆய்வர் கடிதம் ஒன்றின் மூலம் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஐ.டி ஊழியர்கள் பிரிவுக்கு தெரிவித்துள்ளார். சட்டப்படி, “ஒரு நாளைக்கு 8 மணி நேரத்துக்கு மேல் வேலை செய்யும்படி கோர நிறுவனத்துக்கு உரிமை இல்லை” என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

ஐ.டி துறையில் பரவலாக கடைப்பிடிக்கப்படும், சட்ட விரோதமாக 8 மணி நேரத்துக்கு வேலை வாங்கும் கார்ப்பரேட்டுகளின் நடவடிக்கைக்கு எதிரான மிக முக்கியமான நிகழ்வாக பு.ஜ.தொ.மு இதை சாதித்துள்ளது. பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர் சங்கம் கொடுத்த புகாரும், அதைத் தொடர்ந்து புகாரை விசாரித்து முடிவு எடுக்கும்படி தொழிலாளர் துறையை தொடர்ந்து வலியுறுத்தியதுமே இந்த வெற்றிக்கான காரணமாகும். முதலில் உணவு இடைவேளையை சேர்க்காமல் 9 மணி நேரம் வேலை செய்யச் சொன்னவர்கள், தற்போது எல்லா இடைவேளைகளையும் சேர்த்து 9 மணி நேரம், வேலை நேரம் 8 மணி நேரம் மட்டும் என்று பணிந்து வந்துள்ளனர்.

இந்த விதி அனைத்து ஐ.டி. நிறுவனங்களுக்கும் பொருந்தக் கூடியது. எனவே, அனைத்து ஐ.டி ஊழியர்களும் 8 மணி நேரத்துக்கு மேல் பணிபுரிய வேண்டிய கட்டாயத்துக்கு அடிபணிய வேண்டாம் என்றும் பு.ஜ.தொ.மு ஐ.டி. ஊழியர்கள் பிரிவைத் தொடர்புக் கொள்ளுமாறும் கோருகிறோம்.

இவண்

புதிய  ஜனநாயக தொழிலாளர் முன்னணி – ஐ.டி ஊழியர் பிரிவு

தொடர்புக்கு : தோழர் கற்பக விநாயகம், அமைப்பாளர்

மின்னஞ்சல் :  combatlayoff@gmail.com

தொலைபேசி : 9003198576
Series Navigation<< சி.டி.எஸ்-ல் அதிகார பூர்வமாக 9.5 மணி நேர வேலை டி.சி.எஸ்-ன் கிரிமினல் டிரெயினிங் மோசடி

Permanent link to this article: http://new-democrats.com/ta/8-hours-work-day-right-upheld-by-ndlf/

3 comments

 1. கண்ணன்

  எட்டு மணி நேர வேலை என்பது போராடிப்
  பெற்ற உரிமை. அதை மீட்டெடுத்து உரிமை நிலை நாட்டுவோம்

 2. Venkatesh

  Congrats comrades…

 3. Ganesan. G

  வெற்றிக்கு வாழ்த்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
ஒரு ஐ.டி ஊழியரின் போராட்டம் – உழைக்கும் மக்களுடன் ஐக்கியமாதல்!

"மேல் பதவியில் இருந்து கீழே உள்ள கடைநிலை அரசு ஊழியர் வரைக்கும் பணம் லஞ்சம் பாய்கிறது. நாம் ஒருவேளை மக்கள் நலன்சார்ந்து செயல்பட்டாலோ அல்லது நேர்மையாக இருந்தாலோ...

செல்லாத நோட்டு, கருப்புப் பணம், டிஜிட்டல் பணம் – யதார்த்தம் சொல்லும் பெண்கள்

நம்ம நாட்டை அமெரிக்காவுக்கு நிகரா கேஷ்லெஸ் நாடா கொண்டு வரணும்னு சொல்றாங்க. அது எப்ப நடக்கும். நம்ம நாடு இன்னும் ஏழை நாடுதான். அந்த ஏழை மக்களை...

Close