«

»

Print this Post

சி.டி.எஸ்-ல் அதிகார பூர்வமாக 9.5 மணி நேர வேலை டி.சி.எஸ்-ன் கிரிமினல் டிரெயினிங் மோசடி

This entry is part 1 of 2 in the series 8 மணி நேர வேலை நாள்

சி.டி.எஸ்-ல் அதிகார பூர்வமாக 9.5 மணி நேர வேலை டி.சி.எஸ்-ன் கிரிமினல் டிரெயினிங் மோசடி

1. நாம் எத்தனை மணி நேரம் ஆஃபிஸ் வேலையில் இருந்தாலும் டைம் ஷீட்-ல் 8 மணி நேரம் மட்டும் ஏன் பதிவு செய்கிறோம்?

பல மணி நேரம் வேலை செய்யச் சொல்லும்/ செய்ய வைக்கும் மேனேஜர் டைம் ஷீட்டில் இத்தனை மணி நேரம்தான் நிரப்ப வேண்டும் என்று அதிகாரபூர்வமாக சொல்வதில்லை. இது தொடர்பாக எழுத்து பூர்வமான தகவல் பரிமாற்றம் இருப்பதில்லை என்பதை கவனித்திருக்கிறீர்களா? ஏன் என்று யோசித்திருக்கிறீர்களா?

டீமில் மற்ற எல்லோரும் எப்படி செய்கிறார்களோ அதைப் பார்த்து நாமும் பதிவு செய்கிறோம். மேலும் 8 மணி நேரத்துக்கு குறைவாகவோ, கூடுதலாகவோ போட சிஸ்டம் அனுமதிப்பதில்லை. உண்மையில் ஒரு நாளைக்கு 8 மணி நேரத்துக்கு அதிகமான வேலை என்பது சட்ட விரோதமானது. அதை பதிவு செய்தால் கம்பெனிக்கு சட்ட சிக்கல் ஏற்படும் என்பதால்தான் இப்படி ஒரு ஏற்பாடு உள்ளது.

8-hours-labour2. வேலை நேரத்தை வரம்புக்குட்படுத்தும் சட்டம் ஏன், எப்படி, எப்போது வந்தது என்று தெரியுமா?

19-ம் நூற்றாண்டு முழுவதும் ஒரு நாளைக்கு 17 மணி நேரம், 18 மணி நேரம் வேலை என்ற நிலைமையை எதிர்த்து பல்வேறு நாட்டு தொழிலாளர்கள் கடுமையாக போராடினார்கள். 1880-களில் சர்வதேச தொழிலாளர் இயக்கத்தின் “8 மணி நேரம் உழைப்பு, 8 மணி நேரம் பொழுதுபோக்கு, 8 மணி நேரம் ஓய்வு” என்ற முழக்கம் முன் வைக்கப்பட்டது.

அமெரிக்காவில் 1886-ம் ஆண்டு 8 மணி நேர வேலை நாள் என்ற கோரிக்கையை முன் வைத்து 3.5 லட்சம் தொழிலாளர்கள் பங்கேற்ற வேலை நிறுத்தம் நடைபெற்றது. சிக்காகோ ஹே மார்க்கெட் சதுக்கத்தில் தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து தீவிரமடையும் தொழிலாளர் போராட்டங்களுக்கு அடிபணிந்து அமெரிக்காவில் 8 மணி நேர வேலை நாளுக்கான சட்டம் இயற்றப்பட்டது.

3. சி.டி.எஸ் முதலான கம்பெனிகளில் இப்போது டைம் ஷீட்டிலேயே 9.5 மணி நேரம் பதிவு செய்யச் சொல்கிறார்களே, அது சட்டத்தை மீறுவது இல்லையா? அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

சட்டத்தை அமல்படுத்த வேண்டிய அரசு கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்வதாகவே உள்ளது, கார்ப்பரேட்டுகள் சட்டத்தை மீறினால் நடவடிக்கை எடுக்காமல் அவற்றின் லாபவேட்டைக்கு துணை போகின்றது என்பதுதான் இதற்குக் காரணம். போராட்டங்கள் மூலம்தான் (தொழிலாளர்கள் தமது பி.எஃப் பணத்தை எடுப்பதில் போடப்பட்ட தடைகளை எதிர்த்து முறியடித்த பெங்களூரு ஆயத்த ஆடை பெண் தொழிலாளர்களின் போராட்டம் ஒரு உதாரணம்) நமது நலனை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பது இங்கு வெளிப்படுகிறது.

4. சட்ட வரம்புகளை மதிக்காமல் பல மணி நேரம் வேலை வாங்குவது என்பது பல கம்பெனிகளில் நடைமுறையாக உள்ளது என்று நமக்குத் தெரியும். ஆட்டமேசன், ஆட்குறைப்பு என்று அச்சுறுத்தல்களை ஊழியர்களுக்கு வரிசை கட்டி வைத்திருக்கும் ஐ.டி துறையில் எதிர்கால பணி வாழ்வு எந்தத் திசையில் செல்கிறது என்று தெரியுமா?

அதற்கு செல்வி என்ற டி.சி.எஸ் ஊழியரின் அனுபவத்தைப் பார்க்கலாம்.

செல்வியிடம் பயிற்சிக்குப் பிறகு வேலை தருவதாக ரூ 1,11,264 கட்டணம் வாங்கி விட்டு 6 மாதம் மட்டும் ரூ 6,200 சம்பளத்தில் காண்ட்ராக்டில் வேலை செய்ய வைத்திருக்கிறது டி.சி.எஸ். ஒரு நாளைக்கு 11 மணி நேரம், வாரத்துக்கு 7 நாட்கள் என்று கூட கிளையன்ட் புராஜக்டில் வேலை வாங்கியிருக்கின்றனர்.

இவ்வாறு, தனியார் கல்லூரிகளுக்கு பல லட்சம் கொட்டிக் கொடுத்து எஞ்சினியரிங் படித்து விட்டு வேலை கிடைக்காமல் தவிக்கும் பல லட்சம் இளைஞர்களைக் கொண்ட ரிசர்வ் பட்டாளத்தை ஈவிரக்கம் இன்றி கொள்ளை அடிக்கும் மோசடி கும்பல்களின் துறையாக ஐ.டி துறை மாறிக் கொண்டிருக்கிறது.

5. உரிய உரிமம் இன்றி காண்டிராக்ட் ஊழியரை கிளையன்ட் புராஜக்டில் வேலை வாங்கக் கூடாது என்ற சட்டத்தை டி.சி.எஸ் ஏன் வெளிப்படையாகவே மீற முடிந்தது?

தமது லாபவெறிக்காக சட்டத்தை மீறும் கார்ப்பரேட்டுகள் மீது அரசு நடவடிக்கை எடுப்பதில்லை என்பது இதற்கு முக்கிய காரணம். இப்படி ஒரு மோசடி நடக்கிறது என்று வெளிப்படையாக தெரிந்தும், அதை எதிர்க்க முன் வராத சக ஐ.டி ஊழியர்களும் ஒரு காரணம்.
இது போன்ற குற்றங்களை தட்டிக் கேட்கவும், குற்றம் இழைக்கும் கார்ப்பரேட்டுகளுக்கு உரிய தண்டனை வழங்கவும், நமது நலன்களை பாதுகாத்துக் கொள்ளவும் தனித்தனியாக போராடுவது சாத்தியமில்லை. இந்தியா முழுவதும் உள்ள 37 லட்சம் ஐ.டி ஊழியர்கள் ஒன்று சேர்ந்தால் இந்த நிலைமைகளை மாற்ற முடியும்

முடியும் என்று கருதுபவர்கள் தொடர்பு கொள்ளவும்.

Series Navigation“8 மணி நேரம்தான் வேலை” – சி.டி.எஸ் பணிந்தது! பு.ஜ.தொ.மு போராட்டம் வெற்றி! >>

Permanent link to this article: http://new-democrats.com/ta/8-hours-work-day-tcs-training-scam-notice-ta/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
ஆன்மிகம் Vs அறிவியல் – சுப.வீ

https://www.youtube.com/watch?v=kCsDKMX4ghA ஆன்மிகம் vs அறிவியல் என்ற தலைப்பில் பெரியார் நூலக வாசகர் வட்டம் நிகழ்ச்சியில் (23-01-2014) பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் ஆற்றிய உரை

கால்நடை வர்த்தகத் தடை, தொழிற்சங்கம் – வரலாறும் அரசியலும் : அரங்கக் கூட்டம்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி - ஐ.டி ஊழியர்கள் பிரிவு அரங்கக் கூட்டம் நாள் : சனிக்கிழமை ஜூன் 17, 2017 நேரம் : மாலை 4...

Close