வாடிய மலர்
பெண்ணின் பெருமையை பாடியவன் பாரதி,
மருத்துவம் என்ற உன் கனவை கலைத்தது யாரடி?
முட்களுக்கு நடுவே ரோஜா மலர்வது போல மலர வேண்டிய உன்னை
மொட்டிலேயே கிள்ளியது ஏனடி?
சேற்றிலே தாமரை மலர்வது போல ஏழையாக பிறந்தும் பிறர் உயிரை காக்க நினைத்தாய்!
உன்னை சேறென்று எண்ணி ஒதுக்கினார்களா?
அல்லது ஏழை முன்னேறக் கூடாது என்று எண்ணி ஒதுக்கினார்களா?
அநீதியை எதிர்த்துக் கேட்ட உனக்கு மரண தண்டனை, உனக்கு நீதி கேட்ட எங்களுக்கு சிறை தண்டனை!
பிறர் உயிரை காக்க நினைத்த உனக்கு உன் உயிரையே பரிசாக அழித்து விட்டார்கள்!
நோயினால் அவதியுற்று இருளில் மூழ்கி இருப்பவர்களுக்கு ஒளியாக இருக்க நினைத்த உன்னை
இறுதியில் மொத்தமாக இருளில் தள்ளி விட்டார்கள் வஞ்சகர்கள்
இங்கில்லை என்றால் என்ன, படர்ந்த விரிந்த ஆகாயத்தில் நட்சத்திர ஒளியாக நீ என்றும் எங்கள் மனதில் இருப்பாய்!
நீ பட்டம் பெற்று தான் மருத்துவர் ஆக வேண்டிய அவசியம் இல்லை,
இவ்வளவு நாட்களாக ஒன்றுக்கும் உதவாத இந்த அரசை
“அறியாமை ” என்ற நோயினால் நாங்கள் நம்பிகொண்டிருந்தோம்
உன் மரணத்தினால் அந்த நோயை தீர்த்து விட்டாய் !!!
உனக்கு நீதி கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் கனத்த இதயத்துடன்………………..
-மதுமிதா 🙏🏽
இந்தப் பதிவை எழுதியது ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பெண்