ஆய் போவதற்கு ஆதார் கார்டா? – இணையத்தை கலக்கும் வீடியோ

தார் அட்டையை மையமாக வைத்தே மக்களை நிதி ஏகபோகங்களின் பொறிக்குள் சிக்க வைக்கும் நடவடிக்கைகளை நடவடிக்கைகளை மோடி அரசு செய்து வருகிறது. முந்தைய மன்மோகன் ஆட்சியிலேயே பிள்ளையார் சுழி போடப்பட்டு விட்ட இத்தகைய திட்டங்களின் அடிநாதம் இந்தியப் பொருளாதாரத்தை பன்னாட்டு நிறுவனங்களின், தேசங்கடந்த வங்கிகளின் வலைப்பின்னலுக்குள் கொண்டு வருவதுதான்.

அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் உழைக்கும் மக்களை வங்கி முறைக்குள் இழுத்து சேமிப்புகளை கைப்பற்றி, கடன் கொடுத்து, வட்டி வசூலித்து, ஓட்டாண்டிகளாக்கி, வீடுகளையும் சொத்துக்களையும் பறித்து, இன்னும் தீவிரமடைந்திருக்கும் ஏகாதிபத்தியத்தின் லாப வேட்டை இப்போது இந்திய மக்களை இன்னும் தீவிரமாக குறி வைக்கிறது.

100 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள், முறைசாரா தொழிலாளர்கள் இணை பொருளாதாரத்தில், வங்கி முறைக்கு வெளியே (அதாவது தமக்கு நேரடி லாபம் ஈட்டித் தராமல்) இயங்கிக் கொண்டிருக்கும் இந்தியாவை எச்சில் ஒழுக பார்க்கின்றது பன்னாட்டு நிதிமூலதனம். நம் நாட்டு மக்களிடம் இருக்கும் நிலம், நகைகள் போன்ற கொஞ்ச நஞ்ச சொத்துக்களையும் பறித்து, கல்விக் கடன், வீட்டுக் கடன் என்று சிக்க வைத்து ஏதுமற்ற கூலியடிமைகளாக மாற்றுவது பன்னாட்டு மூலதனத்துக்கு தேவையான ஒன்றாகி இருக்கிறது.

“வாழ்க்கை நடத்த போதுமான வருமானம் இல்லை, வீடு இல்லை, முறையான கல்வி இல்லை, சுகாதார வசதிகள் இல்லை, பணம் இருந்தால்தான் மருத்துவ சேவை, குழந்தைகளுக்கு ஊட்டச் சத்து குறைபாடு என்று வாழ்க்கைப் பிரச்சனைகளில் அல்லாடிக் கொண்டிருக்கும் மக்களுக்கு வங்கி அட்டைகளையும், ஆதார் வழி பண பரிமாற்றத்தையும் முன்னேற்றத்தின் மருந்துகளாக முன் வைப்பது, பட்டினிக் கொடுமையில் போராடிக் கொண்டிருந்த மக்களைப் பார்த்து “ரொட்டி இல்லை என்றால் கேக் சாப்பிட வேண்டியதுதானே” (“Qu’ils mangent de la brioche”) என்று கேட்ட ஃபிரெஞ்சு அரசி மேரியைப் போன்ற கண்ணோட்டம்தான்.

மாபெரும் ஃபிரெஞ்சு புரட்சியைத் தொடர்ந்து அரசி மேரியும் அவரைப் போன்று உழைக்கும் மக்கள் மீது ஏறி மிதித்து தமது சுக வாழ்வை நடத்திய நூற்றுக் கணக்கான மேட்டுக் குடி சீமான்களும் மரண தண்டனை விதிக்கப்பட்டு தமது தலைகளை இழந்தனர். அது போல இந்திய மக்களின் பொறுமை அணை உடைக்கும் போது அனைத்து விதமான பிற்போக்குகளையும், ஆளும் வர்க்க மேட்டுக் குடி திமிரையும் ஏறி மிதித்து அடித்துச் சென்று விடும்.

ஆதார் அட்டை மூடத்தனத்தை மக்கள் மொழியில் அம்பலப்படுத்தும் ஒரு குறும்படம்.

Series Navigation<< ஆதார் – விற்பனை பொருளாகும் இந்தியன், ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறை கருவிடிஜிட்டல் பொருளாதாரம் – அவசியம் பார்க்க வேண்டிய விவாதம் >>

Permanent link to this article: http://new-democrats.com/ta/aadhaar-to-access-toilet-video/

Leave a Reply

Your email address will not be published.

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
ஜல்லிக்கட்டு போராட்ட வன்முறை : மதுரை உண்மை அறியும் குழு அறிக்கை

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் போராட்டக்களத்தில் இருந்து வெளியூர் இளைஞர்களோ, ஊர் மக்களோ வன்முறையில் ஈடுபடவில்லை. ஊர்க்கமிட்டியில் உள்ள உள்ளூர் அ.தி.மு.க.வினர் முதலில் கல்லால் எறிந்து வன்முறையைத் தூண்டியுள்ளனர்....

அமெரிக்காவில் தோண்டத் தோண்ட டாலர் – பட விளக்கம்

அமெரிக்காவில் தோண்டத் தோண்ட டாலர் - பட விளக்கம்

Close