பாய்ந்தது பாசிசம் – ஆனந்த் தெல்தும்டே கைது – புஜதொமு ஐடி ஊழியர்கள் பிரிவு கண்டனம்

தன்னுடைய பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராக செயல்படுபவர்களை, கௌரி லங்கேஷ்சை கொன்றது போலக் கொலை செய்வது, அல்லது தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி கைது செய்து நிரந்தரமாக சிறையில் அடைப்பது என்று இந்து மதவெறி கும்பல் செயல்படுகிறது. அந்த வகையில் முற்போக்கு சிந்தனையாளரும் சமூக செயல்பாட்டாளருமான பேராசிரியர் ஆனந்த் தெல்தும்டே இன்று அதிகாலை புனா போலீசாரால் கைது செய்யபட்டுள்ளார். “மோடியைக் கொல்ல சதி” என்ற பொய்யான முகாந்திரத்தின் கீழ் பதியப்பட்ட எல்கார் பரிஷத் வழக்கில், ஊஃபா சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பேராசிரியர் ஆனந்த் தெல்தும்டே

இந்த வழக்கில் ஏற்கனவே சுதா பரத்வாஜ், வெர்னன் கொன்சால்வேஸ், அருண் பெரேரா, தெலுங்கு கவிஞர் வரவர ராவ் உள்ளிட்ட 9 பேர் கைது செய்து பல மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மனித உரிமைப் போராளிகள், தொழிலாளர் நல வழக்கறிஞர்கள், அறிவுத்துறையினர் என சமூகத்தின் முற்போக்கு சக்திகள் அனைவரையும் அச்சுறுத்தி அடக்குவதற்கு ஆள்தூக்கி ஊஃபா சட்டத்தை மோடி அரசு பயன்படுத்துகிறது. ஆனந்த் தெல்டும்டேவை பிப்ரவரி 11-ஆம் தேதி வரை கைது செய்யக் கூடாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பைக் கூட மதிக்காமல் அவரை அடாவடித்தனமாக கைது செய்துள்ளனர்.

பாஜக அரசின் இந்த பாசிச நடவடிக்கையை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஐடி ஊழியர்கள் பிரிவு வன்மையாகக் கண்டிக்கிறது.

இவண்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஐ.டி. ஊழியர்கள் பிரிவு.

 

Permanent link to this article: http://new-democrats.com/ta/anand-teltumde-arrest-ndlf-itemployeeswing-condemns/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
வட்டிக் கடன்கள் – 1

வணிகர்களுக்கு, பணக்காரர்களின் ஆடம்பர நுகர்வுக்கு, விவசாயிகள் சிறு வணிகர்களுக்குக் கொடுக்கப்படும் கடன் எப்படிப்பட்டது? என்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது?

இந்திய ஆங்கிலேயர்கள் : வேகமாக வளரும் இந்தியாவின் புத்தம் புதிய சாதி

கடுமையான போட்டி நிலவும் நுழைவுத் தேர்வுகள் ஏதுமின்றி, சர்வதேச முறைகளைக் கொண்டு மதிப்பீடு செய்து இடம் வழங்கப்படுகிறது. போட்டிகள் அதிகமற்ற, முழுமையான, ஆளுமைகளாக உருவாக இந்த வகை...

Close