“ஏங்க, எனக்கு C பேண்ட் போட்டீங்க? சம்பளம் கிம்பளம் எதாவது குறைஞ்சது, பார்த்துக்கோங்க.”
“ஏய் C தான போட்டாங்க, D-யா போட்டாங்க? நீ வேற ரிலீஸ் கேட்டையா, வேற புராஜக்ட்ல இருந்தெல்லாம் கால் பண்றாங்களாமே உனுக்கு. அதை கேட்டு நம்ம பசங்க யாரானும் போட்டிருக்கலாம்.”
“இனிமே வீக் எண்ட் வரமாட்டேன், புராஜக்ட் பண்ண மாட்டேன், எப்படி புராஜக்ட் ரிலீஸ் பண்றீங்கன்னு பாக்றேன்.”
“ஏன் இப்பிடி முறுக்கிகிட்டு இருக்க குமாரு, உனக்கு என்னா வேணும்? (யோவ் இங்க வாய்யா, உடனடியா குமாருக்கு விசா இனிஷியேட் பண்றே!) குமாரு, விசா இனிஷியேட் பண்றோம், ஃபாரின் போற. பறக்க விட்டு அழகு பார்க்கிறவன்டா நான். (கால்ல விழு குமாரு.) போ குமாரு, இனி 3 வருசம் அங்கதான். யாருக்கு தெரியும், அங்கேயே செட்டில் ஆயிடலாம். புராஜக்ட் மட்டும் முடிச்சிடு. நெருப்பு மாதிரி வேல செய்யணும், தியாகம்தான் உன்னை உயர்த்தும்.”
நன்றி : சில்லறை பசங்க