Author's posts
மக்களின் உணவுப் பாதுகாப்பை பறிக்கும் புதிய வேளாண் சட்டங்களை கிழித்தெறிவோம்!
டெல்லியைப் போன்றே தமிழகத்தையும் போராட்டக்களமாக்குவோம்!
கார்ப்பரேட் நலன்களுக்காக மக்கள் விரோத சட்டங்களை இயற்றும் பாசிச மோடிக்கு பாடம் புகட்டுவோம்!
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தமிழ்நாடு – புதுச்சேரி – 9444442374
Permanent link to this article: http://new-democrats.com/ta/dec8-farmers-bharathbandh/
கொரோனா நோய்த்தொற்று ஏற்படுத்தியிருக்கும் சூழலை பயன்படுத்திக்கொண்டு ஐடி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை சட்டவிரோதமாக வேலையை விட்டு நீக்குவதும், ராஜினாமா செய்யும்படி பல வழிகளில் நிர்ப்பந்தித்து வருவதையும் நாம் தொடர்ந்து அம்பலப்படுத்தியும் எதிர்த்தும் வந்துள்ளோம்.
இந்நிலையில் தற்போது ஐடி ஊழியர்களுக்காக களத்தில் நின்று செயல்படும் தொழிற்சங்கங்களை முடக்கும் நோக்கில் தொழிற்சங்க முன்னணியாளர்களை குறிவைத்து சட்டவிரோதமாக பணி நீக்கம் செய்யும் வேலையில் ஐடி நிறுவனங்கள் இறங்கியுள்ளன.
Permanent link to this article: http://new-democrats.com/ta/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d/
இந்த இதழில் வெளியான கட்டுரைகள்:
ஊரடங்கு, ஊரடங்குன்னு தொடர்ந்தோம்னா, நாசமாய்ப் போய்டுவோம்!
இந்தியா – சீனா முறுகல் போக்கு: மோடி அரசின் சவடாலும் சரனாகதியும்!
சுயசார்பு இந்தியா: மோடியின் மற்றொரு பித்தலாட்டம்!
உணவுப் பாதுகாப்பை அச்சுறுத்தும் வேளாண் சந்தை சீர்திருத்தங்கள்!
கார்ப்பரேட்டுகளின் பலிபீடத்தில் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு!
ஊரடங்கு அல்ல, அறிவிக்கப்படாத அவசர நிலை!
நாய் வாலை நிமிர்த்த முடியாது! போலீசை திருத்த முடியாது!!
நீதிமன்றத்தின் ஆணவப் படுகொலை!
நீதியில்லையேல், அமைதியில்லை!
Permanent link to this article: http://new-democrats.com/ta/puthiya-jananayagam-jun-jul-2020-pdf/
தென்னைமரத்தில் காய்ந்த மட்டையின் முடிவை கண்டு இளங்குறுத்துக்கள் எவ்வித பரிவுமின்றி ஏளனம் செய்ததை பார்த்து காய்ந்த மட்டை சிரித்து கொண்டே கூறியதாம், ‘எனது நிலை போல உனக்கு வரும் நாள் மிக தொலைவில் இல்லை’ என்று.
ஆகவே ஐ. டி. ஊழியர்களே, நமது சக ஊழியருக்கு நெருக்கடி வரும்போது அவருக்கு உறுதுணையாக இல்லாமல், கண்டும் காணாமலும் இருந்தோமானால் நாளை நமக்கும் இந்த நெருக்கடி ஏற்படும் என்பதை மறவாதீர்கள்.
Permanent link to this article: http://new-democrats.com/ta/%e0%ae%85%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-35-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%b8%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0-%e0%ae%aa/
கடந்த 25.3.2020 முதல் லாக்டவுன் அறிவிக்கப்பட்ட போது, மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் 29.3.2020 அன்று ஒரு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவின் அடிப்படையில், மொத்த லாக்டவுன் காலத்துக்கும் முழு சம்பளம் அளிக்குமாறு அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் உத்தவிட்டிருந்தது.
இந்நிலையில், மேற்படி வழக்கில் உச்சநீதிமன்றம் 12.6.2020 அன்று தீர்ப்பு சொல்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தீர்ப்பு வழங்கவில்லை. மாறாக, ஜூலை இறுதி வாரத்துக்கு ஒத்திவைத்துள்ளது.
Permanent link to this article: http://new-democrats.com/ta/lock_down-salary-case-judgement-postponed/
இரவு பகல் பாராது அயராது உழைத்த ஆயிரக்கணக்கான ஐ.டி. ஊழியர்களது அர்பணிப்பே இதனைச் சாத்தியமாக்கியது என்பதை நாம் அறிவோம். ஆனால் இன்று நிலைமைகள் சற்று சீரடைந்தவுடன், பல மென்பொருள் நிறுவனங்களின் மனிதவள மேம்பாட்டுதுறை அதிகாரிகள், ஊழியர்களை வேலையை விட்டு அனுப்பும் தங்களது வழக்கமான பணியைத் துவங்கிவிட்டனர்
Permanent link to this article: http://new-democrats.com/ta/cts-layoff-retrenchment-during-covid19-press-release-ta/
மத்திய அரசான பிஜேபி கும்பல் முகலாயர்களின் இஸ்லாமிய ஆங்கிலேய காலனிய நினைவுச் சின்னங்களை முழுவதுமாக அகற்றிவிட்டு பார்ப்பனிய சித்தாந்தத்தை நிலை நிறுத்தக் கூடிய வகையில் சென்ட்ரல் விஸ்டாவில் தாமரை வடிவிலான மிகப்பெரிய கட்டுமானத்தை நிறுவ திட்டமிட்டிருக்கிறார்கள். இதை 2022 முதல் 2024க்குள் கட்டி முடிக்க திட்டமிட்டிருக்கிறார்கள். 2024-ல் ஆர்எஸ்எஸ் ஆரம்பித்து நூறு ஆண்டுகள் முடிவடையப் போகிறது
Permanent link to this article: http://new-democrats.com/ta/central-vista-plan-rss-political-agenda/
அனைவரும் இந்த கம்யூனிட்டி கிச்சனில் சென்று சாப்பிட்டு வருவார்கள் அந்த கம்யூனிட்டி கிச்சனில் குழந்தைகளுக்கு ஏற்ற மாதிரியும்,முதியவர்களுக்கு ஏற்ற மாதிரியும், கர்ப்பிணிகளுக்கு ஏற்ற மாதிரியும் சத்தான உணவுகளை தயாரித்து கொடுப்பார்கள். அந்த தொழிலாளர்களின் குழந்தைகள் படிப்பதற்கு பள்ளிக்கூடங்கள் அந்த கூட்டுறவு பண்ணையில் வளாகத்திற்குள்ளேயே இருக்கும். அந்த தொழிலாளிக்கு உடல்நிலை சரியில்லை என்றால் மருத்துவமனைகள் இந்த கூட்டுறவு பண்ணைகளுக்குள்ளே இருக்கும். மற்றும் தொழிலாளர்கள் வேலை செய்த நேரம் தவிர தங்கள் நேரத்தை பொழுது போக்குவதற்கு நீச்சல் குளம்,விளையாட்டு மைதானம்,திரையரங்கு மற்ற பிற அனைத்தும் அந்தக் கூட்டுறவு பண்ணைகளுக்குள்ளேயே இருக்கும்
Permanent link to this article: http://new-democrats.com/ta/inherent-crisis-of-capitalism-socialism-is-the-way/
நெருக்கடியான காலம் இந்தச் சாக்கு எல்லாவிதமான அடக்குமுறைகளையும், உரிமைகள் பறிக்கப்படுவதையும் நியாயப்படுத்திவிடுகிறது. அரசின் சட்டவிரோதமான நடவடிக்கைகளைக்கூடக் கேள்விக்கு உட்படுத்த முடியாத நிலைமையைத் தோற்றுவிக்கிறது.
கரோனா நோய்த் தொற்றை எதிர்கொள்ளுவது என்ற பெயரில் மேலிருந்து திணிக்கப்பட்ட ஊரடங்கு, ஆரோக்கிய சேது செயலி, டிரோன்களின் மூலம் பொதுமக்களின் நடமாட்டத்தைக் கண்காணிப்பது, ஊரடங்கை மீறுபவர்களுக்குத் தன்னிச்சையாக போலீசே தண்டனை அளிப்பது, அபராதம் விதிப்பது என்பதில் தொடங்கி கடைசியாக அறிவிக்கப்பட்டிருக்கும் தொழிலாளர் சட்டத் திருத்தங்கள் வரையிலும் எதுவொன்றும் சட்டப்படியாகவோ, பொதுமக்களின் நலனை முன்னிட்டோ அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படவில்லை.
Permanent link to this article: http://new-democrats.com/ta/puja-05-2020-editorial/
ரோடு போடுவதற்கு முன்பு,அந்த தார் போன்ற அடர்த்தியான திரவத்தை ஒரு தொழிலாளி காலில் ஒரு சாதாரண ரப்பர் செருப்பு போட்டுக்கொண்டு தலையில் வெயிலை மறைப்பதற்கு ஒரு தொப்பி கூட அணியாமல் துண்டை மட்டும் தோளில் போட்டுக்கொண்டு அவர் பாட்டுக்கு மிகுந்த விரக்தியுடனும் வேறு வழி இல்லாமலும் அந்த வேலையை செய்துகொண்டிருந்தார். வெயிலின் உக்கிரம் தாங்க முடியவில்லை.
Permanent link to this article: http://new-democrats.com/ta/kundrathur-road-construction-workers-corona-lockdown/
உலகத் தரம் வாய்ந்த இந்த கட்டிடங்களை நமக்காக எழுப்பியவர்கள் யார்? பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகளின் வசதிகளை மலிவு விலையில் நமக்காக ஏற்படுத்திக் கொடுத்தது யாருடைய உழைப்பு? நாம் பயன்படுத்தும் சாலைகளை, நமது வீடுகளை, நாம் வேலை பார்க்கும் அலுவலகத்தை, ஏன் நாம் வசிக்கும் இந்த நகரத்தையே நமக்காக செதுக்கிக் கொடுத்தவர்கள் யார்? தில்லி, மும்பை, சென்னை என இந்தியாவின் புகழ் பெற்ற ஒவ்வொரு நகரத்தின் நவீனத்திலும் புலம் பெயர் தொழிலாளர்களின் வேர்வையும் இரத்தமும் கலந்துள்ளது.
Permanent link to this article: http://new-democrats.com/ta/plight-of-migrant-labours/
தொற்று நோய் மற்றும் அதன் பாதிப்பு காலங்கள், என்பது பா.ஜ.க அரசைப் பொறுத்த வரை உழைக்கும் வர்க்கத்தின் மீது ஏறித் தாக்கவும், அதனிடமிருந்து குறைந்தபட்ச ஜனநாயக மற்றும் பொருளாதார உரிமைகளைக் கூட பிடுங்கவும் கிடைத்த அருமையான வாய்ப்பு. ஏனென்றால், பாஜகவைப் பொறுத்தவரை மூலதனத்தின் வளர்ச்சிதான் பொருளாதாரத்தின் வளர்ச்சி
Permanent link to this article: http://new-democrats.com/ta/corona-lockdown-stop-war-against-labors-ndlf-statement/
- Filed under கொரோனா
-
March 23, 2020
March 23, 2020
உலகம் முழுவதும் மாபெரும் அச்சத்தில் உறைந்துள்ளது. டிசம்பர் மாதத்தில் இறுதியில் சீனாவில் ஆரம்பித்த வைரஸ் தாக்குதலானது இன்று உலகின் பெரும்பாலான நாடுகளை சூறாவளியாக தாக்குகிறது.
சீன அரசாங்கம் இந்த வைரஸை தடுக்க மேற்கொண்ட முயற்சிகளும்,ஏற்படுத்திய திட்டங்களும் மற்ற நாடுகளில் ஏற்படுத்த முடியுமா என்பதும் பெரும் கேள்விக்குறியாக உள்ளது.
இந்த வைரஸ் தாக்குதலின் போது சீன நாடு என்பது இத்துடன் முடிந்துவிட்டது என்று உலகம் கணித்தது. ஆனால் இன்று அதே வைரஸ் உலகின் பெரும்பாலான நாடுகளில் தாக்கம் ஏற்படுத்தி பெரும் உயிர்ச் சேதங்கள் மட்டுமல்ல பொருளாதார ரீதியாக பலத்த பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது.
Permanent link to this article: http://new-democrats.com/ta/corona-and-economy/
நம்முடைய தாத்தா பாட்டி காலத்தில் பிளாக் நோய், காலரா, பெரியம்மை போன்ற கொள்ளை நோய்களுக்கு மக்கள் கொத்துக் கொத்தாக இறந்து போனதாக நமது குழந்தைப் பருவத்தில் கதைகளாகக் கேட்டுள்ளோம்.
நம்முடைய காலத்தில் இது போன்ற கொள்ளை நோய்களை நாம் பார்த்திராவிட்டாலும் சுனாமி பேரலை, வருதா புயல், நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்ட மழை வெள்ளப்பெருக்கு என இயற்கைப் பேரிடரில் பலர் தங்களுடைய உடமைகளையும் உயிர்களையும் இழந்த துயரத்தை நாம் எதிர்கொண்டுள்ளோம்.
ஆனால் இன்று உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது. உலக சுகாதார நிறுவனம் இதை உலகப் பேரிடராக அறிவித்துள்ளது. இதுவரை சுமார் 150 நாடுகளில் இந்த நோய் பரவியுள்ளது.
Permanent link to this article: http://new-democrats.com/ta/corona-emergency-situation-it-employees/
ஒரு ஜனநாயகத்தில் அரசியல் சாஸனம் ஆட்சி செய்யாத போது, அதன் அமைப்புகள் உள்ளீடற்றதாக மாறும்போது அது பெரும்பான்மைவாத ஆட்சியாகத்தான் மாறும். ஒரு அரசியல் சாஸனம் தொடர்பாக உங்களுக்கு மாற்றுக் கருத்து இருக்கலாம். ஆனால் இந்த அரசாங்கம் செய்வதுபோல அரசியல் சாஸனமே இல்லாததுபோல் ஆட்சி செய்வது ஜனநாயகத்தை புதைகுழியில் தள்ளுகிறது. ஒரு வேளை அதுதான் அவர்களின் இலக்கு என தோன்றுகிறது. இதுதான் நமது பாணி கரோனா வைரஸ். நாம் நோய்மையுற்றவர்கள்.
Permanent link to this article: http://new-democrats.com/ta/our-version-of-coronavirus-arundhati-roy-on-delhi-violence-ta/
Load more