இந்திய மென்பொருள் பெரு நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கை

இந்தியாவின் 5 பெரிய மென்பொருள் நிறுவனங்களான டி.சி.எஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ, எச்.சி.எல், காக்னிசன்ட் ஆகியவை 2015-ம் ஆண்டில் 2014-ஐ விட 24% குறைவான ஊழியர்களையே புதிதாக எடுத்தன. காக்னிசன்ட் 2014-ஐ விட 74.6 சதவீதம் குறைவாகவும் எச்.சி.எல் 71 சதவீதம் குறைவாகவும், டி.சி.எஸ் 6.6 சதவீதம் குறைவாகவும் புதிய ஊழியர்களை சேர்த்தனர். கடந்த சில ஆண்டுகளாக பெருமளவு ஊழியர்களை இழந்து வரும் இன்ஃபோசிஸ் மட்டும் புதிய ஊழியர்கள் சேர்க்கையை (23,475) 111.4 சதவீதம் உயர்த்தியது. டிசம்பர் 2015 கடைசியில் இந்த 5 நிறுவனங்களின் மொத்த ஊழியர் எண்ணிக்கை 13.4 லட்சம் ஆக இருந்தது.

ஆனால், 2015-ல் இந்த நிறுவனங்களின் மொத்த டாலர் வருமானம் 9.8 சதவீதம் அதிகரித்திருந்தது. இந்நிறுவனங்கள் ஒரு ஆண்டில் ஒரு ஊழியருக்கு சம்பாதிக்கும் வருமானம் US$ 45,000 – US$ 52,000 (சுமார் ரூ 30.6 லட்சம் முதல் ரூ 35.3 லட்சம்). இதை 2020-க்குள் US$ 80,000 (சுமார் ரூ 54.4 லட்சம்) அளவுக்கு உயர்த்தப் போவதாக இன்ஃபோசிஸ் அறிவித்திருக்கிறது.

அதாவது, வருமானத்தை அதிகரித்துக் கொண்டே போகும் அதே நேரம் ஊழியர்கள் எண்ணிக்கையை குறைப்பது, அதிலும் குறைந்த சம்பளத்திலான ஊழியர்களின் விகிதத்தை அதிகரிப்பது, இதன் மூலம் நிறுவனத்தின் லாபத்தை மேலும் மேலும் அதிகரிப்பது என்பது இந்நிறுவனங்களின் செயல்திட்டமாக உள்ளது.

இது தொடர்பான செய்தி Automation Reduces Hiring of TCS, Infosys, Wipro, HCL, Congnizant by 24 percent

Permanent link to this article: http://new-democrats.com/ta/automation-reduces-hiring-of-big-five-it-firms-by-24-per-cent/

Leave a Reply

Your email address will not be published.

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
டுவிட்டர், ஃபேஸ்புக்கும் குப்பை செய்திகளும்

"இப்போது நாம் பார்க்கும், எல்லோரும் ஒரே விஷயத்தை ஒரே குரலில் பேசும் ஊடகச் சூழலுக்கு தான் ரசிகன் இல்லை என்கிறார் ஈவ் வில்லியம்ஸ். இந்தச் சூழலில் பெரிதாக...

‘முன்னேறிய’ ஜப்பானில் ஊழியர்களைக் கொல்லும் அலுவலக வேலைச் சுமை

தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சிக்கொள்வதிலும், அவர்களை சுரண்டி ஒடுக்குவிதலும் வளர்ந்த நாடு, வளரும் நாடு இரண்டுக்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லை. அந்த வகையில் ஜப்பானியத் தொழிலாளர்களின் பிரச்சினை...

Close