பி.ஈ, இப்போது எம்.பி.ஏ – பல தனியார் கல்லூரிகள் எதற்கும் லாயக்கில்லை

பெரும் ஆராவாரத்துடன் தனியார்மயமாக்கப்பட்டு வரும் இந்தியாவின் உயர் கல்வித்துறை கடுமையான நெருக்கடியில் சிக்கியுள்ளது.

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை பற்றிய இந்தச் செய்தியை பார்க்கவும்..

“இந்த வருடம், பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வில் கலந்துகொண்ட 1.47 லட்சம் மாணவர்களுக்கு முக்கியமான பிரிவுகளில் ஒற்றைச் சாளர முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வை (TNEA – 2017) நடத்தும் அண்ணா பல்கலைகழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 46% (68,735) இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் மருத்துவ படிப்புக்கான (MBBS/BDS) கலந்தாய்வு தொடங்கியதும் ஒரு சில நூறுபேர் பொறியியல் கல்லூரி ஒதுக்கீட்டை கைவிடும் சாத்தியமும் உள்ளது.”

“இந்த வருடம், பொறியியல் படிப்புக்காக நடத்தப்பட்ட கலந்தாய்வில் பல கல்லூரிகளில் சேர்வதற்கு 100க்கும் குறைவான மாணவர்களே ஆர்வம் செலுத்தினர்”

“கட்டுமானத்துறை மிகப்பெரிய அளவுக்கு வீழ்ச்சியை கண்டிருக்கிறது எனவே சிவில் எஞ்சினியரிங் மீதான ஆர்வம் கடந்த ஐந்து ஆண்டுகளில் குறைந்துள்ளது. 2012-ம் ஆண்டு நடந்த கலந்தாய்வில் 19,097 இடங்களில் 14,707 இடங்களே நிரம்பின. அதன் தொடர்ச்சியாக இந்த வருடம் 25,257 இடங்களில் வெறும் 8,199 மாணவர்கள் மட்டுமே கட்டுமானத்துறை பிரிவை தேர்வு செய்தனர்”

“ஒவ்வொரு வருடமும் வருடங்களாக சூழ்நிலைகள் மாறுவதை பற்றிய விழிப்புணர்வுடன் கல்லூரிகளை தேர்வு செய்வதை மாணவர்கள் எச்சரிக்கையுடன் கையாள்கின்றனர், இந்த வருடம் பொறியியல் கலந்தாய்வில் கலந்துகொண்ட 614 பேர் எந்த பிரிவையும் தேர்வு செய்யவில்லை”.

மேலும் “ஆடி தள்ளுபடியில் பொறியியல் படிப்புக்கான இடங்கள் நிரப்படும் என்ற செய்தி முகப்புத்தகத்தில் காணக் கிடைத்தது. இந்தச் செய்தி வெளியான தேதி தெரியவில்லை ஆனால் மேலே சொல்லப்பட்ட செய்திக்கும் இதற்கும் பெரிய தொடர்பு உள்ளது”.

சமீபத்திய ஆடித் தள்ளுபடி வழக்கமாக சில்லறை விற்பனை மையமான தி.நகரில் இல்லை. அண்ணா பல்கலைக் கழகம் இருக்கும் கிண்டியில் கிடைக்கிறது. பொறியியல் கலந்தாய்வில் கலந்துகொள்ள அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வரும் மாணவர்களை தனியார் கல்லூரிகளின் ஊழியர்களும் ஆசிரியர்களும் மாணவர்களை வந்து சேரும்படி கூவிக்கூவி காலியான இடங்களை விற்க முயற்சி செய்கின்றனர்.

அவர்களின் இலக்கு கிராமப்புற மாணவர்களை கவர்வது அதிலும் முதல் தலைமுறை பட்டதாரிகளை தேர்வு செய்து குடும்பத்தில் ஒரு பட்டதாரியை உருவாக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தாலும் கட்டணம் செலுத்த வசதி இல்லாதல குடும்பங்களுக்கு கல்விக்கட்டணத்தில் சலுகை வழங்குவது போன்றவற்றின் மூலம் ஈர்க்க முயற்சிக்கின்றனர்.

கட்-ஆப் மார்க் அடிப்படையில் பயிற்சி கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது என்ற விவரங்கள் அடங்கிய பிரசுரம் மாணவர்களிடையே முகவர்களால் விநியோகம் செய்யப்படுகிறது. 180-க்கும் அதிகமாக மார்க் எடுத்தவர்களுக்கு முழுமையாக கட்டண சலுகை, அதற்கு குறைவாக எடுத்தவர்களுக்கு பகுதியளவு சலுகை என்கிறது அந்த பிரசுரம்.

சிலர் 25%, 50% மற்றும் 100% சலுகை என்று சதவீத அடிப்படையிலும் வேறு சிலர் ரூ 15,000, ரூ 10,000 என பணமாகவும் மதிப்பெண்ணை பொறுத்து தள்ளுபடி அளிக்கின்றனர்.

அதுமட்டுமல்ல, சில முகவர்கள்(கல்லூரி எடுபிடிகள்) விடாப்பிடியான முயற்சி செய்து பெற்றோர் அல்லது பாதுகாவலர் போல நடித்து கலந்தாய்வு கூடத்திற்குள்ளும் நுழைந்து விடவும் செய்கிறார்கள்.

இவ்வாறாக, லாப நோக்கத்தில் செயல்படும் தனியார் வசம் சென்றதால் பொறியியல் படிப்பு கடைச்சரக்காக்கப்பட்டு விட்டது.

பொறியியல் படிப்புதான் இப்படி, மேலாண்மை துறையில் மேற்படிப்புக்கு சில லட்சம் செலவு செய்தால் கண்டிப்பாக வேலை கிடைக்கும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அதுவும் உண்மையில்லை என்பதை இந்த செய்தி உணர்த்துகிறது. 1 in 2 MBAs in India fails to land a job

“2016-ம் ஆண்டில் மாணவர்கள் படிக்கும் கல்லூரியில் நடத்தப்படும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு 75,568 பேர் மட்டுமே வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர் (அதாவது 3,080 கல்லூரிகளில் படிக்கும் மொத்தம் 1.49 லட்சம் மாணவர்களில்)”.

233 கல்லூரிகளில் வணிக கல்விக்கான சேர்க்கை குறைந்து மூடப்பட்டு விட்டன, அதாவது அவற்றில் இனிமேலும் MBA பட்டப்படிப்பை நடத்துவது சாத்தியமில்லை. 2017-ல் 2,981 கல்லூரிகளில் வேலை கிடைத்த மாணவர்களின் எண்ணிக்கை 69,982 பேராக குறைந்துள்ளது.

கடந்த வருடம் ASSOCHAM நடத்திய ஆய்வின் அடிப்படையில் 20 முக்கிய வணிகக் கல்லூரிகளை தவிர்த்துவிட்டு பார்த்தால் இந்தியாவில் பயிலும் வணிகக் கல்லூரி மாணவர்களில் 7% பேருக்கு மட்டுமே படித்து முடித்த உடன் நேரடியாக வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.

பல லட்சக்கணக்கான ஏழை மாணவர்கள் தங்கள் படிப்புக்காக பல லட்சம் ரூபாய் பணத்தையும் சில ஆண்டுகளையும் இழந்திருக்கின்றனர். இதை எல்லாம் யார் ஈடுகட்டுவார்கள்? கல்லூரிகளா? அவற்றை ஒழுங்குபடுத்துவதில் தவறிழைத்த AICTE-ஆ? அல்லது உயர்கல்வியை தனியார்மயமாக்கிய அரசா?

மொழிபெயர்ப்பு : வெளிச்சம்

Permanent link to this article: http://new-democrats.com/ta/be-now-mba-many-private-colleges-are-worthless-ta/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
வேலை போச்சு, நிவாரணம் வேண்டும் – நடுவர் மன்றம் அமைப்பு

ஒரு சாதாரண ஐ.டி ஊழியர் வேலையிலிருந்து நீக்கப்பட்டால் அடுத்து என்ன செய்ய முடியும்? பொதுவாக, ரிசியூமை துடைத்து, மெருகேற்றி புதிய ஒரு வேலை தேடுவதற்கு இறங்க வேண்டியதுதான்....

கருப்புப் பணம் : மலையைக் கெல்லி எலியைக் கூட பிடிக்காத மோடி

இவ்வாறு மோடி பொறுத்துக் கொள்ளச் சொன்ன தற்காலிக சிரமங்கள், பேரழிவாய கோடிக்கணக்கான மக்களை வதைத்துக் கொண்டிருக்கையில், கருப்புப் பணத்துக்கு எதிராகத் தொடுத்த போரின் லட்சணம் என்னவென்று பார்க்கலாம்.

Close