அமெரிக்க அரசு பல்வேறு விசாக்களை வழங்குகின்றது. பொதுவாக H1B, L1, B1 இந்த மூன்று வகை விசாக்களை தான் ஐடி நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன.
H1B விசா நீண்ட நாட்களுக்கு ஒரு ஊழியரை ஒரு அமெரிக்க நிறுவனம் பணிக்கு அமர்த்திக் கொள்வதற்கு வழங்கப்படுவது. இந்த விசாவிற்கு பணிக்கு அமர்த்தப்படும் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் அமெரிக்க டாலர்களில் வழங்கப்பட வேண்டும். ஊழியரும் தான் வாங்கும் சம்பளத்திற்கு அமெரிக்க அரசுக்கு வரி கட்ட வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு பிறகு விசாவை புதுப்பித்துக் கொள்ளலாம். ஆறு ஆண்டுகள் இருந்துவிட்டால் கிரீன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். கிரீன் கார்டு விண்ணப்பம் குறித்து அமெரிக்க அரசு முடிவெடுக்கும் வரை விசாவை புதுப்பித்துக் கொண்டே இருக்கலாம்.
L1 வகை விசா எச்1பி போன்றதே ஆனால் மிகவும் குறுகிய காலம் மட்டுமே இதை பயன்படுத்தி வேலை செய்ய முடியும். கிரீன் கார்டு அப்ளை செய்ய முடியாது. இந்தியாவிற்கு திரும்பி வந்துவிட வேண்டும்.
B1 விசா
மேற்சொன்ன இரண்டு வகை விசாக்களும் ஊழியர்களுக்கு அமெரிக்க நிறுவனங்களில் தொழிலாளர்களாக வேலை செய்வதற்காக வழங்கப்படுவது. ஆனால் b1 விசா ஊழியர்களுக்கானதல்ல. கம்பெனி முதலாளிகளுக்கு, ceo களுக்கு, நிர்வாகிகளுக்கு, business deal குறித்து பேசச் செல்லும் மார்க்கெட்டிங் finance ஆட்களுக்கு அல்லது project ன் உள்ளடக்கம் அதாவது project requirements வாங்குவதற்கு செல்லும் business analyst களுக்கு இது பொருந்தும்.
இந்த வகை விசாக்கள் குறுகியகால விசாவாகும். இதில் செல்பவர்கள் ஒன்றிரண்டு வாரங்கள் வரை அமெரிக்காவில் தங்கி தங்களது வேலையை முடித்துவிட்டு திரும்பி விட வேண்டும். இதில் செல்பவர்களுக்கு அமெரிக்க நிறுவனம் ஊதியம் எதுவும் வழங்கக் கூடாது. இந்தியாவிலிருந்து இவர்களை அனுப்பி வைக்கும் நிறுவனம்தான் மொத்த செலவுகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இவர்களுக்கென தனியான சம்பளம் எதுவும் கொடுக்கக் கூடாது, அவர்கள் வாங்கும் மாதாந்திர சம்பளத்தை தவிர. இவர்கள் அங்கு தங்கியிருப்பதற்கு ஆகும் செலவையும் சாப்பாட்டுச் செலவும் போக்குவரத்து செலவும் மட்டும் கொடுக்கலாம்.
B1 விசா குறைந்த பட்சம் 10 ஆண்டுகளுக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் அமெரிக்காவிற்கு சென்று வரலாம் என்ற முறையில் வழங்கப்படுகிறது.
ஆனால் சில ஐ,டி நிறுவனங்கள் முதல் இரண்டு வகை விசாக்களை பயன்படுத்துவதை விட்டு மூன்றாவது வகையிலான பி1 விசாக்களை பயன்படுத்தி ஐ.டி ஊழியர்களை மூன்று முதல் ஆறு மாதம் வரை அமெரிக்காவில் தங்க வைத்து வேலை வாங்குகின்றனர். இவ்வாறு செய்வதன் மூலம் அமெரிக்க டாலர்களில் இவர்களுக்கு சம்பளம் தர தேவையில்லை, வரி கட்டத் தேவையில்லை, விசா வாங்குவதற்காக பிரச்சினை இல்லை. நான்கு ஊழியர்களை வருடம் முழுவதும் இதுபோன்று மாற்றி மாற்றி அனுப்புவதன் மூலம் ஒருவர் நிரந்தரமாக அங்கேயே இருக்க வேண்டும் என்கிற தேவையை பூர்த்தி செய்து விடலாம்.
இது அமெரிக்க குடியேற்ற சட்டத்தின்படி தவறு. எச்1பி, எல்1 விசாக்களில் முறைகேடு செய்தால் அது நிறுவனத்தை பாதிக்கும். ஆனால் b1 விசா முறைகேடு சம்பந்தப்பட்ட ஊழியரை பாதிக்கும்.
இந்த விசாவை பயன்படுத்தி மேற்சொன்னபடி ஆண்டுக்கு மூன்று மாதம், ஐந்து மாதம் என்று ஊழியர்கள் வேலை செய்யலாம். ஆனால் அவர்கள் மற்றவகை விசாக்களுக்கு விண்ணப்பிக்கும்போது இது கண்டுபிடிக்கப்படும். அவர்களது விசா கோரிக்கை தள்ளுபடி செய்யப்படும். பி1 விசா காலம் முடிந்து புதுப்பிக்க அல்லது மீண்டும் விண்ணப்பிக்க சென்றால் அப்போதும் இது வெளிப்பட்டு விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
அமெரிக்காவில் இருக்கும்போது இது கண்டுபிடிக்கப்பட்டால் அமெரிக்க குடியேற்ற விதிகளின்படி கடுமையான தண்டனை பெற வேண்டியிருக்கும்.
இது தொடர்பாக சில செய்திகள்
- B-1 visas are the problem, not H-1Bs
- Infosys told to clarify B1 visa misuse allegations in US; stock down (news from 2011)