லெனின், பெரியார் – கார்ப்பரேட், பார்ப்பனிய பா.ஜ.கவுக்கு கிலி

த்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க (ஆர்.எஸ்.எஸ்) மதக் கலவரங்களை தூண்டி மக்களை பிளவுபடுத்தி அதன் மூலமாக ஆட்சியை பிடிப்பது, ஆட்சியை பிடித்ததும் கார்பரேட் கொள்ளையர்களுக்கு ஆதரவான திட்டங்களை நடைமுறைப்படுத்துவது, அதனால் உழைப்பாளி மக்களுக்கு எந்த பாதிப்பு வந்தாலும் கண்டுகொள்ளாமல் செயல்படுவது மறுக்க முடியாத விஷயங்கள். அந்த வரிசையில்தான் கருப்புப்பண ஒழிப்பேன் என்று பணநீக்க நடவடிக்கை (அதே நேரம் மோடியின் குஜராத் நண்பர்கள் வங்கிகளை கொள்ளை அடித்துக் கொண்டிருந்தார்கள்), ஜி.எஸ்.டி (உழைக்கும் மக்களுக்கு விலைவாசி உயர்வு), மீத்தேன் திட்டம், சாகர்மாலா திட்டம் (தமிழக மக்களின் வாழ்வாதாரம் அழிப்பு) என்று அடுத்தடுத்து மக்கள் மீது தாக்குதல்களை கட்டவிழ்த்து வருகிறது.

பா.ஜ.க-வில் இருந்து கொண்டு பார்ப்பனிய ரவுடியாக செயல்படும் எச். ராஜா, லெனின் சிலை உடைக்கப்பட்டது போல் தமிழ்நாட்டில் பெரியார் சிலைகளும் உடைக்கப்படும் என்று நரித்தனமாக பேசியுள்ளார்.

இதுமட்டுமின்றி தொழிலாளர் சட்டங்கள் கார்ப்பரேட் ஆதரவாக திருத்தப்பட்டு தொழிலாளி வர்க்கத்தின் உரிமைகளை பறிக்கும் வேலைகளையும் பா.ஜ.க அரசு செய்து வருகிறது.

இதே பா.ஜ.க கட்சிதான் நடந்து முடிந்த திரிபுரா தேர்தலில் கூட்டணி வைத்து பல்வேறு குளறுபடிகள் செய்து வெற்றி பெற்றது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்த மார்க்சிஸ்ட் கட்சியினர் தோல்வியை சந்தித்தது. பா.ஜ.க ஆட்சி ஆர்.எஸ்.எஸ். காவி கும்பல் திரிபுராவில் உள்ள தோழர் லெனின் சிலையை தகர்த்து தங்களுடைய பார்ப்பனீய வெறிவை வெளிப்படுத்தினார்கள்.

அவருடைய சிலையை உடைப்பதற்கு காரணம் தோழர் லெனின் தன் வாழ்நாள் கடைசி வரையிலும் உழைப்பாளி மக்களின் நலனுக்காக சிந்தித்தவர், தொழிலாளர்களை ஒன்றிணைத்து புரட்சி நடத்தி  உழைக்கும் மக்கள் ஆட்சி நடத்த முடியும் என்று நிறுவி காட்டியவர். அப்படிப்பட்ட ஆசானின் மீது இவர்களுக்கு கோபம் வரக் காரணம் அவருடைய கருத்துக்கள் உழைப்பாளி மக்களை கொள்ளையடிக்கும் பணக்கார, உழைக்காத ஆளும் வர்க்கத்திற்கு (பார்ப்பனிய பனியா கும்பல், நீரவ் மோடி, லலித் மோடி, மல்லையா என்று இவர்களின் பட்டியல் நீளும்) எதிராக உள்ளது என்பதுதான்.

தோழர் பகத்சிங்கை தூக்கில் போடுவதற்கு முன்புவரை லெனின் புத்தகங்களை படித்து கொண்டிருந்தார். நம்நாடு சுதந்திரம் அடைந்ததும் யாரிடம் அதிகாரம் செல்லும் என்பதே முக்கியம். பணக்காரரிடம்  அதிகாரம் போவதை தடுத்து நிறுத்த வேண்டும். உழைக்கும் வர்க்கத்திடம் செல்ல வேண்டும் இல்லையென்றால் மீண்டும் மீண்டும் உழைக்கும் மக்கள் அடிமையாக வாழவே வழிவகுக்கும் என்றார் பகத்சிங். இந்த கருத்துக்கான அடிப்படை லெனின் கற்றுக் கொடுத்த அரசியல்.

தோழர் லெனின், பெரியார் ஆகிய இருவரும் சமூக ஏற்றத் தாழ்வுகளை (நம் நாட்டில் சாதிய வேற்றுமைகள்) தொடர்ச்சியாக எதிர்த்தவர்கள், உழைக்கும் மக்கள் அதிகாரத்தை பெற வேண்டும் என்றவர்கள்.

பா.ஜ.க-வில் பார்ப்பனிய ரவுடியாக செயல்படும் எச். ராஜா, லெனின் சிலை உடைக்கப்பட்டது போல் தமிழ்நாட்டில் பெரியார் சிலைகளும் உடைக்கப்படும் என்று நரித்தனமாக பேசியுள்ளார். தன்னை பிரபலப்படுத்திக் கொள்வதற்காகவும், பார்ப்பனிய திமிரில் கலவரத்தை தூண்டும் வகையிலும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-வின் சித்தாந்ததை இப்படி போட்டு உடைத்து விடுகிறார் என்பது நாம் அறிந்ததுதான்.

தோழர் லெனின், பெரியார் ஆகிய இருவரும் சமூக ஏற்றத் தாழ்வுகளை (நம் நாட்டில் சாதிய வேற்றுமைகள்) தொடர்ச்சியாக எதிர்த்தவர்கள், உழைக்கும் மக்கள் அதிகாரத்தை பெற வேண்டும் என்றவர்கள். எனவே அவர்களுடைய சிலையை பார்த்தே பார்ப்பனிய ஆதரவாளர்கள் கிலி கொள்கிறார்கள் என்பதே உண்மை.

பகுத்தறிவு, சுயமரியாதை, சமத்துவம் பேசியவர்களை தொடர்ச்சியாக கொலை செய்து தனது வெறியை தீர்த்துக் கொண்டிருக்கிறது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க காவி கும்பல். அந்த வரிசையில் கவுரி லங்கேஷ், பன்சாரே, தபோல்கர், கல்புர்கி, ரோஹித் வெமுலா என்று இந்த பட்டியல் நீளமானது. மேலும், உழைக்கும் மக்களுக்காக பொதுவுடைமை பேசினாலும், தொழிலாளர்களுக்கு நலனாக பேசினாலும் அது பார்ப்பனிய சித்தாந்தத்திற்கு எதிரானது என்பதால் அவற்றை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.

தோழர் லெனின் தலைமையில் பாட்டாளி வர்க்க ஆட்சி நிலவிய சோவியத் ரஷ்யாவுக்குச் சென்று வந்த பெரியார், இதுவரை கனவாக இருந்ததை நடைமுறையில் மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றார். “கடவுளால் செய்ய முடியாததை கம்யூனிஸ்ட்கள் செய்து முடிப்பார்கள்” என்று பெருமையோடு பேசினார்.

சிலைகளை இடிப்பதன் மூலம் உழைக்கும் மக்களுக்கான சித்தாந்தத்தை அழித்து விட முடியாது என்பதுதான் உண்மை. கார்ப்பரேட் சுரண்டலை அம்பலப்படுத்தி எதிர்ப்பதற்கான லெனினிய கருத்துக்களை கற்று செயலில் இறங்குவது வரை கார்பரேட் கொள்ளையர்களின் ஆட்சிதான் நடக்கும். அவர்களது ஆதரவில் மதவெறியர்களின் வெறியாட்டம் தொடரும்.

வாருங்கள் உழைக்கும் மக்களாக ஒன்றிணைந்து தொழிற்சங்கத்தின் வாயிலாக தொழிலாளி வர்க்கத்துக்கான உலகை படைப்போம்.

– சுகேந்திரன்

Permanent link to this article: http://new-democrats.com/ta/bjp-combines-corporate-rule-and-brahminical-oppression/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
விவசாயி, தொழிலாளி, தொழில்நுட்ப வளர்ச்சி : நாடு முன்னேற என்ன வழி?

நம் நாட்டின் விவசாயிகளில் எத்தனை பேர் வானூர்தியை அருகில் நின்று பார்த்திருப்பார்கள். எத்தனை பேர் அதில் பயணம் செய்திருப்பார்கள்? சோவியத்தில் ஒவ்வொரு கூட்டுப் பண்ணைக்கும் சொந்தமாக சில...

படிப்பதும் ஒரு போராட்டமே! படித்தெழு தொழிலாளி வர்க்கமே!

ஏன் படிக்க வேண்டும் என்பது நமக்கு தெரிந்தவுடனேயே, எதைப் படிக்கவேண்டும்? என்ற தெளிவையும் பெற வேண்டும். எழுதப்பட்ட எல்லாமும் பொதுவானது என்று நம்புவதும் தவறு.

Close