வாட்ஸ்ஆப் குழுவில் அடாவடி செய்பவர்களை எப்படி கையாள்வது? – ஒரு அனுபவம்

மூக ஊடகங்களில் ஆரோக்கியமான, அறிவுபூர்வமான கருத்து பரிமாற்றங்களுக்கு எதிராக இருப்பது குறுகிய மதவாத அரசியலை புகுத்த விரும்பும் சில நபர்கள். கோயம்புத்தூருக்கான நமது சங்க உறுப்பினர்கள் நடத்திய ஒரு குழுவிலும் இத்தகைய ஒரு நபர் இணைந்து கொண்டு அடிப்படையில்லாத பொய்களை வெறுப்பு பிரச்சாரம் செய்து வந்தார். கருத்து சுதந்திரம் என்று பல நாட்கள் பொறுத்துப் பார்த்த பிற உறுப்பினர்கள், ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் அவரை குழுவை விட்டே வெளியேற்றி விட்டனர்.

இது போன்று இன்னொரு குழுவில் நடந்த அனுபவத்தை இந்த நண்பர் பகிர்ந்து கொள்கிறார். உண்மையின் ஒளியைக் கண்டால் இருட்டில் ஆட்டம் போடும் பேய்கள் ஓடி விடுகின்றன என்பதற்கு இன்னும் ஒரு உதாரணம் இந்த அனுபவம்.

சுதந்திர தினமும் பிண வியாபாரிகளின் பிரதிநிதியும்

திரைப்படங்களில் கண் விழித்த நோயாளிகள் , “நான் எங்க இருக்கேன்” என்று கேட்பதை நகைச்சுவையாகப் பார்த்திருக்கிறோம். ஆனால், விதிவிலக்கின்றி, பக்த கேடிகள் அனைவைரும் இதே மன நிலையில் தான் உள்ளனர்.

நாட்டின் அரசியல், பொருளாதார சீர்குலைவுகளுக்குக் காரணம் நேருவும், அவர் பாட்டனாரும் தான் என்று கை காட்டிவிட்டு, அதானி, அம்பானிகளுக்கான “அச்சே தின்” ஐ நிகழ்த்திக்கொண்டிருப்பவர்கள் இவர்கள். இப்படிப் பட்ட ஒரு “தேசபக்த” கும்பலில் ஒரு நபருக்கும், எனக்கும், அவர்கள் மொழியில் சொன்னால், ஒரு “அர்பன் நகசலுக்கும்” நடந்த காரசாரமான விவாதம் இது!

நான் படித்த பள்ளியின் மாணவர்களுக்கான ஒரு வாட்ஸ் ஆப் குழுவில் பலர் இணைந்து கருத்து பரிமாற்றங்கள் செய்து வருகின்றனர். அதில் ஒரு புள்ளி இன்று பா.ஜ.க வில் பெரும் புள்ளிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாகவும், 2019ல் ஒரு பதவி நிச்சயம் என்றும், தனது தில்லி பயணங்கள் குறித்தும் வாட்ஸ் ஆப்பில் பல நாட்களாக பீற்றிக்கொண்டிருந்தார். மேல் மட்டத்து ஆட்கள் தவிர யாரோடும் உரையாடுவது இல்லையாம்… அவ்ளோ பெரிய அப்பாடக்கராம்!

இது பலருக்கும் நெருடினாலும், பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற தயக்கம் இருப்பது தெரிந்தது. நானும் இந்த கோமியக் குடிக்கியை ஒரு கை பார்க்க வேண்டுமென காத்திருந்தேன்! வந்தது ஆகஸ்ட் 15. தனது தேச வெறிக் கூச்சலையும், பாரத மாதா பஜனையையும் தொடங்கினார். “விடுதலைப் போராட்டத்தில் ஒரு சிறு துரும்பைக் கூட எடுத்துப் போடாத, போராட்ட எழுச்சிகளைக் காட்டிக் கொடுத்து, வெள்ளைக்காரனுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதி அவர்கள் காலை நக்கிப் பிழைத்த கும்பல் இன்று நமக்கு நாட்டுப்பற்றைக் கற்றுத் தருகிறது. பாரத மாதா பஜனை சகிக்கலை” என்று நான் சொன்னதும், கச்சேரி களை கட்டியது…

“நீ உன்னை இந்தியன் என்று கூறிக்கொள்ளாதே” என்றார். “இந்த வாட்ஸ் ஆப் க்ரூப் தனக்கு முக்கியமில்லை, தான் சார்த்திருக்கும் கட்சியும், தேச பக்தியும் தான் பெரிது, நாடு முழுக்க இருக்கும் தனது “சகோதரர்களிடமிருந்து” 1500-2000 சாட் செய்திகள் வருகிறது, அதைப் படிக்கவே நேரம் போதவில்லை” என்றார். மேலும், வழக்கமான எச். ராஜா பாணி மிரட்டல்கள்… தேச விரோதி, Anti-National, பாரத் மாதா கீ ஜெய் சொல்லாதவர்கள் விளைவுகளுக்குத் தயாராகுங்கள் என்று கிச்சு கிச்சு மூட்டினார்.

ராஜ் நாத் சிங்குடன் நெருக்கமாக இருப்பவர்கள் இவருக்கு ஒரு agenda வைக் கொடுத்து வேலை செய்யச் சொல்லியிருக்கிறார்களாம். அதற்கு மற்றொரு நண்பர், நல்ல மனநல மருத்துவரை அணுகுமாறு கூறினார். அதைப் பொருட்படுத்தவே இல்லை… எத்த தின்னாலும் இந்த பித்தம் தெளியாது போலும்!

“இங்கு இன்னும் சில முட்டாள்கள் உலவி வருகிறார்கள், அவர்கள் வாழத் தகுதியற்றவர்கள்” என்றார். “நண்பர்கள் அனுப்பும் செய்திகளுக்கு எதுக்கு வி.ஐ.பி தொடர்புகள் குறித்து பேச வேண்டும்” எனக் கேட்டதற்கு, “சும்மா மிரட்டத்தான்” என்றார். “அவர்கள் பவுசு இவ்வளவுதான். Anti-Nationals குறித்த புகார்களை எழுதித் தருமாறு தனக்கு ஆணை” என்றார். “உள்துறை அமைச்சகத்தின் இப்படிப்பட்ட ரகசிய நடவடிக்கைகள் தான் தீவிரவாதத்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக” வாதிட்டார். “எதை வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம், தேசப்பற்றையும், கலாச்சாரத்தையும் தவிர” என்று பொறுமினார். ஆட்சி அவர்கள் கையில் இருக்கையில் எதற்கு ரகசிய நடவடிக்கை என்று புரியவில்லை!!!

நான் பேசுவதற்கு முன்னும் பலரும் அவரது அரசியல் மொக்கையையும், அறுவையையும் கண்டித்த பிறகும், நிராகரித்த பிறகும் அவர் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார். தனது மேலிடத்து தொடர்புகள் மூலம், க்ரூப்பில் இருக்கும் நண்பர்களுக்கு ஏதாவது உதவி செய்ய நினைக்கிறாராம்… அவர் பேசாமல் இருப்பதே பேருதவி என்று புரியவில்லை!

சதா சர்வ காலமும் இந்த நாடு மற்றும் சமூக முன்னேற்றத்துக்ககவே சிந்திக்கிறாராம்… வேறு ஒரு நண்பரை கருதி இந்த முறை எல்லாரும் பிழைத்துப் போங்கள் என்று சொல்லி பேச்சை முடித்தார்.

அவரது அணுகுமுறை சற்றும் சகிக்க முடியாததால், அவர் மீண்டும் இந்த க்ரூப்புக்கு வர வேண்டியதில்லை என மற்ற நண்பர்கள் முடிவு செய்தனர் !

பல நாள் வதை முடிவுக்கு வந்தது… காவி வெறி அம்பலமானது.

– பிரியா

Permanent link to this article: http://new-democrats.com/ta/bjp-game-of-trolls-in-social-media/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

நமக்கு எதிரி போக்குவரத்துத் தொழிலாளர்கள் அல்ல, தகுதியிழந்த அரசு இயந்திரம்தான்! ஊழல், பென்சன் பணம் கொள்ளை, அதிகார முறைகேடுகளில் ஈடுபட்ட அதிகாரிகள் - அமைச்சர்களை செருப்பால் அடித்து...

இந்தியத் தகவல் தொழில் நுட்பத்துறைக்கு கெட்ட கனவான 2017-ம் ஆண்டு!

நிறுவன மேலாளர்கள் தமது நலன்களையும், பங்குதாரர்களையும் நலன்களையும் கவனித்துக் கொள்கிறார்கள், ஊழியர்களின் நலனை பாதுகாக்க ஊழியர்களை தவிர யார் முன்வருவார்கள்?

Close