பெரியாரும், லெனினும் எச்.ராஜாவுக்கு சிம்ம சொப்பனம்

திரிபுரா சட்ட மன்ற தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்று ஆட்சியை பிடித்த பிறகு பெலோனியா என்ற நகரில் நிறுவப்பட்டிருந்த லெனின் சிலையை புல்டோசர் வைத்து இடித்துத் தள்ளியிருக்கிறது ஒரு ரவுடி கும்பல்.

விவசாயிகளுடன் லெனின்

ஏன்? லெனின் மீது பா.ஜ.க-வுக்கு ஏன் வெறுப்பு?

இது தொடர்பாக எச்.ராஜா வெளியிட்ட டுவீட்டில் அதற்கு விடை அடங்கியிருக்கிறது. “இன்று திரிபுராவில் லெனின் சிலை, நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈ.வெ.ரா.-வின் சிலை”

பகுத்தறிவு, சுயமரியாதை, சாதி ஒழிப்பு என்று தமிழக இளைஞர்களுக்கு உணர்வூட்டி பார்ப்பனியத்தை தமிழகத்தில் தோலுரித்த பெரியாரின் மீது ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க-விற்கு இருக்கும் அதே வெறுப்புதான், உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்களை உழைப்பு சுரண்டலுக்கு எதிராகவும், ஒடுக்கப்படும் தேசங்களை காலனிய அடிமைத்தனத்துக்கு எதிராகவும் போராடுவதற்கு உணர்வூட்டி வழி நடத்திய லெனின் மீதும் வெளிப்படுகிறது.

பெரியாரும், லெனினும் சிலைகளில் வாழவில்லை, உழைக்கும் மக்களின் மனங்களில், அவர்கள் கற்றுக் கொடுத்த அரசியலில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அந்த அரசியல் எச்.ராஜாவுக்கும், உழைக்கும் மக்களை காலம் காலமாக இழிவுபடுத்தி ஒடுக்கி வைத்திருந்த பார்ப்பனியத்துக்கும் சிம்ம சொப்பனமாக விளங்குகிறது.

விடுதலை போராட்ட வீரன் பகத்சிங் ஆங்கிலேயர்களால் தூக்கு மேடைக்கு அழைத்து செல்லப்படுவதற்கு முன்பு அவர் கையில் தவழ்ந்தது மாமேதை லெனினின் அரசும் புரட்சியும் என்ற நூல். ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து விடுதலை பெறுவதற்கான கல்வி பெற பகத்சிங் நாடியது லெனினை, இன்று கார்ப்பரேட் ஆதரவில் கொட்டமடிக்கும் பார்ப்பனிய ஆதிக்கத்தை முறியடிக்க  நமக்கு வழிகாட்டி நிற்பதும்  லெனினியமே!

Permanent link to this article: http://new-democrats.com/ta/brahminical-forces-dread-periyar-and-lenin/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
ஆதார் – விற்பனை பொருளாகும் இந்தியன், ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறை கருவி

கார்ப்பரேட்களின் கரங்கள் நமது கிராம எல்லை வரை நீண்டிருக்கும் காலத்தில் இந்த ஆதார் விபரங்கள் ஒவ்வொரு குடும்பத்திற்குள்ளும் நுழைந்து, ஒவ்வொரு தனிமனிதனது மூக்கு வரைக்கும் நீண்டு கார்ப்பரேட்டுகளது...

மக்கள் சேமிப்பை பங்குச் சந்தையில் போடும் தாராள மய கொள்கையை எதிர்ப்போம்

தனியார்மய- தாராளமய-உலகமயக் கொள்கைகளின் கீழ் எல்.ஐ.சி., பி.எஃப் நிதி நிறுவனம், ஓய்வூதிய நிதி நிறுவனம் போன்றவை தாங்கள் திரட்டும் பொதுமக்களின் சேமிப்பு பணத்தை பங்குச் சந்தையில் போட்டு...

Close