அன்பார்ந்த போக்குவரத்து தொழிலாளிகளே,
கடந்தவாரம் நீங்கள் நடத்திய போராட்டம் நியாயமானது. உங்களது உழைப்பை, சேமிப்பை திருடி தின்ற கூட்டத்திற்கு எதிராக நடத்திய போராட்டம் பெரும்பான்மை மக்களின் ஆதரவை பெற்றது.
இப்போது திருடிய கூட்டம் திருடிய பணத்தை திருப்பித் தருவதற்கு பதிலாக மக்களிடம் திருட கட்டணம் உயர்த்தியிருக்கிறது. அன்றாடம் பொதுப்போக்குவரத்தில் பயணம் செய்யும் மக்கள் யார் என்றும், அவர்களது வருவாய் என்னவென்றும் உங்களுக்குத் தெரியும். இப்படி மக்களிடம் திருடி திருடர்கள் தப்பிப்பதை ஏற்கப்போகிறீர்களா?
இந்தக்கட்டண உயர்வு மக்களையும், தொழிலாளிகளையும் பிரித்து எதிரெதிரே நிறுத்துகிறது.
நாம் திருடர்கள் தப்ப ஒத்துழைக்கப்போகிறோமா?
உழைக்கும் மக்கள் சார்பாக நிற்கப்போகிறோமா?
போக்குவரத்துத் தொழிலாளர்களே!
- ஊழல்பணத்தை மீட்டு ஊதியத்தைப் பெறுங்கள்!
- மக்களைச் சுரண்டும் அரசுக்குக் கருவியாகாதீர்கள்!
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஐ.டி ஊழியர்கள் பிரிவு