அடிமைகளா நாம் – ஒரு பெண் ஊழியரின் அறைகூவல்!

சி.டி.எஸ் அப்ரைசல் மோசடி பற்றியும், ஆட்குறைப்பு நடவடிக்கை குறித்தும், பொதுவான ஐ.டி நிறுவன பணி நிலைமை பற்றியும் பெண் ஊழியர் ஒருவர் எழுதி அனுப்பிய செய்தி

1886-ல் 8 மணி நேர கோரிக்கையை முன் வைத்து 3.5 லட்சம் அமெரிக்கத் தொழிலாளர்கள் போராடிப் பெற்ற சட்டபூர்வ உரிமை இன்று கார்ப்பரேட்டுகளின் கழிவறைக் காகிதமாகியது. அரசும் தன் பங்குக்குத் தொழிலாளர் சட்டங்களைத் திருத்தி கார்ப்பரேட் சுரண்டலுக்கும், இலாப வேட்டைக்கும் துணை போகிறது.

இப்படிப்பட்ட அடிமைத்தனம்/சுரண்டல் ஆகியவற்றை ஏற்கச் செய்யும் மற்றுமொரு ஆயுதம் ‘அப்ரைசல்’ என்னும் அறிவியலற்ற மோசடி ! ஊழியர்களைத் தனித்தனியாகப் பிரித்து வைத்து சுயநலமும், அடிமைச் சிந்தனையும் மிக்கவர்களாக இருத்தி வைப்பதே அவர்களுக்குச் சாதகமாக இருப்பதால் இந்த முறையை விடாமல் பின்பற்றுகின்றன, ஐ.டி நிறுவனங்கள்.

அப்ரைசல் என்னும் எலும்புத் துண்டைக் காட்டி ஊதிய உயர்வு, பணி உயர்வு ஆசை காட்டி வருடம் முழுவதும் கேள்வி முறையின்றி வேலை செய்ய வைக்கும் நிறுவனம் ஆண்டு இறுதியில் பலருக்கு பெரும்பாலும் ஏமாற்றத்தையே வழங்குகிறது. மேலும், ஒவ்வொரு தனிநபரின் செயல் திறனையும் மதிப்பிடும் முறை என்று சொல்லப்படும் இம்முறை எப்போதும் தன்னைப் பற்றி மட்டுமே சிந்திப்பவர்களாகவே ஆக்கிவிடுகிறது. அது மட்டுமன்றி சக ஊழியர்கள் இந்த மோசடிக்கும் வேலை இழப்புக்கும் பலியாவது பற்றி பாராமுகமாய் இருப்பதும் நடக்கிறது.

இத்தகைய அப்ரைசல் அடிப்படையில்தான் சி.டி.எஸ் 10,000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய உள்ளதாகவும், இது ஒரு வழக்கமான செயல்பாடு என்றும் அறிவித்திருக்கிறது!

நண்பர்களே, இப்படி 10 முதல் 12 மணி நேர வேலை, அதிக அடிமைத்தனம், அதிக ஊதியம் என்று நம்மை ஒட்டச் சுரண்டும் கார்ப்பரேட் கொள்ளைக்கும், பிரித்தாளும் சூழ்ச்சிக்கும் எதிராக அணிதிரள்வோம்! நம்முடைய உரிமைகளுக்காக ஓ.எம்.ஆர்-ஐ சிவப்பாக்குவோம்.

ஓ.எம்.ஆர் சிவந்தால் அமெரிக்கா அதிரும்! அது அமெரிக்காவில் எதிரொலிக்கும்!

வாருங்கள், ஒன்று சேர்வோம்! களமாடுவோம்!

Permanent link to this article: http://new-democrats.com/ta/call-to-arms-in-it-sector/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
அனைத்தும் உங்களின் பெயரில்

ஒரே மாதிரியான கல்வித் தகுதியும் அனுபவமும் ஆனால் தெளிவாக வேறுபடுத்திக் காட்டும் சாதி மற்றும் மதப் பெயர்களைக் கொண்ட ஆண்களுக்கு வேலைக்கு விண்ணப்பிக்கப்பட்டது. நேர்காணலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு...

ஊழியர்களின் வாழ்க்கையை அழிக்கும் “பத்ம விபூஷண்” பிரேம்ஜி-ன் இதயமற்ற விப்ரோ

சத்யராஜ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு தொலைதூர கிராமத்திலிருந்து வருபவர். அவர் ஒரு முதல் தலைமுறை பட்டதாரியாகவும், அவருடைய கிராமத்தில் இருக்கும் வெகுசில...

Close