தொழில்நுட்பம் சமூகப் பிரச்சனைகளை தீர்க்க முடியுமா?

தொழில்நுட்பம் அனைவருக்கும் கூடுதல் வாய்ப்புகளையும், பல வசதிகளையும் ஏற்படுத்தித் தருகிறது என்பது உண்மைதான். ஆனால், சமூகத்தில் ஊறிப் போயிருக்கும் பாகுபாடுகள், வெறுப்புகள், அநீதிகள் இவற்றை தொழில்நுட்பம் மூலம் ஒழித்துக் கட்ட முடியுமா?

uber-ticketsடிசம்பர் 2012-க்கும் ஆகஸ்ட் 2015-க்கும் இடையே அமெரிக்காவில் தமது நிறுவனத்தின் சேவை தொடர்பாக 5 பாலியல் வன்முறை புகார்களும், 170-க்கும் குறைவான பாலியல் தாக்குதல் புகார்களும் “மட்டுமே” பெறப்பட்டன என்று ஊபர், டாக்சி சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது. Buzzfeed.com என்ற இணையதளம் ஊபரின் ஜென் டெஸ்க் வாடிக்கையாளர் சேவை தளத்திலிருந்து அதே காலகட்டத்துக்கான தேடுதல் முடிவுகளை வெளியிட்டதைத் தொடர்ந்து இந்தத் தகவலை ஊபர் வெளியிட்டுள்ளது.

Buzzfeed.com வெளியிட்ட திரைச்சொட்டுகளில் “sexual assault” என்ற சொல்லை தேடினால் 6,160 டிக்கெட்டுகள் இருப்பதாகவும், “rape” என்ற சொல்லை தேடினால் 5,827 திரைச்சொட்டுகள் இருப்பதாகவும் தெரிய வருகிறது. இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான டிக்கெட்டுகள் வருவதற்கு ஊபர் பல விளக்கங்களை சொன்னாலும், buzzfeed.com அவற்றுக்கு தக்க பதில் கொடுத்திருக்கிறது.

uber-tickets-2ஆயிரக்கணக்கான பாலியல் தாக்குதல் புகார்கள் ஊபர் வாடிக்கையாளர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளன என்ற தகவல் வெளியானதும், இந்தக் குறிப்பிட்ட தேடுதல் சொற்களை பயன்படுத்திய ஊழியர்களை தொடர்பு கொண்டு யார் இதை வெளியிட்டது என்று தேட ஆரம்பித்திருக்கிறது ஊபர். அதாவது, நிறுவனத்தைப் பொறுத்தவரை இத்தனை தாக்குதல்கள் நடப்பது பிரச்சனையில்லை, அந்த தகவல் வெளியில் போவதுதான் பிரச்சனை.

இங்கு நாம் கவனிக்க வேண்டியது இதுதான் : விலை குறைவான டாக்சி பயணம் வழங்குவதற்கான சேவை, அதற்கான ஆப், மற்றும் கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு தொழில்நுட்பம் பயன்படுகிறது. ஆனால், பெண்களும், சிறுபான்மையினரும், ஒடுக்கப்படும் பிரிவினரும் சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தொழில்நுட்பம் தீர்வாகுமா?

செய்திக்கான சுட்டி

 

Permanent link to this article: http://new-democrats.com/ta/can-technology-solve-social-problems-ta/

Leave a Reply

Your email address will not be published.

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
தரமான மருத்துவக் கல்வியை, மருத்துவத்தை கொல்வதற்கே “நீட்” : தெருமுனைக் கூட்டம்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் - ஐ.டி ஊழியர்கள் பிரிவின் சார்பில் நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்யக் கோரி தெருமுனைக் கூட்டம் நாள் : 15-09-2017...

நிர்வாகம் நினைத்தவுடன் வேலையை விட்டு அனுப்ப முடியுமா?

ஆட்குறைப்பு நடவடிக்கையை பின்பற்றும் போது நிறுவனம் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். அதனால்தான் நிறுவனங்கள் முறையாக இதைச் செய்யாமல் மனித வள மேம்பாட்டு அதிகாரிகள் மூலம் ஊழியர்களை...

Close