மூலதனம் 150, ரசியப் புரட்சி 100 – சென்னை ஒய்.எம்.சி.ஏ அரங்கில் கூட்டம்

Due to rains in Chennai, the meeting scheduled to be held today (November 7, 2017) is postponed. New date will be announced soon.
– PALA, RSYF, NDLF

ன்பார்ந்த உழைக்கும் மக்களே,

கார்ல் மார்க்ஸின் மூலதனம் நூல் வெளியிடப்பட்டதற்கு இது 150-வது ஆண்டு.  அந்நூலில் பாட்டாளி வர்க்கத்தின் எதிர்காலம் குறித்து மார்க்ஸ் வெளியிட்ட கணிப்பை மெய்ப்பித்தது ரசியப் புரட்சி. அந்த ரசிய சோசலிசப் புரட்சிக்கு இது 100-வது ஆண்டு.

ஆலைகள் உள்ளிட்ட உற்பத்தி சாதனங்கள் அனைத்தும் பொதுவுடைமை ஆக்கப்படுமானால், அரசு அதிகாரம் தொழிலாளர்கள் விவசாயிகளின் கைக்கு மாறுமானால் ஒரு நாடு எத்தகைய சாதனைகளையெல்லாம் நிகழ்த்த இயலும் என்பதை ரசிய சோசலிசம் நிரூபித்துக் காட்டியது.

பட்டினியும் வேலையின்மையும் உழைப்புச் சுரண்டலும், லஞ்ச ஊழலும், தற்கொலைகளும், பெண்களுக்கெதிரான வன்முறைகளும் தலைவிரித்தாடும் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். “இதுதான் நியதி” என்று அடங்கிப் போகுமாறு நாம் பழக்கப்படுத்தப்படுகிறோம். இந்த அநீதிகள் அனைத்தும் முதலாளித்துவ சமூகத்தின் நியதிகள் என்றும் இவற்றைத் தொழிலாளி வர்க்கத்தான் மாற்ற முடியும் என்றும் பிரகடனம் செயதார் மார்க்ஸ். லெனின் தலைமையில் அவ்வாறு மாற்றிக் காட்டினார்கள் ரசிய மக்கள்.

1917 புரட்சிக்குப் பின், மக்களின் உணவு, வீடு, கல்வி, மருத்துவம், வேலை ஆகிய அனைத்துக்கும் சோசலிச அரசு பொறுப்பேற்றுக் கொண்டது. அந்தச் சமூகத்தில் அநாதைகள் இல்லை, விலைமாதர்கள் இல்லை, ஆதரவற்ற முதியோர் இல்லை. பெண் கல்வி – சமமான வேலை வாய்ப்பு, பேறுகால விடுப்புகள், அனைவருக்கும் ஓய்வூதியம், அனைத்து மொழிகளுக்கும் சம உரிமை, இனங்களுக்கு பிரிந்து போகும் உரிமை என மேற்குலக நாடுகள் சில நூற்றாண்டுகளில் சாதிக்க முடியாதவற்றையெல்லாம் சில பத்தாண்டுகளில் சாதித்துக் காட்டியது சோசலிசம். அமெரிக்க, ஐரோப்பிய பத்திரிகையாளர்கள் முதல் தமிழகத்தின் பெரியார், என்.எஸ்.கிருஷ்ணன் போன்றோர் வரையிலான பலரும் நேரில் கண்டு பாராட்டிய உண்மைகள் இவை.

ஆலைகள் முதல் விளைநிலங்கள் வரையிலான உற்பத்தி சாதனங்கள் அனைத்தும் சமூகத்தின் உடைமையாக்கப்பட்டு உழைக்கும் வர்க்கத்தின் ஆட்சியதிகாரம் நிலை நாட்டப்படுமானால், ஒரு நாடு எத்தகைய சாதனைகளையெல்லாம் நிகழ்த்த முடியும் என்பதை நிரூபிக்கும் உண்மைகள் இவை.

ரசிய சோசலிச அரசு உலகெங்கும் காலனியாதிக்கத்துக்கு எதிராக மக்கள் நடத்திய விடுதலைப் போராட்டங்களை ஆதரித்தது. சுமார் 2 கோடிக்கும் அதிகமானோரை பலி கொடுத்து இட்லரின் பாசிச ஆட்சியிலிருந்து உலகைக் காப்பாற்றியது. சீனா உள்ளிட்ட பல நாடுகளில் புரட்சி வெல்வதற்கும், மூன்றாம் உலக நாடுகள் சுயசார்பு பொருளாதாரத்தை கட்டியமைப்பதற்கும் உதவியது.

இத்தகைய சாதனைகளை நிகழ்த்திய ரசியாவிலும் பிற சோசலிச நாடுகளிலும் மீண்டும் முதலாளித்துவம் வெற்றி பெற்று விட்டது என்பது உண்மைதான். தொழிலாளி வர்க்கத்துக்கும் முதலாளி வர்க்கத்துக்கும் இடையிலான போரின் ஒரு சுற்றில் தொழிலாளி வர்க்கம் தோற்றிருக்கிறது. இத்தகைய தோல்விகள் எதிர்பாராதவையல்ல. இதுவே இறுதி சுற்றுமல்ல.

ஆனால், இது தங்களது ‘இறுதி வெற்றி’ என்று கொண்டாடியது உலக முதலாளித்துவம். 1990-களின் துவக்கத்தில் தனியார்மயம்- தாராளமயம் – உலகமயம் என்ற கொள்கையைத் திணித்த உலக முதலாளி வர்க்கத்தினர், “சித்தாந்தங்களின் முடிவு, நாகரிகத்தின் முடிவு” என்று களிவெறிக் கூச்சல் எழுப்பினர். ஆனால், அக்கூச்சல் அடங்குவதற்குள் அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் புதிய தாராளவாதக் கொள்கைகளுக்கெதிரான மக்கள் போராட்டங்கள் வெடிக்கத் தொடங்கின. 2008 சப்-பிரைம் மோசடி, உலக முதலாளித்துவக் கட்டமைப்பே தீராத நெருக்கடியில் சிக்கியிருப்பதைக் காட்டியது.

உலக முதலாளித்துவத்தின் கருவறையான அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட்டிலேயே “முதலாளித்துவம் ஒழிக” என்று லட்சக்கணக்கான மக்கள் குரல் எழுப்பினர். முதலாளித்துவ பொருளாதார வல்லுநர்களும் மார்க்சின் மூலதனம் கூறும் கசப்பான உண்மைகளை அங்கீகரித்து விழுங்க வேண்டியதாயிற்று.

“சுரண்டப்படும் உழைப்பின் உபரி மதிப்பு மூலதனமாக எந்த அளவுக்குக் குவிகிறதோ அந்த அளவுக்குத் தொழிலாளர்களின் ஊதியம் குறையும் – வேலையின்மையும் அதிகரிக்கும்” என்றார் மார்க்ஸ். இன்று தொழிலாளி வர்க்கமே காண்டிராக்ட் தொழிலாளிகளாக மாற்றப்படுகிறது; ஊதியம் வீழ்கிறது; சந்தை சுருங்குகிறது. “தனியார்மய – தாராளமயக் கொள்கைகள் அமலாகத் தொடங்கிய பிறகு இந்தியாவில் உருவாகியிருக்கும் பில்லியனர் ராஜ்யத்தில்தான் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தை விட ஏற்றத் தாழ்வுகள் அதிகமாகியிருக்கின்றன” என்று கூறுகின்றன புள்ளிவிபரங்கள்.

இதுவும் போதாதென்று கார்ப்பரேட்டுகளுக்கு நிலமும், நீரும், மின்சாரமும், கடனும், மானியமும் கொட்டிக் கொடுக்கிறது மோடி அரசு. ஆனால், வேலை வாய்ப்பைக் காணோம். இருக்கின்ற வேலைவாய்ப்பையும் பறிக்கும் வகையில் தொழில்துறை, ஐ.டி துறை ஆகிய அனைத்தும் தானியங்கி மயமாக்கப்படுகின்றன. மோடி அரசின் பணமதிப்பு அழிப்பும், ஜி.எஸ்.டி திணிப்பும் சிறு தொழில்களையும், சிறு வணிகத்தையும் அழித்து, அவற்றை கார்ப்பரேட் மூலதனம் விழுங்குவதற்கு வழி செய்து தருகின்றன.

விவசாயிகளின் தற்கொலை, கந்துவட்டியால் தற்கொலை கல்விக் கடன் தற்கொலை, நல்ல மதிப்பெண் பற்ற மாணவிகள் தற்கொலை – மதிப்பெண் பெறாத மாணவிகளும் தற்கொலை, விளைச்சல் பொய்த்து விவசாயி தற்கொலை – மிதமிஞ்சி விளைந்தும் விலை கொடுக்காமல் தற்கொலை, வேலையற்றோரின் தற்கொலை – மிகை உழைப்பால் மரணங்கள்… என மூலதனத்தின் பலிபீடத்தில் மக்களின் உடல்கள் குவிகின்றன.

வரிகள், வேலையின்மை, கல்வி – மருத்துவ – ரேசன் மானிய வெட்டுகள், சுற்றுச் சூழல் அழிவு என்று எத்தகைய பிரச்சினைகளைப் பட்டியலிட்டாலும் அவை அனைத்துக்கும் உலக முதலாளித்துவம்தான் காரணமாக இருக்கிறது. முதலாளித்துவத்தின் நெருக்கடிகள் அதிகரிக்க அதிகரிக்க, சுரண்டலை மூர்க்கமான முறையில் நடத்தித் தருவதற்கான கையாட்களாக, மோடி போன்ற பாசிஸ்டுகள் ஆளும் வர்க்கத்தான் முன்தள்ளப்படுகிறார்கள்.

எனினும் முதலாளித்துவத்தை அழிவிலிருந்து காப்பாற்றுவதென்பது எந்த தேவனாலும் சாத்தானாலும் இயலாத காரியம். அதன் அழிவு தவிர்க்கவியலாதது. அவ்வாறு அழிந்துபடும் போது அது மனித குலத்தையும், இந்தப் புவிப்பரப்பையும் தன்னோடு படுகுழிக்குள் இழுத்துச் செல்லுமா, அல்லது அதற்கு முன் முதலாளித்துவத்தின் பிடியிலிருந்து மனித குலம் தப்புமா என்பதுதான் நம் முன் இருக்கும் கேள்வி. இந்தக் கேள்விக்கான விடையை “மனிதகுலம்தான் தனது செயல்பாட்டின் வாயிலாக அளிக்க வேண்டும்” என்றார் மார்க்ஸ்.

தன்னுடைய அரசமைப்பின் மீது மக்களை நம்பிக்கை கொள்ளச் செய்வதில் முதலாளித்துவத்தால் வெற்றி பெற முடியவில்லை. எனினும் அடைமழை போன்ற பொய்ப் பிரச்சாரத்தின் மூலம் கம்யூனிசத்தின் மீது அவந்தம்பிக்கையின் நிழலில் முதலாளித்துவம் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது. முதலாளித்துவத்தின் மீதான மக்களின் வெறுப்பை, சோசலிசத்தின் மீதான விருப்பமாக நாம் மாற்ற வேண்டும்.

“இதுகாறும் தத்துவஞானிகள் இந்த உலகத்தை பலவாறாக வியாக்கியானம் செய்திருக்கிறார்கள். எனினும் விசயம் என்னவென்றால் உலகை மாற்றியமைப்பதுதான்” என்று தனது 27 வயதில் பிரகடனம் செய்தார் கார்ல் மார்க்ஸ். உலக முதலாளித்துவத்துக்கு எதிரான போரின் அடுத்த சுற்றைத் தொடங்குவதற்கு மார்க்ஸ் நமக்கு விடுத்திருக்கும் அழைப்பாக இப்பிரகடனத்தை எடுத்துக் கொள்வோம்!

கார்ல் மார்க்ஸின் மூலதனம் நூல் – 150ஆம் ஆண்டு
ரசிய சோசலிசப் புரட்சி – 100ஆம் ஆண்டு

7 நவம்பர் 2017 மாலை 5 மணி
ஒய்.எம்.சி.ஏ அரங்கம்,
நந்தனம், சென்னை – 600 035

நிகழ்ச்சி நிரல்

தலைமை :
தோழர் அ. முகுந்தன், தலைவர், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

உரையாற்றுவோர் :

தோழர் தியாகு, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்,மூலதனம் தமிழ்ப் பதிப்பின் மொழிபெயர்ப்பாளர்.

தோழர் எஸ் பாலன், வழக்கறிஞர், பெங்களூரு உயர் நீதிமன்றம்.

தோழர் மருதையன், பொதுச்செயலாளர், மக்கள் கலை இலக்கியக் கழகம்

கலை நிகழ்ச்சி

ம.க.இ.க – கலைக்குழு
மார்க்ஸ் – நவம்பர் புரட்சி தொடர்பான திரைப்பதிவுகள்

நன்றியுரை

தோழர் த. கணேசன், மாநில ஒருங்கிணைப்பாளர், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி

மக்கள் கலை இலக்கியக் கழகம்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

தொடர்புக்கு :
110, இரண்டாம் தளம், 63, என்.எஸ்.கே சாலை, கோடம்பாக்கம், சென்னை – 600 024
அலைபேசி :
99624 06840

Permanent link to this article: http://new-democrats.com/ta/capital-150-russian-revolution-100-nov-7-meeting/

Leave a Reply

Your email address will not be published.

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
கடுவட்டி – கொடூர மிருகம், அனைத்தையும் அழிக்கிறது!

வழிப்பறி கொள்ளையரையும், கொலைகாரர்களையும், வீட்டை உடைத்து திருடுபவர்களையும் வதை சக்கரத்தில் மாட்டுகிற நாம், கடுவட்டிக்காரர் அனைவரையும் சக்கரத்தில் மாட்டி கொல்ல வேண்டும், வேட்டையாட வேண்டும், சபிக்க வேண்டும்,...

“மனுசன பலி கொடுத்து நாட்ட வளக்கும் மனு ஆட்சி” – கவிதை

எண்ணை எடுக்கோம் எரிவாயு எடுக்கோமுன்னு எங்கள ஏச்சுப்புட்டு எங்க மண்ணை மலடாக்க இந்த மானங்கெட்ட அரசாங்கம் நினைச்சா சொந்த மண்ணை சோடை போகவிட நாங்க ஒண்ணும் மானங்கெட்டுப்...

Close