முதலாளித்துவம் ஏமாற்று; கம்யூனிசமே மாற்று!

நவம்பர் 7 : மகத்தான ரசியப்புரட்சியின் நூற்றாண்டு! முதலாளித்துவம் ஏமாற்று; கம்யூனிசமே மாற்று!

1917-ம் ஆண்டில், நவம்பர் 7 அன்று ரசிய நாட்டில் நடந்த மகத்தான சோசலிசப் புரட்சி நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த நூறாண்டுகளில் ரசியப்புரட்சி கற்றுக் கொடுத்த அனுபவங்கள் பல்லாயிரம். மனிதகுலத்துக்கு செய்திட்ட சேவைகள் விலைமதிப்பற்றவை; மறக்க முடியாதவை!

puthiya-thozhilali-october-2016-editorialஆண்டாண்டு காலமாக ஒடுக்கப்பட்டுக் கிடந்த ஏழை-எளிய மக்கள் தங்கள் சொந்த அரசை நிறுவிக் கொண்டதுதான், ரசியப் புரட்சி. மாபெரும் பாட்டாளி வர்க்கப் பேராசான் லெனின் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி எஃகுறுதியுடன் நின்று சோசலிசம் என்ற மகத்துவத்தை நடத்திக் காட்டியது. கட்சிக்குள்ளேயே உருவெடுத்த துரோகிகள், அதிகாரம் பறிபோன ஆத்திரத்தில் சதிசெய்த முதலாளிகள், சோசலிசத்தை வளரக் கூடாது என்று படையெடுத்த ஆக்கிரமிப்பாளர்கள் ஆகிய அத்துணை எதிர்சக்திகளையும் சவக்குழிக்குள் அனுப்பினர், சோவியத் ரசியாவின் புதல்வர்கள். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தைப் பற்றி நின்ற சோசலிச ரசியாவின் எழுச்சி, சிவப்பு நட்சத்திரம் போல உலகெங்கும் போராடிக் கொண்டிருந்த மக்களுக்கு விடியலுக்கான வெளிச்சத்தைக் காட்டியது.

மனிதகுலத்தை அச்சுறுத்திக் கொண்டிருந்த இட்லர் என்கிற கொடூரனை நசுக்கிக் கொன்றது, சோசலிச ரசியா. இட்லர் துவங்கி வைத்த இரண்டாம் உலகப் போரில், பிரிட்டன், பிரான்ஸ் போன்ற ஏகாதிபத்தியப் பேரரசுகளது படைகள் தோற்றுப்போய், மண்டியிட்ட தருணத்தில் இட்லர்-முசோலினி கூட்டணியை வதம் செய்தது, சோசலிச ரசியாவின் செம்படை. இட்லரது பாசிசக் கொடுங்கோன்மையிலிருந்து இந்த மண்ணுலகை பாதுகாப்பதற்காக சோசலிச ரசியாவின் மைந்தர்கள் 2 கோடி பே உயிர்த்தியாகம் செய்தனர். சோசலிச ரசியாவின் எழுச்சி வெளிச்சத்தில் சீனப்புரட்சியும் நடந்தேறியது. உலகையே சூறையாடிக் கொண்டிருந்த காலனியாதிக்கத்துக்கு முடிவுகட்டி பலநாடுகளில் சுதந்திரக் காற்றை உலாவ விட்டது, அது.

puthiya-thozhilali-october-2016-backஅநீதிக்கும், அடக்குமுறைக்கும் எதிராகப் போராடுவது, சமூகத்தின் நலனுக்காக எத்தகைய தியாகத்தையும் செய்வது, பிற்போக்குத்தனங்கள், மூடநம்பிக்கைகள் ஆகிய எதையும் பகுத்தறிவு – விஞ்ஞானக் கண்கொண்டு விடை காண்பது, மனிதகுலத்தின் எதிரிகள் எவராயினும் தமக்கும் எதிரிகள்தான் என்கிற பாட்டாளிவர்க்கச் சிந்தனையை பயிற்றுவித்தது – இவையெல்லாம் சோசலிச ரசியா நமக்குக் கற்றுக் கொடுத்த மாண்புகள். இத்தகைய ரசியாவும் சதிகளால் வீழ்த்தப்பட்டது. கம்யூனிசம் வீழ்ந்து விட்டது எனக் கொக்கரித்த முதலாளித்துவம்தான், வீழ்ந்து கிடக்கிறது. கம்யூனிசத்துக்கு என்றும் அழிவு கிடையாது. அது ஒரு அறிவியல்.

உலகெங்கும் இலாபவேட்டை நடத்தி கொழுத்துத் திரிகின்ற முதலாளித்துவம் தன்னுடைய கொள்ளையை தங்குதடையின்றி நடத்துவதற்குத் தகுந்த வகையில் உள்ளூர் அரசியல் – சமூக நிலைமைகளைக் கட்டியமைக்கிறது. இந்தியாவில் மறுகாலனியாக்க நடவடிக்கைகள் தீவிரமடைந்திருக்கின்ற இந்தத் தருணத்தில் மன்மோகன் சிங் – சோனியா என்ற சோணகிரிக் கும்பலும், காந்திக் குல்லாயும் காலாவதியாகி விட்டன. காந்திக்கு பதிலாக காவி; காங்கிரசுக்குப் பதிலாக ஆர்.எஸ்.எஸ்; மன்மோகனுக்குப் பதிலாக மோடி – இதுதான் கார்ப்பரேட் கொள்ளையர்களது புதிய ஃபார்முலா.

அந்நிய முதலாளிகளுக்கு நம்பகமான நாடுகள் பட்டியலில் ஆண்டுதோறும் முன்னேறி வருகின்ற இந்தியா, நவீன கொத்தடிமைகள் கொண்ட நாடுகளது பட்டியலில் முதலாவது இடத்திலும் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் 118-வது இடத்திலும் இருக்கிறது. இத்தகைய கார்ப்பரேட் காட்டாட்சியின் கொடூரங்களை உணர முடியாமலும், நண்பன் யார், எதிரி யார்; எது உண்மை, எது பொய் என்பதை பகுத்தறிய முடியாமலும் காவி இருள் உழைக்கும் மக்களது கண்களையும் கருத்தையும் சூழ்ந்துள்ளது.

ஒவ்வொரு நாட்டிலும், நிலைமைகளுக்கேற்ப கூட்டாளிகளையும், உத்திகளையும் மாற்றியமைத்து, சுரண்டலைத் தங்குதடையின்றி தொடர்வதுதான் முதலாளித்துவ பயங்கரவாதம். ஆனாலும், நொடிக்கொருமுறை அழிவை சந்தித்துக் கொண்டிருக்கிறது. முதலாளித்துவம் இதிலிருந்து மீளவே முடியாது. இந்தப் பேரழிவிலிருந்து மீள்வதற்கு உழைக்கும் மக்கள் மீதான சுரண்டலை மேலும், மேலும் தீவிரப்படுத்துகிறது. அப்படிச் செய்யாமல் முதலாளித்துவத்தால் வாழவே முடியாது. அதன் மூலம் முதலாளித்துவம் தனக்குத்தானே சவக்குழியை தோண்டிக் கொண்டு வருகிறது.

கம்யூனிசம்தான் ஒடுக்கப்பட்ட மக்களின் விடியல் என்பதை காலச்சக்கரம் மீண்டும், மீண்டும் நிரூபித்து வருகிறது. முதலாளித்துவம் ஒரு ஏமாற்று; கம்யூனிசமே மாற்று.

தலையங்கம், புதிய தொழிலாளி,  அக்டோபர் 2016 இதழிலிருந்து

Permanent link to this article: http://new-democrats.com/ta/capitalism-defunct-communism-only-alternative/

Leave a Reply

Your email address will not be published.

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
கந்து வட்டி ஒப்பந்தமும் கார்ப்பரேட் அப்பாய்ன்ட்மென்ட் லெட்டரும்

ஒரு பேச்சிற்காக நிர்வாகத்திற்கு நினைத்த நேரத்தில் ஊழியரை வெளியேற்றும் அதிகாரம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இந்த அதிகாரம் தொழிற்சாலைகள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், தனியார்...

18-ம் நூற்றாண்டின் வாரன் பஃபெட் – பங்குச் சந்தை முன்னோடி ஜான் லோ

இன்றைக்கு 300 ஆண்டுகளுக்கு முன்பு பாரிஸ் நகரத்தில் ஆரம்பிக்கப்பட்ட மிசிசிப்பி கம்பெனிதான் உலகின் முதல் பொது பங்கு நிறுவனம். அப்போது பிரான்சுக்கு சொந்தமான மிசிசிப்பி பள்ளத்தாக்கில் மக்களை...

Close