சிறுபான்மை இனத்தவருக்கு மருத்துவ சேவை மறுக்கும் அமெரிக்க முதலாளித்துவம்

Racism and Capitalism: the Barriers to Decent Health Care – by ELLEN ISAACS (சுகாதாரம் மற்றும் மருத்துவ பாராமரிப்புக்குத் தடை விதிக்கும் இனவாதமும், முதலாளித்துவமும் – எல்லென் ஐசாக்ஸ்)

னப்பாகுபாடு சுகாதாரத்தில் ஏற்படுத்தும் விளைவுகள் தொடர்பான விவாதங்களில் பொதுவாக முன்வைக்கப்படும் தீர்வுகள்:

 • மருத்துவ சேவை வழங்குவோரின் பக்கசார்பான அணுகுமுறையை எதிர்ப்பது
 • காப்பீட்டுத் துறையில் மாற்றங்கள் கொண்டு வருவது
 • வருமானத்தில் இருக்கும் சமத்துவமின்மையைக் குறைப்பது

என்பதாகவே உள்ளன.

இங்கே ஒரு மிக அடிப்படையான கேள்வியை நாம் கேட்க வேண்டியுள்ளது: இந்த முதலாளித்துவ முறைக்குள் நின்று கொண்டு இனரீதியான ஏற்றத்தாழ்வுகளையும் குறைபாடுகளையும் அழித்துவிட இயலுமா? நியாயமான மற்றும் சிறந்த சுகாதார வசதிகளை அனைத்து அமெரிக்க மக்களுக்கும் வழங்க முடியுமா?

முதலாளித்துவத்தின் தேவைகள்:

முதலாளித்துவம் இலாபம் ஈட்டவே உயிர் வாழ்கிறது. இது அதைப் பற்றிய ஒரு அறம் சார்ந்த தீர்ப்பு அல்ல. உண்மையில், முதலாளித்துவப் பொறியமைவின் அடிப்படையில் செயல்படும் எந்த ஒரு வணிக நிறுவனமும் இலாபம் ஈட்டுவது மட்டுமன்றி இலாபத்தைப் பெருக்குவதிலும் ஈடுபட வேண்டியுள்ளது. இல்லையேல், அது போட்டி நிறுவனத்திடம் தோற்க நேரிடுகிறது.

உற்பத்தி செய்யப்படும் பொருளை விற்று பெறும் மதிப்புக்கும் அதன் உற்பத்திக்குத் தேவையான மனித உழைப்பு, கருவிகள், விளம்பரங்கள் போன்றவற்றுக்கும் ஆகும் செலவுக்கும் இடையேயான வேறுபாட்டிலிருந்து இந்த இலாபம் ஈட்டப்படுகிறது. இவற்றில் உழைப்புச் செலவினத்தில்தான் அதிகபட்ச மிச்சப்படுத்தல் சாத்தியமாகிறது.

உழைப்புச் செலவினமானது, தொழிலாளர்களை பராமரிப்பது, பயிற்சி அளித்தல் பணியில் தொடர முடியாதபடி ஊனமுற்றோருக்கு அல்லது ஓய்வு பெறும் பணியாளர்களுக்கு மாற்றாக புதிய தொழிலாளர்களை அமர்த்துவதற்கான செலவுகள் ஆகியவற்றை சார்ந்துள்ளது. வேலையின்மை உச்சத்தில் இருக்கும் தருணங்களில் திறமைவாய்ந்த தொழிலாளிக்கு பதிலாக திறமை குறைவான தொழிலாளியை பணியில் அமர்த்துவது எளிதாக இருக்கிறது.

 1. தொழிலாளிகளின் பராமரிப்புக்கான அவசிய சேவைகளான பொதுக் கல்வி, துப்புரவு, சுகாதாரம் போன்றவை முதலாளித்துவ முறைக்கு பொது செலவினமாக உள்ளது. இருப்பினும், அதில் பெரும் பகுதியை வரி மூலமாக தொழிலாளர்களிடமிருந்தே வசூல் செய்து விடுகிறது, முதலாளிகளின் அரசு.
 2. முதலாளிகளும் தமது நோயற்ற வாழ்வை உறுதி செய்து கொள்ளவும், தொற்றுநோய் அபாயங்களைக் கட்டுப்படுத்தவும் வேண்டியுள்ளது. முதலாளிகளது நீண்ட ஆயுளுக்கும், சுக வாழ்வுக்கும் குறைந்தபட்ச சுகாதாரக் கட்டுமான வசதிகளும், மருத்துவ அறிவியல் துறை மேம்பாடுகளும் அவசியமாகிறது.
 3. முதலாளித்துவ நாடுகளுக்குள், உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளர்களின் நலனைப் பேணவும் மற்றும் ஆரோக்கியமான இளம் தொழிலாளர்கள் இராணுவத்திற்கும் கிடைக்க வேண்டியதும் அவசியம். எனவே, இந்த உற்பத்தி சக்தியை பராமரிக்க போதுமானதாக சுகாதார நிலைமைகள் இருக்க வேண்டும்.

மேலும், வேலை நிறுத்தம் மூலமும் பிற போராட்டங்களின் மூலமும் தொழிலாளிகள் வைக்கும் கோரிக்கையையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

 • 1965-ல் நிலவிய சமூக அமைதியின்மை, சமூக உரிமைகள் இயக்கம், வியட்நாம் மீதான போருக்கு எதிராக அரும்பிய எதிர்ப்பியக்கங்கள் ஆகியவற்றின் விளைவாக ஏழைகளுக்கும் முதியவர்களுக்குமான மெடிகேர், மெடிக்எய்ட் ஆகிய மருத்துவ காப்பீட்டுத் திட்டங்கள் உருவாக்கப்பட்டன.
 • எனினும், ஏழைகளுக்கான மெடிக்எய்ட் திட்டம் வெகு நாட்களாகவே மிகவும் குறைவான அளவு கருப்பின மக்களையே இத்திட்டத்தில் பதிவு செய்துள்ளது. அதற்கு நிதியும் எப்போதும் பற்றாக்குறையாகவே ஒதுக்கப்படுகிறது. அதற்கான ஈட்டுத்தொகையும் (Reimbursements) மிகவும் குறைந்த வீதத்திலேயே தரப்படுவதால் பல மருத்துவர்களும், மருத்துவமனைகளும் இந்தத் திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்க முன்வருவதில்லை. டிரம்ப் அதிபரானதும் அதற்கான நிதி மேலும் குறைக்கப்பட்டது. இந்தத் திட்டத்தில் பதியாதவர்கள் எவ்விதக் காப்பீடும் இன்றிதான் இருக்கிறார்கள்.
 • பல ஓட்டைகளும், பிற்போக்குத்தனங்களும் நிறைந்த ஒபாமா கேர் திட்டம் கூட அழிவின் விளிம்பில் உள்ளது.

இந்த புரிதல் பொது சுகாதார வரலாறு குறித்து அறிந்து கொள்வதற்கு அவசியமாகிறது.

தொழிலாளர்களின் உற்பத்தித் திறனை பராமரித்தல்

 • 19-ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் தொழிற்சாலை உற்பத்தி செழித்தோங்கியது, ஆனால் தொழிலாளர்கள் அசுத்தமான நெரிசல் நிறைந்த குடிசைகளில் வசித்தனர், மிகவும் குறைவான, தரமற்ற உணவை சாப்பிட்டார்கள்; ஒரு நாளைக்கு 15 மணி நேரம் வேலை செய்தார்கள்; அசுத்தமான காற்றையும் நச்சுக்களையும் சுவாசிக்க வேண்டியிருந்தது. மேலும் அடிக்கடி அவர்களை முடக்குகின்ற விபத்துக்கள் நடந்தன.
  இது தொடர்பாக சுகாதார சட்டத்துறையின் தலைமை அதிகாரி எட்வின் சாட்விக் கூறும்போது, “பாதகமான சுற்றுச்சூழல் தொழிலாளர்கள் மத்தியில் ஏற்படுத்தும் மனச்சோர்வை நாம் மிகுந்த அக்கறையுடன் கவனிக்க வேண்டியுள்ளது” என்றார். இது போன்ற தீங்கு விளைவிக்கும் சூழல்கள் உற்பத்தியில் ஏற்படுத்தும் இழப்பு, குறிப்பிட்ட வட்டாரம் தொடர்பான தரவுகளின் மூலமும், குறைவான வாழ்நாள் காலம் ஏற்படுத்தும் தாக்கங்கள் மூலமும், நோய் வாய்ப்பட்டவர்களின் உழைக்கும் நேரம் அதாவது உற்பத்தி நேரம் குறைவதன் மூலமும் அளவிடப்படுகிறது.
 • அமெரிக்காவிலும் இதே முறையில் இழப்பை அளவிடும் முறை பயன்படுத்தப்பட்டது. 1908-ல், பொருளாதார நிபுணர் CEA வின்ஸ்லோ கூறும்போது, “மேம்படுத்தப்பட்ட தொழிற்சாலை காற்றோட்டம் உற்பத்தி இழப்பை குறைத்து, பிற்பகலில் தொழிலாளர்கள் சோர்வினால் தடுமாறாமல் தடுக்கிறது” என்கிறார். இர்விங் ஃபிஷெர் என்னும் பொருளாதார நிபுணர், வேலையில் ஈடுபடும் ஆரம்பகாலத்தில் நோய்/இறப்பு மூலம் உற்பத்திக்கான உழைப்பில் ஏற்படும் இழப்பை ஆய்வு செய்யும் ஒரு செலவு-பயன் பகுப்பாய்வு அறிக்கை ஒன்றை தயார் செய்தார்.
  ராக் ஃபெல்லெர் நிறுவனத்தோடு தொடர்புடைய பொருளாதார நிபுணர் ஸ்டேசி மே, சுகாதாரம் குறித்த முதலாளித்துவப் பார்வையை தொகுத்துக் கூறுகிறார் : “வெகுஜன நோய்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதன் மூலமும், மொத்த மக்கள் தொகையின் விகிதத்தில் வயதுவந்த தொழிலாளர்களின் எண்ணிக்கையை உயர்த்துவதன் மூலம், உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளர்களின் வலிமையும் உற்பத்தித் திறனும் அதிகரிக்கிறது” என்றார்.
 • 17-ம் நூற்றாண்டில் ஆப்பிரிக்காவிலிருந்து வந்த அடிமைகள் மூலம் கொக்கிப்புழு எனும் கொடிய நோய் பரவியது. 1910-ல் ராக் ஃபெல்லெர் பொது சுகாதார ஆணையம் வெளியிட்ட நோய் ஒழிப்பு அறிக்கையில் தெற்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்களில் 40% பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறது. இந்த நோய் பாதிப்பினால் தொழிலாளிகளுக்கு இரத்த சோகை ஏற்பட்டு வேலை செய்யும் நேரங்களில் சோம்பலாக ஆக்கி விடுவதாகவும், அது விவசாய உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தி அப்பகுதியின் பொருளாதார முன்னேற்றத்தை பாதிக்கிறது.
  எனவே, இந்த நோயை மட்டுப்படுத்தி உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு, துப்புரவு/கல்வி/மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. மேற்சொன்ன வசதிகள் இருந்த பகுதிகளில் உற்பத்தித்திறன் அதிகரித்தது.

ஆரோக்கியமான தொழிலாளர்கள் மூலம் முதலாளிக்கு நன்மைகள் (இலாபம்) கிடைப்பது காலப்போக்கில் அதிகரித்துக் கொண்டுதான் வந்திருக்கிறது. 2011-ல் வெளியான ஹாய்மெல் அறிக்கையில், தனி மனித ஆரோக்கியமும் மருத்துவ உத்தரவாதமும் உற்பத்தி திறனுக்கும் தொழிலாளிக்கும் அவசியமாகிறது என்றது.

பிரிட்டனில் செயற்பாட்டில் இருக்கும் ஒரு திட்டம் குறித்து 25-07-2017 அன்று நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. இந்தத் திட்டம், பணிச்சூழலால் ஏற்படும் பதட்டம், மன அழுத்தம் ஆகியவற்றுக்குச் சிகிச்சை அளிக்கிறது.

மருத்துவ சேவையில் இனப் பாகுபாடு ஒரு சர்வதேச பிரச்சனை

மூன்றாம் உலக நாடுகளில் வாழும் கருப்புத் தோல் மக்களுக்கும், முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் வாழும் செல்வந்தர்களுக்கும் இடையே சுகாதார நிலையை ஒப்பிட்டுப் பார்த்தால் அதிர்ச்சியாக உள்ளது. உலகில் எட்டு பேரில் ஒருவருக்கு போதுமான உணவு இல்லை, அவர்களில் 98% வளரும் நாடுகளில் வாழ்கின்றனர்.

 • காலரா பற்றிய ஆராய்ச்சி சில சுவாரஸ்யமான நுண்ணறிவுகளை வழங்குகிறது. கி.மு 500-ல் காலரா நோய் இந்தியாவில் உருவானது. 1800-கள் வரை அது தொற்றுநோயாக மாறவில்லை. பின்னர், நகர்ப்புற நெரிசல் அதிகரித்தபோது, வர்த்தகமும் குடிபெயர்வும் அதன் பரவலை எளிதாக்கியது. 1860-களில், உலகம் முழுவதிலும் பல கோடி மக்கள் பல்வேறு தொற்றுநோய்களில் இறந்துவிட்டனர். இப்போது தூய்மையான குடிநீர் கிடைக்கும் இடங்களில் காலரா கிட்டத்தட்ட ஒழிந்துவிட்டது. எனினும், இந்நோய் மூன்றாம் உலக நாடுகளிலும் ஆப்பிரிக்கா, தெற்கிலும் தென்கிழக்கு ஆசியாவிலும் தொடர்கிறது. இரண்டு தடுப்பு மருந்துகள், உப்பு-சர்க்கரை கரைசல், நுண்ணுயிர் எதிர்ப்பிகள் (antibiotics) பாதுகாப்பான நீர் ஆகியவற்றை அடைவதற்கான வழிமுறைகள் நன்கு அறியப்பட்டாலும், 2011-ம் ஆண்டில் கிட்டத்தட்ட 6 லட்சம் பேருக்கு உலகளாவிய ரீதியில் இந்த நோய்த்தொற்று இருப்பதாக அறிவிக்கப்பட்டனர்.
  அனைத்து பகுதிகளிலும், பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் உள்ள நோய் விகிதங்களுக்கிடையில் பாரிய வேறுபாடு உள்ளது. மோசமான சுகாதாரம், நெரிசலான வாழ்விடம், தூய்மையான குடிநீர் இல்லாமை ஆகியவை நோய்த்தொற்றுக்கு முக்கிய காரணங்கள்.
 • 2011-ம் ஆண்டில் வங்கதேசத்து ஐ.நா. அமைதி காப்பாளர்களால் ஹைத்திக்கு ஒரு பெரிய தொற்றுநோய் இறக்குமதியானது.
 • மேலும் அமெரிக்க ஆதரவுடன் சவுதி யேமனி நாட்டின் மீது குண்டு வீசியதால் சுகாதார உள்கட்டமைப்பு அழிக்கப்பட்டு இன்னொரு தொற்றுநோய் வெடித்தது.

முதலாளித்துவ உற்பத்தி மையங்களில் இருந்து விலகியிருப்பதால் உலகின் மிக வறிய மக்களுடைய உடல்நலத்திலும் உயிர்வாழ்விலும் செல்வந்தர்களுக்கு போதுமான அக்கறை இல்லை. காலரா மற்றும் ஏழைகளுக்கு மட்டுமேயான பல தொற்றுநோய்கள் ஆகியவற்றைக் குறைக்க விழையாத அரசுகளுக்கு ஏழைகளின் நலவாழ்வு ஒரு இராணுவ குறிக்கோளை விட குறைவான முக்கியத்துவம் உடையதே.

ஏழை-பணக்காரர், ஆள்பவர்கள்-ஆளப்படுபவர்கள், வெள்ளை-கருப்பின மக்களுக்கு இடையிலான சுகாதாரம் மற்றும் வாழ்நாள் அளவில் நிலவும் அநீதி மற்றும் சமத்துவமின்மை குறித்து அமெரிக்க தாராளவாதிகள் பேசவே செய்கின்றனர்.

 • இஸ்ரேலிலும் பாலஸ்தீனத்திலும் யூதர்களுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையில் ஆயுட்காலத்தில் பத்து வருட இடைவெளியும், குழந்தை இறப்பில் ஐந்து மடங்கு வித்தியாசமும் உள்ளது.
 • நிறவெறி அழிந்து 17 ஆண்டுகள் கழிந்த பின்னும் 2012 தரவுகளின் படி தென் ஆப்பிரிக்காவின் கருப்பின மக்களின் ஆயுள் வெள்ளையர்களைவிட 18 ஆண்டுகள் குறைவாக உள்ளது.

நாம் நிறவெறி ஒழிந்து போனதாக பீற்றிக்கொண்டாலும், மேற்சொன்ன புள்ளிவிவரங்களின் அடிப்படையில் அது இன்னும் இந்த “ஜனநாயக” சமூகத்தில் இன்றளவும் அதிக அளவில் உயிரோடுதான் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்.

அமெரிக்காவில் நிறவெறியும், சுகாதாரமும்

அமெரிக்காவில் பெண்கள், சிறுபான்மையினர், மற்றும் குடியேறியவர்கள் பெறும் ஊதிய பாகுபாட்டின் மதிப்பு ஆண்டு ஒன்றிற்கு $3-4 டிரில்லியன் டாலர்கள். இது மொத்த தேசிய உற்பத்தியில் கிட்டத்தட்ட 25%. ஒரே வேலைக்கு வழங்கப்படும் ஊதியத்தில் உள்ள வேறுபாடு ஒரு புறம் இருக்க, பெண்கள்/கருப்பினத்தவருக்கு கல்வித் தகுதியும், வேலை வாய்ப்புகளும் குறைவாக இருப்பதும் இதற்குக் காரணம். எவ்வாறாயினும், பொருளாதார ரீதியில் ஒழித்து விடக் கூடிய அல்லது கணிசமாகக் குறைக்கக் கூடிய ஒரு வித்தியாசம் அல்ல இது. கூடுதலாக, கருப்பின, லத்தீன் மற்றும் புலம்பெயர்ந்த மக்களுக்கு வழங்கப்படும் தரம் குறைந்த வீடுகள், பள்ளிகள் மற்றும் சுகாதாரம் ஆகிய சேவைகள் மூலம் மிச்சப்படுத்தப்படும் தொகையும் இந்த 25%-ல் சேரும்.

 • “நீக்ரோ இறப்பு வீதத்துக்கும் நோய்களுக்கும் பெரும்பாலும் சமூக பொருளாதார நிலைமைகளே காரணம் அன்றி இன வேறுபாடுகள் காரணமாக இல்லை” என்று ஒரு நூற்றாண்டு முன்பு W.E.B. Dubois கூறினார்.
 • இந்த ஆண்டு, TED talk என்னும் நிகழ்ச்சி உரையாடலில் சமூக அறிவியலாளர் டேவிட் ஆர் வில்லியம்ஸ் ஒவ்வொரு 7 நிமிடத்திலும், ஒரு கருப்பு அமெரிக்கர் அகாலமாக இறக்கிறார், ஒரு நாளில் ஏறத்தாழ 200 பேர் இறக்கின்றனர் என்றார். வெள்ளையர்களுக்கு கிட்டும் சுகாதார வசதிகள் கருப்பின மக்களுக்கும் கிடைக்குமானால் இந்த மரணங்கள் நேராது. இந்த வேறுபாடுகளை வெறுமனே சமமற்ற பொருளாதார நிலைமை கல்வித் தகுதி ஏற்றத் தாழ்வு ஆகியவற்றால் விளக்க முடியாது என்பதற்கான ஆதாரங்களை அவர் வழங்கினார். ஏனெனில், சமமான வருமானம், கல்வித் தகுதி கொண்ட குழுக்களுக்குள் கூட இனரீதியான வேறுபாடுகள் நீடிக்கின்றன. இதற்குக் காரணம் இனரீதியான பாகுபடுத்தலாகவே இருக்க முடியும். கல்லூரிப் பருவத்தினரிடையே கூட கருப்பின மாணவர்கள் வெள்ளை மாணவர்களை விட 4.2 ஆண்டுகள் குறைவான வாழ்நாள் கொண்டுள்ளனர்.
 • இனவெறி என்பதை வெளியில் செல்லும்போது போலீஸார் கூடுதல் சோதனை செய்வது, உணவகங்களில் மரியாதை குறைவாக நடத்தப்படுவது, கடைகளில் எதிர்கொள்ளும் தரமற்ற சேவை, சாலையில் உடன் நடந்து செல்பவர்களால் அச்சத்துடன் பார்க்கப்படுவது என பலவாறாக அளவிட முடியும். மேலும், உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன், புற்றுநோய், இதயநோய் போன்றவற்றால் நிகழும் இள வயது மரணங்கள் ஆகியவற்றுக்கும் அந்த மக்கள் அனுபவிக்கும் இனவெறி நடவடிக்கைகளே காரணம்.
 • மற்றொரு காரணி மருத்துவ பராமரிப்பில் வேறுபட்ட அணுகுமுறை ஆகும், இது வீட்டுவசதி மற்றும் வேலைவாய்ப்பு பாகுபாட்டை பிரதிபலிக்கிறது. இவ்வாறு நிறுவனமயமான பாகுபாட்டை தவிர உள்ளார்ந்த ஏற்றத்தாழ்வு அல்லது இயல்பிலேயே வெளிப்படும் இனவெறியும் இதில் அடங்கும்.

கட்டமைப்பு இனவாதம்

பிரிட்டிஷ் மருத்துவ பத்திரிகையான லான்செட், சமீபத்தில் அமெரிக்க சுகாதார மற்றும் சுகாதாரப் பாதுகாப்பில் உள்ள சமத்துவமின்மை தொடர்பான ஒரு புதிய ஆய்வு தொகுப்பை வெளியிட்டது. “முந்தைய தொகுப்பு வெளியிடப்பட்டதிலிருந்து கிட்டத்தட்ட 3 ஆண்டுகளில், அமெரிக்காவின் சுகாதார நிலைமைகள் மேலும் வீழ்ச்சியைத்தான் கண்டுள்ளது. தனிமனிதர்களின் செயல்களின் மீது சார்ந்து இருக்காத கட்டமைப்பு இனவெறி பற்றிய கட்டுரை, கருப்பு அமெரிக்கர்களின் அனுபவத்தை மையமாகக் கொண்டது. அதில் அடிமைத்தனத்தை நியாயப்படுத்துவதற்கு இனவாதம் உருவாக்கப்பட்ட வரலாற்றையும், வெள்ளை மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கு மரபணு “விஞ்ஞானம்” போன்றவற்றை பயன்படுத்துவதையும் சித்தரிக்கிறது. இவை அனைத்தும் வெள்ளை ஆதிக்கத்தை நிலைநிறுத்தவே பயன்படுகின்றன.

 • 1960-களில் சிவில் உரிமைகள் சட்டம் இயற்றப்பட்ட போதிலும், கட்டமைப்பு இனவெறி, பாகுபாடு, வாடகைக் கொள்கைகள், வேலை பயிற்சி மற்றும் ஊதியங்கள், பள்ளி வேறுபாடுகள் மற்றும் கைது மற்றும் தண்டனைக்கு உள்ள வேறுபாடுகள் ஆகியவற்றால் நிர்ணயிக்கப்பட்ட குடியிருப்பு, தொழில்சார், கல்வி மற்றும் நீதித்துறை போன்றவற்றில் கருப்பின மக்கள் எதிர்கொள்ளும் பாகுபாடுகள் தொடர்கின்றன.
 • 2010 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, சராசரி வெள்ளை அமெரிக்கர்கள் 75% வெள்ளையர் வசிக்கும் பகுதியிலேயே உள்ளனர்; கருப்பின மக்கள் 65% வெள்ளை அல்லாதவர்கள் குடியிருப்புகளிலேயே வாழ்கின்றனர். இது 1940-ம் ஆண்டிலிருந்து மாறாமல் உள்ளது. கருப்பின மக்களின் குடியிருப்புகளில் தரமற்ற வீடுகள், அதிக மாசு மற்றும் நச்சு, குறைவாகக் கிடைக்கும் சத்தான உணவு, குறைவான மருத்துவ மற்றும் சுகாதார வசதிகள் ஆகியவை பொதுவான விஷயமாக உள்ளன. இந்த நிலைமைகள் பிறந்த குழந்தைகளுக்கு நோய்த்தாக்கம், குறைந்த ஆயுட்காலம், புற்றுநோய், நீரிழிவு போன்ற நாள்பட்ட நோய்களின் அதிகரித்த ஆபத்து போன்றவற்றுக்கு வழிவகுக்கின்றன.
 • தேசிய சுகாதார நிறுவனங்கள் நிலையம் வெளியிட்ட ஒரு சமீபத்திய ஆய்வு கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ளபடி, பணியிடத்தில் காட்டப்படும் பாகுபாடு சிறுபான்மை இனத்தவரை பல்வேறு ஆபத்தான சூழலுக்கு உட்படுத்துகிறது. உதாரணமாக, அமெரிக்க அரசின் நிர்வாகத்தின் கீழ் உள்ள ஒரு அணு மின் நிலையத்தில், கருப்பு தொழிலாளர்கள் மீதான கதிர்வீச்சு தாக்கம் ஒப்பீட்டளவில் அதிகமாக இருந்தது. சிறுபான்மை இனத் தொழிலாளர்கள் பெரும்பாலும் தீப்பிடித்தால் வெளியேற இயலாத கட்டிடங்கள் அல்லது குறைந்த பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கொண்ட இடங்கள் போன்ற ஆபத்தான சூழல்களில் வேலை செய்கின்றனர். குறைந்த அல்லது தாமதமாகக் கிடைக்கும் ஊதியம், வேலைக்கிடையில் சிறிதும் ஓய்வு கிடைக்காமல் இருப்பது (தேனீர் அருந்தும் அல்லது சிறுநீர் கழிக்கும் இடைவேளை) ஆகியவை உருவாக்கும் மன அழுத்தம் இதயநோயில் முடிகிறது.

ஆரோக்கிய சமநிலை மற்றும் விநியோக முறைமைகளின் கிட்டத்தட்ட அனைத்து நடவடிக்கைகளிலும் வளர்ந்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா கிட்டத்தட்ட கடைசி இடத்தில் உள்ளது. போதுமான மருத்துவ காப்பீடு வைத்திருக்கும் ஐரோப்பியர்களோடு ஒப்பிடுகையில் அதே போன்ற அமெரிக்கர்களுக்கு சிறந்த மருத்துவம் கிடைப்பதில்லை. விலை உயர்ந்த தொழில்நுட்ப நடைமுறைகள், கட்டுப்படுத்தப்படாத மருந்து விலை, காப்பீட்டு நிறுவனங்களின் உயர் இலாபங்கள் ஆகியவற்றின் முக்கியத்துவமே பிரதானமாக இருப்பதை இது பிரதிபலிக்கிறது.

இது ஆரோக்கியமான உணவு, பாதுகாப்பான சூழல், பணி நிலைமைகள், மன அழுத்தத்தை குறைத்தல், உடற்பயிற்சி வசதி உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. வர்க்கமாகவும் இனமாகவும் பிரிக்கப்பட்டிருக்கும் சமூக அமைப்பு அனைவருக்கும் ஆரோக்கியமான, நீண்ட வாழ்க்கை கிடைப்பதைத் தடுக்கிறது.

 • * Economic data and data on self-reported health and psychological distress are for Asians only; all other health data reported combine Asians and Pacific Islanders
 • † Wealth, poverty, and potential life lost before the age of 75 years are reported for the black population only; all other data are for the black non-Hispanic population.
 • ‡ Serious psychological distress in the past 30 days among adults aged 18 years and older is measured using the Kessler 6 scale (range=0–24; serious psychological distress: ≥13). Sources: wealth data taken from the US Census; 1 x 1 US Census Bureau. Detailed tables on wealth and ownership assets: 2011. http://www.census.gov/people/wealth/data/dtables.html. (Accessed Jan 25, 2017).)

தொகுப்பாக,

 • முதலாளிகள் தங்களது இலாபத்தை அதிகரித்துக்கொண்டே செல்ல தொழிலாளர்களுக்கான சில சுகாதார சேவைகள் அவசியமாகிறது.
 • வேலையில்லாத அல்லது குறைவான திறமை கொண்ட மற்றும் எளிதில் வேறு மாற்று கிடைக்ககூடிய தொழிலாளர்களைப் பராமரிப்பது முதலாளித்துவத்துக்கு முன்னுரிமை அல்ல. இது ஒரு இருண்ட விஷயமாக பார்க்கப்படுவதில்லை. மாறாக ஏதோ மனங்கவர்ந்த பெருமைமிகு ஒரு செலவு-பயன் பகுப்பாய்வாக சித்தரிக்கப்படுகிறது.
 • உதாரணமாக, மருத்துவ மாணவர் மற்றும் குடியுரிமை பயிற்சியின் போது ஒவ்வொரு சொற்பொழிவுக்கும் முன்னரும், மருத்துவ காரணங்களால் ஓராண்டில் இழக்கப்படும் வேலை நேரம்/இழப்பீட்டுத்தொகை மற்றும் ஓராண்டின் மருத்துவ செலவு/செலவுத் தொகை பற்றி விளக்கப்படும். இவ்வாறு நோயாளிகளின் நல்வாழ்விற்கு மாறாக, முதலாளித்துவத்திற்கு இலாபம் தரும் அடிப்படையில் சிகிச்சை அல்லது நோய்த்தடுப்பு ஆகியவற்றின் லாபங்களை அளவிடுவதற்கான நெறிமுறைகள் இளம் மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
 • இதனால், எந்தவொரு அரசும் அனைத்து பிரிவு மக்களுக்கும் சிறந்த நோய்த்தடுப்பு வழங்குவதைக் அடிப்படையாகக் கொண்டிருக்கும் ஒரு சுகாதார முறைமை, உண்மையில் சாத்தியமற்றது என்றும் பொருளாதார ரீதியாக இலாபமற்றது என்றுமே கருதும்.

கோடிக் கணக்கான மக்களையும், வேலைவாய்ப்பற்றவர்களையும், வேலையில்லாதவர்களையும், வயதானவர்களையும், குழந்தைகளையும், அனைத்து இனங்களையும் உள்ளடக்கிய ஒரு வெகுஜன இயக்கம் மட்டுமே இவற்றுக்காகப் போராடி வென்றெடுக்க முடியும்.

Courtesy : CounterPunch

Permanent link to this article: http://new-democrats.com/ta/capitalist-logic-of-denying-health-care-to-minority-races-ta/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
ஸ்டெர்லைட் கொலைகள் – சட்டத்தை மீறியவர்கள் யார்?

சட்டப்படி நடந்த கிரானைட் ஊழல் வழக்கு, தாதுமணல் கொள்ளை வழக்கு என்ன ஆனது? அதில் செத்த உயிர்கள் எத்தனை? சட்டப்படி நடந்ததால் கேன்சர் உட்பட பல்வேறு நோயால்...

இது போக்குவரத்து தொழிலாளர் போராட்டம் மட்டுமல்ல – ஐ.டி ஊழியர்களே ஆதரியுங்கள்!

பிரச்சனை தொழிலாளர்களின் ஒழுங்கு பற்றியது அல்ல. ரூ 7,000 கோடி தொழிலாளர்களின் ஓய்வூதிய பணத்தை மடை மாற்றிய அதிகாரிகளின் ஒழுங்கின்மைக்கு என்ன மருந்து? முந்தைய சம்பள ஒப்பந்த...

Close