நமது சங்க உறுப்பினரின் 4-வது ஆடியோ பதிவு. கார்பபரேட்டுகளுக்கும், ஊழியர்களுக்கும் உள்ள உறவு என்ன? யார் யாரை, எப்படி சார்நதிருக்கிறார்கள் என்பதை விளக்கும் பதிவு
“என் மொதலாளிக்கு நான் நேர்மையாக இருக்கணுமில்ல, என் மொதலாளிக்கு யூனியன்ல சேர்றது எல்லாம் பிடிக்குமா சார். அவருக்கு நான் நேர்மையா உண்மையா இருக்கணுமே சார்”
- “எல்லா முதலாளிங்களும் வருசா வருசம் 20% லாப வீதம் காட்டியிருக்காங்க. 5-10 லட்சம் ஏன் கொடுக்கணும், வெறும் 3 லட்சத்துக்கு ஆள் எடுக்கலாம். அதுக்கு forced resignations கொடுக்க வைக்கிறேன்”
- “சக்கையா புழிஞ்சிட்டு இனிமே தேவையில்லைன்னு துரத்தி விட்ட நிறைய பேரை நீங்க சந்திச்சிருக்கீங்களா? முதலாளி லாப நோக்கம் இல்லாம காய் நகர்த்தல. உங்க பயன்பாடு முடிஞ்ச பிறகு தூக்கி எறிய தயங்க மாட்டாங்க.”
- “சர்ட்டிபிக்கட்ட கொடுத்தாதான் வேலைக்கே சேர்த்துப்பாங்க, இது முதலாளித்துவத்தோடு அடக்குமுறை இல்லையா?”
- “இத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு கொடுத்தோம்னு சொல்றாங்க. எந்தப் பொருளையும் எடுத்துக்கோங்க, இதில உழைப்ப கழிச்சிட்டு முதலாளியோட பங்களிப்பு என்னன்னு கேட்டீங்கன்னா, ஒண்ணுமே கிடையாது”
- “எங்க இன்வெஸ்ட் பண்ணினாலும், உழைப்பு-ன்னு ஒன்னு இல்லைன்னா முதலாளிங்க இல்ல. நிஜம் என்னன்னா உழைப்பை கழித்து விட்டு பார்த்தால், முதலாளிகள் வெறும் ஜீரோதான்”