Category: கண்டன அறிக்கை

காக்னிசன்ட்(CTS) – ன் வேலை நேர அதிகரிப்பு – புஜதொமு ஐ. டி. ஊழியர்கள் பிரிவு கண்டன அறிக்கை:

“காக்னிசண்ட்(CTS) நிறுவனமே, ஊழியர்களை ஒட்ட சுரண்டுவதற்கான 10 மணி நேர வேலை நேரத்தை திரும்ப பெறு”.

Permanent link to this article: http://new-democrats.com/ta/cts-10-hr-tamil/

தொழிற்சங்க முன்னணியாளர்கள் ஐடி நிறுவனங்களால் சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்யப்படுவதை கண்டிக்கிறோம்!

கொரோனா நோய்த்தொற்று ஏற்படுத்தியிருக்கும் சூழலை பயன்படுத்திக்கொண்டு ஐடி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை சட்டவிரோதமாக வேலையை விட்டு நீக்குவதும், ராஜினாமா செய்யும்படி பல வழிகளில் நிர்ப்பந்தித்து வருவதையும் நாம் தொடர்ந்து அம்பலப்படுத்தியும் எதிர்த்தும் வந்துள்ளோம்.

இந்நிலையில் தற்போது ஐடி ஊழியர்களுக்காக களத்தில் நின்று செயல்படும் தொழிற்சங்கங்களை முடக்கும் நோக்கில் தொழிற்சங்க முன்னணியாளர்களை குறிவைத்து சட்டவிரோதமாக பணி நீக்கம் செய்யும் வேலையில் ஐடி நிறுவனங்கள் இறங்கியுள்ளன.

Permanent link to this article: http://new-democrats.com/ta/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d/

தொழிலாளர்கள் மீதான போரை நிறுத்து! – பு.ஜ.தொ.மு மற்றும் தோழமை சங்கங்கள் அறிக்கை

தொற்று நோய் மற்றும் அதன் பாதிப்பு காலங்கள், என்பது பா.ஜ.க அரசைப் பொறுத்த வரை உழைக்கும் வர்க்கத்தின் மீது ஏறித் தாக்கவும், அதனிடமிருந்து குறைந்தபட்ச ஜனநாயக மற்றும் பொருளாதார உரிமைகளைக் கூட பிடுங்கவும் கிடைத்த அருமையான வாய்ப்பு. ஏனென்றால், பாஜகவைப் பொறுத்தவரை மூலதனத்தின் வளர்ச்சிதான் பொருளாதாரத்தின் வளர்ச்சி

Permanent link to this article: http://new-democrats.com/ta/corona-lockdown-stop-war-against-labors-ndlf-statement/

வேதாரண்யம் அம்பேதகர் சிலை உடைப்பு : புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் (ஐ.டி. ஊழியர்கள் பிரிவு) கண்டன அறிக்கை

வேதாரண்யம் பகுதியில் முக்குலத்தோர் புலிப்படை என்ற சாதிவெறி அமைப்பை சேர்ந்த, சமூகவிரோதிகள், அண்ணல் அம்பேத்கரின் சிலையை தகர்த்துள்ளனர். அத்துடன் அந்தக் காட்சியை காணொளியின் மூலம் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு தங்கள் சாதி வெறி வன்மத்தை பரப்பியுள்ளனர்.

இச்சிலை உடைப்பு சம்பவத்தை புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி (ஐ.டி. ஊழியர்கள் பிரிவு) வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும் இச்சிலை உடைப்புச் சம்பவத்தில் ஈடுபட்ட சாதிவெறியர்களை குண்டர் சட்டத்தில்Q கைது செய்ய வேண்டும் என்றும் வேடிக்கைப் பார்த்த காவல்துறையைச் சேர்ந்தவர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்றும் கோருகிறது.

 

Permanent link to this article: http://new-democrats.com/ta/%e0%ae%b5%e0%af%87%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%87%e0%ae%a4%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf/

பாய்ந்தது பாசிசம் – ஆனந்த் தெல்தும்டே கைது – புஜதொமு ஐடி ஊழியர்கள் பிரிவு கண்டனம்

மனித உரிமைப் போராளிகள், தொழிலாளர் நல வழக்கறிஞர்கள், அறிவுத்துறையினர் என சமூகத்தின் முற்போக்கு சக்திகள் அனைவரையும் அச்சுறுத்தி அடக்குவதற்கு ஆள்தூக்கி ஊஃபா சட்டத்தை மோடி அரசு பயன்படுத்துகிறது. ஆனந்த் தெல்டும்டேவை பிப்ரவரி 11-ஆம் தேதி வரை கைது செய்யக் கூடாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பைக் கூட மதிக்காமல் அவரை அடாவடித்தனமாக கைது செய்துள்ளனர்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/anand-teltumde-arrest-ndlf-itemployeeswing-condemns/