Category: இடம்

வருகிறது தேர்தல் : தேர்தல்னா எப்படி நடக்கணும்?

இது தேர்தல். பாரபட்சம் காட்ட முடியாது. யார் நல்லவர் என்றாலும் அவரைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும், அதில் ஆண் என்ன, பெண் என்ன? மகனா, மருமகளா என்பதற்கெல்லாம், இங்கென்ன வேலை?

Permanent link to this article: http://new-democrats.com/ta/a-true-democratic-election/

டி.சி.எஸ் : இந்தியாவை ஏழையாக்கும் அயல் சேவை திருப்பணி!

இந்தியாவில் ஒரு ஊழியர் குறைந்த சம்பளத்தில் வேலை வாங்கப்பட்டு அதன் பலன் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு லாபமாக கடத்தப்படுகிறது. இதன் விளைவாக கணிசமான மதிப்பு வாய்ந்த அந்நியச் செலாவணியை நமது நாடு இழப்பதோடு மட்டும் இல்லாமல் நாம் தொடர்ந்து ஒப்பீட்டு வறிய நிலையில் வைக்கப்படுகிறோம்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/tcs-pushing-india-back-in-favour-of-foreign-companies-ta/

விவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ – ஒரு நேரடி அனுபவப் பார்வை

விவசாயத்திலிருந்து சென்று ஏன் இவ்வாறு இன்னல்களுக்கு ஆளானார்கள் என்று யோசிக்கும்போது தான் இந்த பதிவை செய்ய வேண்டும் என்று நினைத்தேன். இவர்கள் அரசின் செயல் திட்டத்தின் மூலமாகவோ, அல்லது அரசு சார்ந்த சுயநலவாதிகளின் விளையாட்டாலோ நிலத்தையும், விவசாயம் செய்யும் உரிமையும் இழந்தவர்கள்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/farmers-employment-ngo-a-experiential-view-1/

டி.சி.எஸ் லாபம் : சம்பள உயர்வு இல்லை, புதிய ஊழியர்களுக்கு கணினி கூட இல்லை!

அமருவதற்கு நாற்காலி, கணினி கிடைப்பதற்கு சிலமணி நேரம் முன்பே வேலைக்கு வரவேண்டும் என்பார்கள். அவ்வாறு வந்தாலும் நடுவில் வெளியே சென்று வரும்போது அதை இன்னொருவர் எடுத்துக்கொள்வார். அவருடன் வாக்குவாதம் ஏற்படும். அதனால் ஊழியர்களிடைய மனக்கசப்பு ஏற்பட்டுவிடும்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/tcs-employees-suffer-even-to-access-computers-at-work/

பரியேறும் பெருமாள் : சாதியைப் பற்றிய முகத்திலறையும் படம்

பரியனின் இந்த உருமாற்றம் உயிரோட்டத்துடன் வளர்கிறது, அந்த வளர்ச்சியில் பார்வையாளர்களும் பரியனோடு சேர்ந்து பயணிக்கின்றனர். ஒரு தயக்கமான கேள்வியாக, ஒரு வேண்டுகோளாக ஆரம்பிப்பது, படிப்படியாக ஒரு குமுறலாக வளர்ந்து அவன் மீது வீசப்படும் இழிவுகளை மூழ்கடித்து விடுகிறது.

 

Permanent link to this article: http://new-democrats.com/ta/pariyerum-perumal-a-hard-hitting-examination-of-caste-in-our-society-en/

யமஹா : முதலாளியின் சட்ட மீறல், துணை நிற்கும் அரசு, எதிர்த்து போராடும் தொழிலாளிகள்

நாங்கள் வந்த வாகனம், கடந்து வந்த சாலைகள், எதிரிலும், எங்களை கடந்தும் சென்ற வாகனங்கள், இரு பக்கமும் நின்றிருந்த ஆலைகள், ஊரையே மறைத்து நின்ற மேற்கூரை போன்ற பாலம், மின் நிலையம், ஊஞ்சல் போன்று சென்றுகொண்டிருந்த மின்சார வயர்கள், உயர் அழுத்த கோபுரங்கள், சாலைகள், ஆட்டோ, இவை அனைத்திலும் தொழிலாளிகளது உழைப்பை நீக்கிவிட்டால் என்ன மிஞ்சும்? என்று கேள்வி எழுந்தது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/yamaha-workers-struggle-a-report/

டி.சி.எஸ் ஊழியர்கள் ஈட்டுவது பெருமளவு லாபம், பெறுவது சொற்ப ஊதிய உயர்வு

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அதிக வருமான வந்துள்ளது என்று சொல்லும் தலைமை அதிகாரி அதெல்லாம் அங்கு வேலை பார்க்கும் தொழிலாளர்கள் புதிய தொழில்நுட்பத்தை படித்து புரிந்துகொண்டு கடுமையான உழைப்பில் ஈட்டியது என்பதை ஏன் மறைக்க வேண்டும்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/tcs-big-profits-pays-employees-peanuts/

தொழிலாளிக்கு ஆயுத பூஜை என்றைக்கு?

சொன்னாலும் சொல்லாவிட்டாலும் கைத்தறி முதல் கம்ப்யூட்டர் வரை எல்லா எந்திரங்களும் தொழிலாளிகள் பெற்றெடுத்தவை தான். அவர்களது உழைப்பின் விளைபொருட்கள் தான். அதனால் தான் ஆத்திரம் கரைபுரண்டாலும் கூட தான். வேலை செய்யும் எந்திரத்தை நொறுக்கவோ நாசம் செய்யவோ தயங்குகிறான் தொழிலாளி.

Permanent link to this article: http://new-democrats.com/ta/ayudha-puja-for-workers/

ஐ.டி ஊழியர்களின் சமூகப் பணிகள் – தேவை ஒரு புதிய பார்வை

சமூகத்தில் ஏன் எந்த பெரிய மாற்றமும் நிகழாமல் உள்ளது? எவ்வளவு பிரச்சினைகள் நடக்கின்றன? அதற்கெல்லாம் பேசுகிறார்கள், எழுதுகிறார்கள் ஆனால் எந்த மாற்றமும் தெரியவில்லையே என்று பலர் இதுபோன்ற செயல்பாடுகளிலிருந்து விலகிக் கொள்கிறார்கள். அவர்கள் இடத்தில் புதிதாக சிலர் இணைந்து கொள்கிறார்கள்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/social-work-by-it-employees-a-new-perspective/

ஊழலை பேசினால் சஸ்பெண்டா? – மாநகர பேருந்து நிர்வாகத்துக்கு ஐ.டி ஊழியர்கள் பிரிவு கண்டனம்

ம மீம் தயாரிப்பு : பிரவீன்

Permanent link to this article: http://new-democrats.com/ta/ndlf-it-employees-wing-condemns-mtc-management-for-suspending-bus-driver-exposing-corruption/

ஐ.டி வேலை நீக்க குறும்படம் (English)- வாழ்த்துக்கள்

இன்றைய குழப்பமான சிக்கலான கட்டமைப்புகள் அமைந்த ஐடி துறையில் எப்படி எல்லாம் ஒரு நபர் பணம் பதவிக்காக ஆசை காட்டி நிறுவனங்கள் அடியாட்கள் போல பயன்படுத்திக் கொள்கிறது என்பதை கண்கூடாக காணலாம்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/it-layoff-short-film/

BPO, Call Center, KPO – சங்கமாக அணி திரள்வதே தேவை

சுரண்டலையும், கடுமையான பணிச்சூழலையும், சந்தித்து குறைவான சம்பளத்துடன் வேலை செய்யும் நமக்கு பணிப்பாதுகாப்பு என்பது சுத்தமாக இல்லை. நிர்வாகம் நினைத்தால் நம்மை எப்போது வேண்டுமானாலும் வேலையைவிட்டுத் தூக்கியெறியலாம். ஒரு வேலையை விட்டு அடுத்த வேலைக்கு மாறும் போது முன்னர் வாங்கிய சம்பளம் கூடக் கிடைக்குமா என்பதற்கு இங்கே உத்தரவாதம் இல்லை.

Permanent link to this article: http://new-democrats.com/ta/bpo-callcenter-kpo-unionization-need-of-the-hour/

வெரிசான்-இன்ஃபோசிஸ் டீல் : ஐ.டி ஊழியர்களை அடிமைகள் என்று சொல்வதில் என்ன தவறு?

நானும் ஐ.டி துறையில் தான் இருக்கிறேன். ஆனால், என்மீது சுமத்தப் படும் அடிமைத்தனத்தை எதிர்க்கிறேன். என் வேலைக்கு எப்போதும் ஆபத்து இருக்கிறது என்று தெரியும். ஆனாலும், அடிமைத்தனத்தை உணராமல் இருப்பதை விட உணர்வோடு இருப்பது எவ்வளவோ நல்லது என்று நினைக்கிறேன்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/verizon-infosys-deal-what-is-wrong-in-terming-it-slave-trade-ta/

ஐ.டி ஊழியர் வாழ்க்கை : ஜாலியா, பிரச்சனைகளா – பாகம் II

This entry is part 1 of 1 in the series ஐ.டி வாழ்க்கை II

இது உங்களுக்கு ஓரளவு தெளிவை அளித்திருக்கும் என்று நினைக்கிறேன். இதில் சொல்லப்பட்டதை தவிர்த்து வேறு எந்த வழியிலாவது, பணி நீக்கம் செய்வது தெரிந்தால், தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இதை உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/it-life-fun-or-problems-ii-1-ta/

உட்காரும் உரிமைக்காக தொழிலாளி வர்க்கத்தின் போராட்டம்

நாள் முழுவதும் உட்காராமல் நின்று கொண்டே இருக்க வேண்டும், தண்ணீர் குடிக்கவோ, சிறுநீர் கழிக்கவோ கூட அனுமதி கிடையாது. உணவு அருந்த பத்து நிமிடம் இடைவேளை, அதற்குள் சிறுநீர் கழித்துக் கொள்ளவேண்டும். வாரத்தின் ஏழு நாளும், ஏன் வருடத்தின் அனைத்து நாட்களிலும் கூட இதுதான் நிலைமை. வாடிக்கையாளர் வந்தாலும் வராவிட்டாலும் நின்றுகொண்டேதான் இருக்க வேண்டும்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/struggle-for-the-right-to-sit/

Load more

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE