Appraisal, Appraisal, Useless and Voiceless Appraisal! இந்த அப்ரைசல் வச்சு தாங்க எல்லா ஐடி கம்பெனிகள் ஆடும் போங்கும் பித்தலாட்டமும்; இதை எதிர்த்து பேச முடியாமல் நம்ம போல பல ஐ.டி ஊழியர்கள் வெளியே போறாங்க. ஒவ்வொரு ஆண்டும் மற்றும் ஒவ்வொரு காலாண்டும் அப்ரைசல் என்ற பெயரில் ஊழியர்களை வெச்சு ஆடுபுலி ஆட்டம் போல ஆடிக் கொண்டிருக்கிறார்கள் ஐ.டி கம்பெனிகள். இதை எதிர்த்து கேட்டா “ரொம்ப பெரிய மனசோட” இன்னும் நாலு நெகட்டிவ் கமெண்ட்ஸ் கொடுத்து …
Category: பொருளாதாரம்
Permanent link to this article: http://new-democrats.com/ta/appraisal_atrocities/
Work From Home – எனப்படும் எகிப்திய கொடுஞ்சிறை!
அன்பார்ந்த ஐ.டி. ஊழியர்களே, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நாம் Work From Home என்ற பெயரில் வீட்டிலிருந்து வேலை செய்து வருகிறோம். எந்த தொழிற்துறையில் வேலை செய்பவருக்கும் கிடைக்காத – ஏன் நமது ஐ.டி. துறையிலேயே மிகவும் சீனியர்களுக்கு மட்டுமே கிடைத்து வந்த- வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் இந்த வசதி, நம் அனைவருக்கும் கிடைத்த போது, “ஆகா..! இனி குடும்பத்தினருடன் சேர்ந்திருக்கலாம்” என நினைத்து அகமகிழ்ந்தோம். ஆனால் நாம் நினைத்தது போன்று நம்மால் குடும்பத்தினருடன் சிலமணி நேரமாவது …
Permanent link to this article: http://new-democrats.com/ta/work-from-home-issue/
Permanent link to this article: http://new-democrats.com/ta/cts-10-hr-tamil/
லாக்டவுன் காலத்துக்கு சம்பளம் கோரும் வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு
கடந்த 25.3.2020 முதல் லாக்டவுன் அறிவிக்கப்பட்ட போது, மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் 29.3.2020 அன்று ஒரு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவின் அடிப்படையில், மொத்த லாக்டவுன் காலத்துக்கும் முழு சம்பளம் அளிக்குமாறு அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் உத்தவிட்டிருந்தது.
இந்நிலையில், மேற்படி வழக்கில் உச்சநீதிமன்றம் 12.6.2020 அன்று தீர்ப்பு சொல்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தீர்ப்பு வழங்கவில்லை. மாறாக, ஜூலை இறுதி வாரத்துக்கு ஒத்திவைத்துள்ளது.
Permanent link to this article: http://new-democrats.com/ta/lock_down-salary-case-judgement-postponed/
Permanent link to this article: http://new-democrats.com/ta/cts-layoff-retrenchment-during-covid19-press-release-ta/
முதலாளித்துவத்தின் அப்பட்டமான தோல்வி, சோசலிசம் ஒன்றுதான் தீர்வு!
அனைவரும் இந்த கம்யூனிட்டி கிச்சனில் சென்று சாப்பிட்டு வருவார்கள் அந்த கம்யூனிட்டி கிச்சனில் குழந்தைகளுக்கு ஏற்ற மாதிரியும்,முதியவர்களுக்கு ஏற்ற மாதிரியும், கர்ப்பிணிகளுக்கு ஏற்ற மாதிரியும் சத்தான உணவுகளை தயாரித்து கொடுப்பார்கள். அந்த தொழிலாளர்களின் குழந்தைகள் படிப்பதற்கு பள்ளிக்கூடங்கள் அந்த கூட்டுறவு பண்ணையில் வளாகத்திற்குள்ளேயே இருக்கும். அந்த தொழிலாளிக்கு உடல்நிலை சரியில்லை என்றால் மருத்துவமனைகள் இந்த கூட்டுறவு பண்ணைகளுக்குள்ளே இருக்கும். மற்றும் தொழிலாளர்கள் வேலை செய்த நேரம் தவிர தங்கள் நேரத்தை பொழுது போக்குவதற்கு நீச்சல் குளம்,விளையாட்டு மைதானம்,திரையரங்கு மற்ற பிற அனைத்தும் அந்தக் கூட்டுறவு பண்ணைகளுக்குள்ளேயே இருக்கும்
Permanent link to this article: http://new-democrats.com/ta/inherent-crisis-of-capitalism-socialism-is-the-way/
கொரோனோவோ கொளுத்தும் வெயிலோ உழைப்புக்கு ஓய்வு கிடையாது
ரோடு போடுவதற்கு முன்பு,அந்த தார் போன்ற அடர்த்தியான திரவத்தை ஒரு தொழிலாளி காலில் ஒரு சாதாரண ரப்பர் செருப்பு போட்டுக்கொண்டு தலையில் வெயிலை மறைப்பதற்கு ஒரு தொப்பி கூட அணியாமல் துண்டை மட்டும் தோளில் போட்டுக்கொண்டு அவர் பாட்டுக்கு மிகுந்த விரக்தியுடனும் வேறு வழி இல்லாமலும் அந்த வேலையை செய்துகொண்டிருந்தார். வெயிலின் உக்கிரம் தாங்க முடியவில்லை.
Permanent link to this article: http://new-democrats.com/ta/kundrathur-road-construction-workers-corona-lockdown/
புலம்பெயர் தொழிலாளர்களின் கண்ணியம் காக்கப்பட வேண்டும்.
உலகத் தரம் வாய்ந்த இந்த கட்டிடங்களை நமக்காக எழுப்பியவர்கள் யார்? பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகளின் வசதிகளை மலிவு விலையில் நமக்காக ஏற்படுத்திக் கொடுத்தது யாருடைய உழைப்பு? நாம் பயன்படுத்தும் சாலைகளை, நமது வீடுகளை, நாம் வேலை பார்க்கும் அலுவலகத்தை, ஏன் நாம் வசிக்கும் இந்த நகரத்தையே நமக்காக செதுக்கிக் கொடுத்தவர்கள் யார்? தில்லி, மும்பை, சென்னை என இந்தியாவின் புகழ் பெற்ற ஒவ்வொரு நகரத்தின் நவீனத்திலும் புலம் பெயர் தொழிலாளர்களின் வேர்வையும் இரத்தமும் கலந்துள்ளது.
Permanent link to this article: http://new-democrats.com/ta/plight-of-migrant-labours/
தொழிலாளர்கள் மீதான போரை நிறுத்து! – பு.ஜ.தொ.மு மற்றும் தோழமை சங்கங்கள் அறிக்கை
தொற்று நோய் மற்றும் அதன் பாதிப்பு காலங்கள், என்பது பா.ஜ.க அரசைப் பொறுத்த வரை உழைக்கும் வர்க்கத்தின் மீது ஏறித் தாக்கவும், அதனிடமிருந்து குறைந்தபட்ச ஜனநாயக மற்றும் பொருளாதார உரிமைகளைக் கூட பிடுங்கவும் கிடைத்த அருமையான வாய்ப்பு. ஏனென்றால், பாஜகவைப் பொறுத்தவரை மூலதனத்தின் வளர்ச்சிதான் பொருளாதாரத்தின் வளர்ச்சி
Permanent link to this article: http://new-democrats.com/ta/corona-lockdown-stop-war-against-labors-ndlf-statement/
கொரோனா அவசரநிலை: தகவல் தொழில் நுட்பத்துறை தொழிலாளர்கள் நலன்.
நம்முடைய தாத்தா பாட்டி காலத்தில் பிளாக் நோய், காலரா, பெரியம்மை போன்ற கொள்ளை நோய்களுக்கு மக்கள் கொத்துக் கொத்தாக இறந்து போனதாக நமது குழந்தைப் பருவத்தில் கதைகளாகக் கேட்டுள்ளோம்.
நம்முடைய காலத்தில் இது போன்ற கொள்ளை நோய்களை நாம் பார்த்திராவிட்டாலும் சுனாமி பேரலை, வருதா புயல், நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்ட மழை வெள்ளப்பெருக்கு என இயற்கைப் பேரிடரில் பலர் தங்களுடைய உடமைகளையும் உயிர்களையும் இழந்த துயரத்தை நாம் எதிர்கொண்டுள்ளோம்.
ஆனால் இன்று உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது. உலக சுகாதார நிறுவனம் இதை உலகப் பேரிடராக அறிவித்துள்ளது. இதுவரை சுமார் 150 நாடுகளில் இந்த நோய் பரவியுள்ளது.
Permanent link to this article: http://new-democrats.com/ta/corona-emergency-situation-it-employees/
கான்பூர் தோல் பதனிடும் தொழில்களை அழிக்கும் பா.ஜ.க ஆட்சி
2014 முதலே தோல் தொழில் நசியத் துவங்கியது. கான்பூரிலுள்ள தோல் அங்காடியான “பெக் பாக்” வெறிச்சோடிப் போனது. தோல் வியாபாரிகள் கழகத்தில் ப்ரெசிடெண்ட், அப்துல் ஹக், அவரது பாட்டனார் சொன்னதை நினைவு கூர்ந்தார். 1888-ல், பெக் பாகில், அவரது பாட்டனார் தோல் தொழிலைத் தொடங்கினார். பா.ஜ.க ஆட்சிக்கு வந்த ஒரு வருடத்தில் ஹக் சொன்னது, பெக் பாக் விரைவில் காணாமல் போகும். அது உண்மையாகி வருகிறது.
Permanent link to this article: http://new-democrats.com/ta/kanpur-leather-industry-closures-after-2014/
Permanent link to this article: http://new-democrats.com/ta/onion-price-economic-slowdown-layoff-jeyaranjan-interview/
Permanent link to this article: http://new-democrats.com/ta/it-companies-denies-human-rights-harini-suicide/
ஐ.டி. துறை கட்டாயப் பணி நீக்கம், எதிர்கொள்வது எப்படி? – வீடியோ
ஐடி நிறுவனங்களில் தொடர்ச்சியாக நடத்தப்படும் ஆட்குறைப்பு நடவடிக்கைகள், ஐ.டி. ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.. ஐ.டி. நிறுவனங்கள் இந்த ஆட்குறைப்புக்குச் சொல்லும் காரணம் என்ன? ஐ.டி. ஊழியர்களை நிறுவனத்தில் இருந்து வெளியேற்ற இந்நிறுவனங்கள் சொல்லும் காரணங்கள் உண்மையானவையா? நிறுவனத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? எப்படி எதிர்கொள்ள வேண்டும்? விளக்குகிறார் ஐ.டி. நிறுவன ஊழியர் வாசுகி. தனது வேலை பறிக்கபட்ட சமயத்தில் NDLF IT தொழிற்சங்கத்தை நாடி, சட்டரீதியாக போராடி மீண்டும் பணியிலமர்ந்தார். பணியிழப்பு ஏற்பட்டால் எப்படி எதிர்கொள்வது? பாருங்கள்! பகிருங்கள்!
Permanent link to this article: http://new-democrats.com/ta/vasuki-vinavu-video/
Cognizant நிறுவனத்தில் ஆட்குறைப்பு – Cost Cutting என்னும் அறமற்ற செயல் – ஆட்குறைப்பு நடவடிக்கையை ஊழியர்கள் எதிர்கொள்வது எப்படி?
// தொடர்ச்சியாக பல்வேறு ஐ.டி நிறுவனங்களின் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் – லே-ஆஃப் நிர்வாகம் நினைத்தவுடன் ஊழியர்களை வேலையை விட்டு அனுப்ப முடியுமா? மனித வள அதிகாரி(H. R) உங்களை ராஜினாமா செய்யச் சொன்னால் என்ன செய்வது? நாம் என்ன செய்ய வேண்டும்? நமக்கான உரிமைகள் என்ன??? // கடந்த சில நாட்களாக ஊடகங்களில் பரபரப்பாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்தி காக்னிஸன்ட் நிறுவன மூத்த அதிகாரி(Chief Executive Officer) அந்நிறுவன ஊழியர்கள் அனைவருக்கும் அனுப்பப்பட்டிருக்கும் ஆட்குறைப்பு சம்பந்தமான மின்னஞ்சல் …
Permanent link to this article: http://new-democrats.com/ta/cognizant-layoffs-it-employee-unionize/