Category: முதலாளிகள்
கடந்த 25.3.2020 முதல் லாக்டவுன் அறிவிக்கப்பட்ட போது, மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் 29.3.2020 அன்று ஒரு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவின் அடிப்படையில், மொத்த லாக்டவுன் காலத்துக்கும் முழு சம்பளம் அளிக்குமாறு அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் உத்தவிட்டிருந்தது.
இந்நிலையில், மேற்படி வழக்கில் உச்சநீதிமன்றம் 12.6.2020 அன்று தீர்ப்பு சொல்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தீர்ப்பு வழங்கவில்லை. மாறாக, ஜூலை இறுதி வாரத்துக்கு ஒத்திவைத்துள்ளது.
Permanent link to this article: http://new-democrats.com/ta/lock_down-salary-case-judgement-postponed/
அனைவரும் இந்த கம்யூனிட்டி கிச்சனில் சென்று சாப்பிட்டு வருவார்கள் அந்த கம்யூனிட்டி கிச்சனில் குழந்தைகளுக்கு ஏற்ற மாதிரியும்,முதியவர்களுக்கு ஏற்ற மாதிரியும், கர்ப்பிணிகளுக்கு ஏற்ற மாதிரியும் சத்தான உணவுகளை தயாரித்து கொடுப்பார்கள். அந்த தொழிலாளர்களின் குழந்தைகள் படிப்பதற்கு பள்ளிக்கூடங்கள் அந்த கூட்டுறவு பண்ணையில் வளாகத்திற்குள்ளேயே இருக்கும். அந்த தொழிலாளிக்கு உடல்நிலை சரியில்லை என்றால் மருத்துவமனைகள் இந்த கூட்டுறவு பண்ணைகளுக்குள்ளே இருக்கும். மற்றும் தொழிலாளர்கள் வேலை செய்த நேரம் தவிர தங்கள் நேரத்தை பொழுது போக்குவதற்கு நீச்சல் குளம்,விளையாட்டு மைதானம்,திரையரங்கு மற்ற பிற அனைத்தும் அந்தக் கூட்டுறவு பண்ணைகளுக்குள்ளேயே இருக்கும்
Permanent link to this article: http://new-democrats.com/ta/inherent-crisis-of-capitalism-socialism-is-the-way/
இந்தியாவில் அதிக அளவில் பிஸ்கட் தயாரிக்கும் நிறுவனமான பார்லி நிறுவனம் தனது விற்பனை குறைந்துள்ளதால் 8000 முதல் 10000 தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்கப் போவதாக தெரிவித்துள்ளது. மற்றொரு பெரிய பிஸ்கட் தயாரிக்கும் நிறுவனமான பிரிட்டானியா, மக்கள் ஐந்து ரூபாய் பிஸ்கட்டை வாங்குவதற்கு முன் இரண்டு முறை யோசிக்கிறார்கள் என்று தெரிவிக்கிறது.
Permanent link to this article: http://new-democrats.com/ta/life-of-labor-19aug-23aug-from-thewire/
இந்த வளர்ச்சிக்காக விவசாய விளை நிலங்களையும் கிராமப்புற மக்களையும் துரத்தி அடித்து சென்னை கோவை போன்ற பகுதிகளை சார்ந்து வாழ செய்ததன் விளைவு, பெருங்குடி போன்ற இடங்களில் குவிந்து கிடக்கும் குப்பைமேடுகள். ஆகவே காற்று மாசுபாடு என்பது தனி ஒரு பிரச்சனை அல்ல சுற்றுப்புறச்சூழல், தொழில் கொள்கை, நடைமுறைப்படுத்துவதற்கான திட்டமிடல் என்று ஒரு முழுமையிலிருந்து பார்க்க வேண்டும் என்கிறது அறிவியல்
Permanent link to this article: http://new-democrats.com/ta/corporate-loot-in-the-name-of-environment-safety/
முதலில் தேர்தல் பிரதிநிதித்துவத்தில், மக்களின் கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில் திரும்ப அழைத்தல்(பதவி பறிக்கப்படுத்தல்) என்ற ஒரு மாற்று இருக்கிறது என்பதை முதலில் ஏற்றுக்கொள்ளுங்கள், அது சாத்தியமா இல்லையா என்பதை பிறகு நடைமுறையில் சாத்தியப்படுத்துவோம்.
Permanent link to this article: http://new-democrats.com/ta/parliament-elections-thinking-out-of-the-box/
தொழிலாளர்களின் இந்தப் போராட்டத்தை முடக்குவதற்கு, போலீசு, நீதிமன்றம் என்று ஆளும்வர்க்கத்தின் அனைத்து கரங்களையும் கார்ப்பரேட் நிர்வாகம் பயன்படுத்துகிறது. இதனை எதிர்த்து “தொழிலாளர் ஒற்றுமை” என்ற ஒரே ஆயுதத்தை நம்பித் தொழிலாளர்கள் களத்தில் உள்ளனர்.
Permanent link to this article: http://new-democrats.com/ta/mettur-chemplast-plant-workers-protest/
சுற்றுச்சூழல் மாசுபடுவதைக் காரணம் காட்டி தான் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு அரசு தடைவிதித்தது. ஆனால், உண்மையில் அரசிற்கு சுற்றுச்சூழல் மீது எந்த அக்கறையும் கிடையாது மக்கள் மீதும் எந்த அக்கறையும் கிடையாது.
Permanent link to this article: http://new-democrats.com/ta/tn-plastic-ban-state-hypocrysy/
தனது இலாபவெறிக்காக இயற்கையையும், மனித சமூகத்தையும் நஞ்சாக்கும் கார்ப்பரேட்டுகளின் அட்டூழியத்தை மூடிமறைக்கும் அரசும், நீதிமன்றங்களும், என்.ஜி.ஓ அமைப்புகளும் மக்களையே குற்றவாளியாக்கி பிரச்சினையை திசைதிருப்புகின்றன. இந்த பிரச்சனைகளுக்கு அடிப்படையாக இருக்கும் முதலாளித்துவ அராஜக உற்பத்தியையும், இலாப வெறியையும், நுகர்வு வெறியையும் கேள்விக்குள்ளாக்க மறுக்கின்றன
Permanent link to this article: http://new-democrats.com/ta/cracker-ban-court-turns-away-workers-condition-putho/
அரசுத்துறை, போலீசு, நீதிமன்றம் ஆகிய அனைத்தும் கார்ப்பரேட்டுகள் பக்கம் நின்றபோதும், ஊதியமின்மை, குடும்ப நெருக்கடி ஆகியவை இடையறாது துரத்தினாலும், அவை எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டு ஒற்றுமையாக நின்ற, கடும் வெயில், குளிர் பாராமல் தங்களது உரிமைகளுக்காக போராடிய 3,000 ராயல் என்ஃபீல்ட் தொழிலாளர்களுக்கும் 750 யமஹா தொழிலாளர்களுக்கும் எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.
Permanent link to this article: http://new-democrats.com/ta/yamaha-enfield-workers-struggles-what-to-learn/
ராட்சசன் படத்தில் சைக்கோவாக இருப்பவர்கள் அதிகாரத்தில் இருப்பவர்கள் அல்லது சொத்து, வசதி இருப்பவர்கள்தான். ராபர்ட் ஆகட்டும், இன்பராஜ் ஆகட்டும், இமைக்கா நொடிகள் படத்தில் வில்லன் ஆகட்டும் இவர்கள் எல்லோருமே தனிமையில் இருப்பவர்கள். கொலை செய்வதற்கும், சித்திரவதை செய்வதற்கும் போதுமான இடம் உடைய பெரிய வீடு, தனிமை வீடு வைத்திருப்பவர்கள்.
Permanent link to this article: http://new-democrats.com/ta/raatchasan-review/
நாங்கள் வந்த வாகனம், கடந்து வந்த சாலைகள், எதிரிலும், எங்களை கடந்தும் சென்ற வாகனங்கள், இரு பக்கமும் நின்றிருந்த ஆலைகள், ஊரையே மறைத்து நின்ற மேற்கூரை போன்ற பாலம், மின் நிலையம், ஊஞ்சல் போன்று சென்றுகொண்டிருந்த மின்சார வயர்கள், உயர் அழுத்த கோபுரங்கள், சாலைகள், ஆட்டோ, இவை அனைத்திலும் தொழிலாளிகளது உழைப்பை நீக்கிவிட்டால் என்ன மிஞ்சும்? என்று கேள்வி எழுந்தது.
Permanent link to this article: http://new-democrats.com/ta/yamaha-workers-struggle-a-report/
ஒரு பக்கம் பொருளாதார ரீதியாக உலக நாடுகள் மேலும் மேலும் நெருங்கி வர வேண்டும். இன்னொரு பக்கம் அரசியல் ரீதியாக உழைக்கும் வர்க்கத்தை எதிர்கொள்வதற்கு பிரிவினைவாதமும், காப்புவாதமும் தேவைப்படுகிறது. இந்த இரட்டைக் கிடுக்கியில் சிக்கிக் கொண்டு திணறுகிறது, உலக முதலாளித்துவம்.
Permanent link to this article: http://new-democrats.com/ta/why-is-the-eu-in-no-hurry-for-a-trade-deal/
கச்சாப் பொருட்களுக்கு மெட்டீரியல்ஸ் டிபார்ட்மென்ட் போல, எந்திரங்களுக்கு மெயின்டனன்ஸ் டிபார்ட்மென்ட் போல ஊழியர்களை நிர்வகிக்க ஹியூமன் ரிசோர்ஸ் டிபார்ட்மென்ட் செயல்படுகிறது. ஐ.டி நிறுவனங்களில் ஊழியர்களை ரிசோர்ஸ் என்ற பெயரிட்டே குறிப்பிடுகிறார்கள்.
Permanent link to this article: http://new-democrats.com/ta/hr-personification-of-capitalist-exploitation/
இந்த அரசும் அதிகாரிகளும் முதலாளித்துவ வர்க்கத்தின் நிர்வாகக் குழுதான் என்பதை பலமுறை நிரூபித்து விட்டார்கள். ஆனால் முதலாளிகளுக்கான உயிர்நீர் தொழிலாளிகளின் உழைப்பில்தான் உருவாகிறது. எனவே, வரி யார் மீது எப்படி விதிக்கப்பட வேண்டும் என்று கோருவதற்கும், தீர்மானிப்பதற்கும் தொழிலாளி வர்க்கத்துக்கு முழு உரிமையும் உள்ளது.
Permanent link to this article: http://new-democrats.com/ta/modi-exploitation-of-working-class-through-gst/
“எய்தவன் இருக்க அம்பை நோவானேன்” என்று ஒரு பழமொழி உண்டு. தொழிலாளி வர்க்கம் தனது துன்பங்களுக்குக் காரணத்தை கண்டறிய எச்.ஆர் அதிகாரிகளையும், எந்திரங்களையும் தாண்டி இரண்டு மூன்று திரை தாண்டி நிற்கும் முதலாளித்துவ வர்க்கத்தையும் அதன் அடியாள் படையாகிய அரசு எந்திரத்தையும் குறி வைக்க வேண்டும்;
Permanent link to this article: http://new-democrats.com/ta/increasing-capitalistic-oppression-where-to-vent-the-anger/
Load more