காவிரி பிரச்சனை – பு.ஜ.தொ.மு பத்திரிகை செய்தி

பத்திரிகை செய்தி

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக, கன்னட வெறியர்கள் கர்நாடகா வாழ் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களின் உடமைகள், சொத்துக்களை சேதப்படுத்தி வருகின்றனர். மேலும், தமிழகப் பேருந்துகளைத் தாக்கியும் எரித்தும் வருவதுடன், வாகன ஓட்டிகள் தாக்கப்பட்டு வருகின்றனர். இவ்வாறு தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் செப்டம்பர் 16, 2016 அன்று தமிழகம், புதுவை மாநிலங்களில் பல்வேறு கட்சிகள் – அமைப்புகள் ஒரு நாள் கதவடைப்புக்கு (பந்த்) அழைப்பு விடுத்திருக்கின்றன. இந்த கதவடைப்புப் போராட்டத்தை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆதரிக்கிறது.

cauvery-waterகாவிரி நதியானது கர்நாடகாவில் பிறப்பெடுத்தாலும், தமிழகம், கேரளா மற்றும் புதுவை மாநிலங்கள் வழியாகப் பாய்வதால் மேற்படி 4 மாநிலங்களுக்கும் காவிரி நீரில் உரிமை உள்ளது என காவிரி நடுவர் மன்றம் நதிநீரை பகிர்ந்து கொள்வது பற்றி 2007-ல் இறுதித் தீர்ப்பபை அறிவித்து மத்திய அரசின் அரசிதழிலும் (கெசட்) வெளியிடப்பட்டது.

நடுவர்மன்றத் தீர்ப்பின்படி மொத்தக் கொள்ளளவான 740 டி.எம்.சி தண்ணீரில் தமிழகத்துக்கு 419 டி.எம்.சியும், கர்நாடகாவிற்கு 270 டி.எம்.சி.யும், கேரளத்துக்கு 30 டி.எம்.சி.யும், புதுவைக்கு 7 டி.எம்.சி.யும் பங்கிடப்பட வேண்டும். ஒரு நதி உருவாகி அது பாய்கின்ற கடைமடைப் பகுதிக்கே முன்னுரிமை தரப்பட வேண்டும் என்பது சர்வதேச நதிநீர் பங்கீட்டு விதி. ஏனெனில், வெள்ளப் பெருக்கு ஏற்படும் போது திறக்கப்படும் வெள்ள நீரால் இழப்பினை சந்திப்பது கடைமடைப் பகுதிதான். இதன்படி தமிழகத்திற்கு தண்ணீர் தர வேண்டும் என்பது நியாயமான உரிமை ஆகும்.

தமிழகத்துக்கான பங்கில் சூன் முதல் செப்டம்பர் வரையிலான 4 மாதங்களில் காவிரி டெல்டா பகுதியின் சம்பா பருவ விவசாயத்துக்கு 100 டி.எம்.சி தண்ணீர் விடப்பட வேண்டும். ஆனால், வெறும் 35.97 டி.எம்.சி நீரை மட்டுமே விடுவித்ததால் டெல்டா விவசாயிகளது வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாகி உள்ளது. இவர்களின் வாழ்வாதாரம் காப்பதற்கு காவிரியில் தமிழகத்திற்கான உரிமை நிலைநாட்டப்பட வேண்டும்.

இவை எதையும் கணக்கில் கொள்ளாமல் கட்சிகளின் எம்.பிக்கள் முதல் கவுன்சிலர், பஞ்சாயத்து தலைவர்கள் வரை ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வருவதால், பெயரளவிலான போராட்டங்களை நடத்தி தமிழகத்தில் இனவெறி அரசியலை முன்வைக்கின்றனர். தேசிய ஒருமைப்பாடு பேசுகின்ற காங்கிரசு, பி.ஜே.பி கட்சிகளோ மாநிலத்திற்கு ஒரு நிலைப்பாடு எடுத்து உழைக்கும் மக்களை பலியிட்டு பன்னாட்டு நிறுவனங்களின் தரகர்களாக செயல்பட்டு வருகின்றனர்.

கன்னட இனவெறி அரசியல் - பேருந்துகள் எரிப்பு

கன்னட இனவெறி அரசியல் – பேருந்துகள் எரிப்பு

பி.ஜே.பி-சங் பரிவார் கும்பலோ கர்நாடகத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கும், பார்ப்பனிய எதிர்ப்புப் பாரம்பரியமிக்க தமிழகத்திற்கு எதிராக திட்டமிட்டே இனவெறியைத் தூண்டி வன்முறையை தலைமை ஏற்று நடத்தி வருகிறது. எனவேதான், மத்தியில் ஆளும் பி.ஜே.பி நதிநீர் பிரச்சனையில் தலையிட மறுத்து வருகிறது. மாநிலத்தில் ஆளும் காங்கிரசோ, தனது ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள வன்முறையைக் கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்க்கிறது. தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க.வோ தான் பி.ஜே.பி-யின் ‘பி’ டீம் என்பதை நிரூபிக்கும் விதமாக தமிழர்கள் தாக்கப்படுவதற்கு எதிராக சுண்டு விரலைக் கூட அசைக்காமல் கள்ள மௌனம் சாதிக்கிறது.

கன்னட இனவெறி அரசியல்

கன்னட இனவெறி அரசியல்

தமிழகத்திற்கு உரிய பங்கினைப் பெற்றுத் தர வேண்டிய உச்சநீதி மன்றமோ, நடுநிலை நாடகமாடுவதுடன், இன்று வரை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமலே துரோகம் இழைத்து வருகிறது. எனவே, தமிழக உரிமையை நிலைநாட்ட காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான போராட்டங்களைத் தீவிரப்படுத்த வேண்டும்.

மழைவளம் குறைவதும், நிலத்தடி நீர் குறைவது – மாசடைவதும் தனியார்மய, தாராளமய, உலகமயம் உள்ளிட்ட மறுகாலனியாக்கக் கொள்கைகள் அமல்படுத்தப்படுவதால் உருவானவையே. தனது லாபவெறிக்காக இயற்கை வளங்களைச் சுரண்டி மக்கள் விரோதக் கொள்கைகளை அமல்படுத்தும் முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கும் அதற்கு துணை நிற்கும் இந்த அரசுக் கட்டமைப்பை வீழ்த்தவும் போராடுவது அவசியமாகிறது.

இவண்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
தமிழ்நாடு – புதுச்சேரி

Permanent link to this article: http://new-democrats.com/ta/cauvery-issue-ndlf-press-release-ta/

Leave a Reply

Your email address will not be published.

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
மக்களுக்கு வாயால் சுட்ட வடை! முதலாளிகளுக்கு விருந்து – மோடி வழங்கும் பட்ஜெட்

"அரசாங்கம் என்பது ஒரு பிசினஸ்தான்" என்கிறார் பத்ரி. "ஆமா, தனியாருக்கு பிசினஸ் ஏற்படுத்திக் கொடுக்கத்தான் இந்த அரசாங்கம்" என்கிறார் ஜெயரஞ்சன். "கார்ப்பரேட்டுக்கு வரிச் சலுகை கொடுக்கா விட்டால்,...

ரூபாய் நோட்டு சாவுகள் : இப்போது வேலைப் பளுவால் வங்கி மேலாளர் இறப்பு

ராஜேஷ் மூன்று நாட்களாக இடைவிடாமல் வேலை செய்திருக்கிறார். நெருக்கடியை சமாளிப்பதற்காக வீட்டுக்குப் போகாமல் தனது அலுவலகத்திலேயே தூங்கி வேலை பார்த்திருக்கிறார். ஏற்கனவே இருதய நோயாளியாக மருந்து எடுத்துக்...

Close