
விவசாயத்தை அழித்து காவிரி படுகை விவசாயிகளை துரத்தி விட வேண்டும் என்பது இந்த கார்ப்பரேட் பாதந்தாங்கிகளின் திட்டம்.
மோடியும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவும் காவிரி மீதான தமிழகத்தின் உரிமையை மறுப்பதற்கு எதிரான போராட்டம் தமிழ்நாட்டில் தீவிரமடைகிறது.
காவிரி நதி நீர் பிரச்சனையில் தமிழகத்தின் உரிமைகளை வஞ்சித்து தஞ்சாவூர் டெல்டா மாட்டங்களை பாலைவனமாக்குவதற்கு மத்திய அரசும், உச்சநீதிமன்றமும் சதி செய்கின்றன. மீத்தேன், ஹைட்ரோகார்பன், நிலக்கரி எடுப்பதற்கு வசதியாக தண்ணீர் விட மறுத்து, விவசாயத்தை அழித்து காவிரி படுகை விவசாயிகளை துரத்தி விட வேண்டும் என்பது இந்த கார்ப்பரேட் பாதந்தாங்கிகளின் திட்டம். பெங்களூருவுக்குத் தேவை என்று தமிழகத்துக்கு உரிய காவிரி நீரின் அளவை உச்சநீதிமன்றம் குறைத்திருப்பதிலிருந்தே இவர்களை பின் இருந்து இயக்கும் கார்ப்பரேட்டுகளின் கொண்டை வெளியே தெரிகிறது.
-
தொடர்ச்சியான மக்கள் எதிர்ப்புக்கு மத்தியில் 20 ஆண்டுகளாக இயங்கி வரும் வேதாந்தா கார்ப்பரேசனின் ஸ்டைர்லைட் தாமிர ஆலை விரிவாக்கத்தை எதிர்த்த போராட்டம்
கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் 45 கிராமங்களில் 57,000 ஏக்கர் நிலத்தை பெட்ரோலியம், இரசாயனம், பெட்ரோ இராசயனங்கள் முதலீட்டு மண்டலம் என்று அறிவித்திருக்கிறது தமிழக அரசு. இந்தப் பகுதியில் முதலீடு செய்யும் கார்ப்பரேட்டுகளுக்கு வசதியாக சாலை, ரயில் போக்குவரத்து உள்ளிட்ட உள்கட்டுமானத்தை மேம்படுத்துவதற்கு ரூ 1,146 கோடி ஒதுக்கியிருக்கிறது மத்திய அரசு.
- தூத்துக்குடியில் தொடர்ச்சியான மக்கள் எதிர்ப்புக்கு மத்தியில் 20 ஆண்டுகளாக இயங்கி வரும் வேதாந்தா கார்ப்பரேசனின் ஸ்டைர்லைட் தாமிர ஆலை விரிவாக்கத்தை எதிர்த்த போராட்டம் 50 நாட்களை தாண்டியிருக்கிறது. மார்ச் 24 அன்று ஆயிரக்கணக்கான மீனவர்கள், விவசாயிகள், வணிகர்கள், ஆட்டோ/கார் ஓட்டுனர்கள் இணைந்து இந்த ஆலையை இழுத்து மூடக் கோரி பேரணி நடத்தியிருக்கிறார்கள். இன்றும் போராட்டம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.
-
fixed term employment என்ற பெயரில் தொழிலாளர்களின் பணியிட உரிமைகளுக்கு ஒட்டுமொத்தமாக சமாதி கட்டி, கார்ப்பரேட்டுகள் சட்டபூர்வமாகவே கொத்தடிமைகளை வேலைக்கு அமர்த்தும் வகையில் தொழிலாளர் சட்டத்தை திருத்தியிருக்கிறது மோடி அரசு – அதை எதிர்த்து கேரளாவில் நடந்த போராட்டம்
மேலும், பல லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் மெகா துறைமுகங்கள் அமைத்தல், துறைமுகங்களை புதுப்பித்தல், கடற்புற பொருளாதார மண்டலங்கள் உருவாக்குதல், சுரங்கங்கள், தொழில்துறை தாழ்வாரங்கள் ஏற்படுத்துதல் ஆகியவை உள்ளிட்ட சாகர் மாலா என்ற கார்ப்பரேட் சங்கிலி தமிழ்நாட்டை இறுக்குகிறது.
- இவை எல்லாவற்றுக்கும் மேல், fixed term employment என்ற பெயரில் தொழிலாளர்களின் பணியிட உரிமைகளுக்கு ஒட்டுமொத்தமாக சமாதி கட்டி, கார்ப்பரேட்டுகள் சட்டபூர்வமாகவே கொத்தடிமைகளை வேலைக்கு அமர்த்தும் வகையில் தொழிலாளர் சட்டத்தை திருத்தியிருக்கிறது மோடி அரசு.
எனவே, உடைத்தெறியப்பட வேண்டியது சுங்கச் சாவடிகளை மட்டுமில்லை, தமிழகத்தின் மீது கவிந்திருக்கும் கார்ப்பரேட் காவி இருளின் அனைத்து அம்சங்களையும் அடித்து நொறுக்கி ஒட்டு மொத்தமாக துரத்தி அடிப்பதுதான் தமிழக உழைக்கும் மக்களின் உரிமைகளை பாதுகாக்கும். அதுவேதான் கர்நாடகம் உள்ளிட்ட பிற மாநில மக்களின் வாழ்க்கையையும் மீட்பதற்கான ஒரே வழி.
இதை ஒட்டி ஏப்ரல் 5 அன்று அனைத்துக் கட்சிகள் அறிவித்துள்ள பொது வேலை நிறுத்தத்துக்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஐ.டி ஊழியர்கள் பிரிவு தனது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது. சங்க நிர்வாகிகளும், உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் வேலை நிறுத்தத்தை ஆதரிக்குமாறும், இந்தப் பிரச்சனைகள் தொடர்பான பிரச்சாரங்களில் ஈடுபடும்படியும் கேட்டுக் கொள்கிறோம்.
1 ping