“கிரிக்கெட் வெற்றியை கொண்டாடுவது இந்திய மக்களை இழிவுபடுத்துகிறது” – சரிதானா?

சமீபத்திய கிரிக்கெட் போட்டித் தொடரில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை தோற்கடித்தது தொடர்பான கொண்டாட்டங்களில் தான் ஏன் சேரப் போவதில்லை என்று முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியும், இந்திய பிரஸ் கவுன்சிலின் முன்னாள் தலைவருமான மார்க்கண்டேய கட்ஜூ ஹஃபிங்டன் போஸ்ட ஆங்கில தளத்தில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.

அவரது வாதங்களையும், முடிவுகளையும் நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா? விவாதிக்கலாம்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய வெற்றியை நான் ஏன் கொண்டாட்டப் போவதில்லை
இந்த வெற்றி உண்மையிலேயே நம் கவனத்துக்குரிய ஒன்றுதானா?

மார்க்கண்டேய கட்ஜூ

“கிரிக்கெட் இந்திய மக்களுக்கான போதைப் பொருள்”

தர்மசாலாவில் நடந்த கடைசி போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், அனால் அதை கொண்டாடுவதற்கான எந்தக் காரணமும் எனக்குத் தெரியவில்லை.

அரசியல் (இது இந்தியாவில் அதல பாதாளத்தை தொட்டிருக்கிறது), சினிமா, ஊடகங்கள், மதங்கள், ஜோசியம் போன்ற போதைப் பொருட்களின் வரிசையில் கிரிக்கெட் விளையாட்டும் இந்திய மக்களுக்கான போதைப் பொருட்களில் ஒன்றாக உள்ளது என்று கருதுகிறேன். ஒட்டுமொத்த இந்திய மக்களையும் முட்டாளாக்க அல்லது அடிமையாக்க ஒரு போதைபொருள் போதாது என்பதால் பல தேவைப்படுகின்றன.

ரோமானிய பேரரசர்கள் “மக்களுக்கு உண்ண உணவை உறுதி செய்ய முடியவில்லை என்றால் பார்ப்பதற்கு சர்க்கஸ் ஏற்பாடு செய்யுங்கள்” என்று சொன்னதைப் போல, இந்திய ஆளும் அமைப்பு “மக்களுக்கு உங்களால் உணவை உறுதி செய்ய முடியவில்லை என்றால் என்ன! கிரிக்கெட், சினிமா, ஊடகங்கள், மதங்கள், ஜோசியம் போன்றவற்றை பரிமாறுங்கள்” என்கிறார்கள்.

இந்தியாவின் உண்மையான பிரச்சனைகள் சமூக பொருளாதாரத்தோடு தொடர்புடையவை, பெரும்பான்மையான மக்களின் வறுமை, பிரம்மாண்டமான வேலையின்மை பிரச்சனை, பரவலான ஊட்டச்சத்து குறைபாடு (50 சதவீததுக்கு மேலான குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடுடன் வாழ்கிறார்கள்), பெரும்பாலான ஏழை மக்களுக்கு (இவர்களின் எண்ணிக்கை 132 கோடி மக்களில் 75%) தரமான கல்வியும் பொது மருத்துவமும் மறுக்கப்படுவது, லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் நிலை, தலித்துகள், பெண்கள் பிரிவினருக்கு எதிரான பாகுபாடுகள் போன்றவை.

கிரிக்கெட் - மக்களுக்கான போதைப் பொருள்

கிரிக்கெட் போன்ற போதை பொருள்கள் மேலே கூறப்பட்ட உண்மையான பிரச்சனைகளைப் பற்றி மக்களை சிந்திக்க விடாமல் திசை திருப்புகின்றன.

கிரிக்கெட் போன்ற போதை பொருள்கள் மேலே கூறப்பட்ட உண்மையான பிரச்சனைகளைப் பற்றி மக்களை சிந்திக்க விடாமல் திசை திருப்புகின்றன. எந்த முக்கியத்துவமும் இல்லாத ஒரு கிரிக்கெட் போட்டி வெற்றியை முக்கியமானதாக சித்தரிக்கிறார்கள். அதாவது, இந்திய மக்கள் முன் இருக்கும் உண்மையான பிரச்சனை : வறுமையை, வேலை இல்லாத் திண்டாட்டத்தை, ஊட்டச் சத்து குறைபாட்டை ஒழிப்பது எப்படி என்பதில்லை! உண்மையான பிரச்சனை கிரிக்கெட்டில் இந்தியா ஆஸ்திரேலியாவை வெற்றி பெற்றதா (பாகிஸ்தான் என்றால் இன்னும் சிறப்பு) அல்லது விராத் கோஹ்லி சதம் அடித்தாரா என்பதுதான் முக்கியம்!

ஆதலால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியாவின் டெஸ்ட் வெற்றியை உங்கள் ஆசை தீர கொண்டாடுங்கள். ஆனால் முட்டாள்தனமான இந்தக் கொண்டாட்டங்களில் நான் கலந்து கொள்வேன் என்று எதிர்பார்க்காதீர்கள்.

ஏனென்றால் இதுபோன்ற கொண்டாட்டங்கள் நமது இந்தியாவின் 75-80% ஏழை மக்களை இழிவுபடுத்துகின்றன. இதுபோன்ற கொண்டாட்டங்கள் மக்களின் உண்மையான பிரச்சனைகளிலிருந்து கவனத்தை திசைதிருப்புகின்றன.
நமது மக்களை இழிவுபடுத்த நான் மறுக்கிறேன்.

மொழிபெயர்ப்பு: வெளிச்சம்

Permanent link to this article: http://new-democrats.com/ta/celebrating-cricket-victory-is-insulting-indian-people-do-you-agree-ta/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
“இறுக்கமது இளகட்டும், மனதின் இருளது விலகட்டும்!” – ஐ.டி ஊழியர்களின் மே தினச் செய்தி

பல்லாயிரம் தொழிலாளர்களது அயராத போராட்டத்தாலும் , அவர்கள் சிந்திய குருதியிலும் ஈன்றெடுக்கப்பட்ட 8 மணி நேர வேலை , தொழிலாளர் நலச் சட்டங்கள், பணிப்பாதுகாப்பு போன்ற அடிப்படை...

வட சென்னையில் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

முன்னுரை திரைப்படங்களுக்கும் ஒரு ஐ.டி தொழிற்சங்கத்துக்கும் என்ன சம்பந்தம்? சமீபத்தில் ஒரு சில வார இடைவெளிக்குள் வெளியான 5 திரைப்படங்கள் தமிழ் சினிமாவின் டெக்னிகல் தரத்தை உலக...

Close