மக்களுக்கு வாயால் சுட்ட வடை! முதலாளிகளுக்கு விருந்து – மோடி வழங்கும் பட்ஜெட்

2017-18 நிதிஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது மோடி அரசு.

இந்த நிதிநிலை அறிக்கை பற்றி ஒரு வாக்கியத்தில் சொல்ல வேண்டுமானால், இது ஒரு “போஸ்ட் டுரூத் பட்ஜெட்” – “உண்மைக்கு பிந்தைய நிதிநிலை அறிக்கை”. என்ன செய்கிறோமோ அதற்கு நேர்மாறானதை சொல்வது என்று இதற்கு பொருள்.

மக்கள் நலன், விவசாய வளர்ச்சி வறுமை ஒழிப்பு என்று பேசிக் கொண்டே கார்ப்பரேட் சேவை செய்வது – அதாவது பெரும்பான்மை மக்களுக்கு வாயால் வடை சுடுவது, முதலாளிகளுக்கும், அவர்களது அடிவருடிகளுக்கும் விருந்து பரிமாறுவது. இந்தப் பிரச்சாரத்தில் அரசு மட்டுமின்றி பத்திரிகைகளும் போட்டி போட்டுக் கொண்டு இறங்கியுள்ளன. உதாரணமாக, ‘பணக்காரர்களிடம் பறித்து ஏழைகளுக்கு அள்ளிக் கொடுத்து விட்டது’ போல அப்பட்டமான பொய்யை சித்தரித்து காட்டுகின்றன டைம்ஸ் குழும பத்திரிகைகள்.

பட்ஜெட்டின் உண்மையான முகம் என்ன என்பதை புரிந்து கொள்ள இந்தத் தொலைக்காட்சி விவாதத்தை பாருங்கள்.

அரசாங்கம் என்பது ஒரு பிசினஸ்தான்” என்கிறார் பத்ரி.

ஆமா, தனியாருக்கு பிசினஸ் ஏற்படுத்திக் கொடுக்கத்தான் இந்த அரசாங்கம்” என்கிறார் ஜெயரஞ்சன்.

கார்ப்பரேட்டுக்கு வரிச் சலுகை கொடுக்கா விட்டால், வாராக் கடன் விபரங்களை வெளியில் சொன்னால் வேலை வாய்ப்பு பெருகாது” என்கிறார் பா.ஜ.க-வின் ராகவன்.

ரயில்வே விற்பனைக்கு என்று போர்டு போட்டு விட்டார்கள். வேலை வாய்ப்பை அழிக்கிறார்கள்” என்கிறார் ரயில்வே தொழிற்சங்கத்தின் சி.ஏ.ராஜா ஸ்ரீதர்.

‘பணக்காரர்களிடம் பறித்து ஏழைகளுக்கு அள்ளிக் கொடுத்து விட்டது’ போல அப்பட்டமான பொய்யை சித்தரித்து காட்டுகின்றன டைம்ஸ் குழும பத்திரிகைகள்.

1. “மறைமுக வரி சாமானிய மக்கள் மீது அதிக சுமையை ஏற்றும். எனவே நேர்முக வரி வசூலை அதிகரிக்க வேண்டும்” – இது வாய்ச் சவடால்

அ. ரூ 20,000 அளவு புதிதாக நேர்முக வரி தள்ளுபடி.

ஆ. சர்வதேச கச்சா எண்ணெய் விலை குறைந்த போது தொடர்ந்து பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை ஏற்றி விட்டு இப்போது எண்ணெய் விலை ஏறும் போது அதை குறைக்காமல் மறைமுக வரியை குவித்துக் கொண்டிருக்கிறது அரசு. அது பற்றி எந்த பேச்சும் இல்லை.

2. விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீட்டு திட்டம் என்பது வாய்ச்சவடால்.

அரசு பணத்தை தனியார் காப்பீட்டு நிறுவனங்களுக்கு தூக்கிக் கொடுப்பது நடைமுறை.

4. ஏழைகளின் நலனுக்காக பல நிர்வாக சீர்திருத்தங்கள் என்று வாய்ச்சவடால்.

பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் 3 மாதங்களாக வேலை வாய்ப்பு இழந்த முறைசார தொழிலாளர்கள் பற்றி பேச்சே இல்லை.

5. ஒழுங்காக வரி கட்டும் கலாச்சாரத்தை உருவாக்க வேண்டும் என்பது வாய்ச்சவடால்.

ஆனால், வரி திட்டமிடுதல் என்ற பெயரில் வரி ஏய்க்கும் கார்ப்பரேட்டுகளுக்கு இன்னும் வரிச்சலுகைகள். அவர்களது வாராக் கடன் பற்றிய விபரங்களைக் கூட வெளியில் விடாமல் பாதுகாப்பு.

Post Truth இந்தியாவுக்கு நல்வரவு!

Permanent link to this article: http://new-democrats.com/ta/central-budget-empty-rhetoric-for-working-class-real-benefits-to-corporates/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
எச்1பி, டிரம்ப், ஊழல் தீர்ப்பு – ஐ.டி சங்கக் கூட்டம்

தேதி : சனிக்கிழமை பிப்ரவரி 18, 2017 நேரம் : 5 pm to 8 pm இடம் : திருவான்மியூர் கடற்கரை

இன்ஃபோசிஸ் : ஐ.டி நிறுவனமா, கொலைக் களமா?

ஐ.டி நிறுவனமா, கொலைக் களமா! தமிழக அரசே! 48 மணி நேரம் தொடர்ச்சியாக இளையராஜாவை வேலை வாங்கிய இன்போசிஸ் மீது நடவடிக்கை எடு! ஐ.டி துறை நண்பர்களே!...

Close