கருப்புப் பண ஒழிப்பு : ஆட்டோ தொழிலாளியின் சவுக்கடி

This entry is part 13 of 22 in the series பண மதிப்பு நீக்கம்
 1. கருப்புப் பணத்தின் மீது மோடியின் “சர்ஜிகல் ஸ்டிரைக்”
 2. டாலர்-ரூபாய், அமெரிக்கா-இந்தியா பற்றி இந்துத்துவ பிதற்றல்கள்
 3. ரூபாய் நோட்டு செல்லாததானது – உழைப்பாளிகளுக்கு ஐ.டி சங்கத்தின் மடல்
 4. கருப்புப் பண ஒழிப்பு மோசடி – மக்கள் அதிகார நிலைப்பாடு
 5. கருப்புப் பணத்தை ஒழிக்க முடியுமா?
 6. “10 நாட்களில் பிறக்குமா புதிய இந்தியா” தொலைக்காட்சி விவாதம்
 7. வங்கியில் பணத்தை எடுப்போம், வங்கிக் கணக்கை முடிப்போம் – மக்கள் அதிகாரம் அறைகூவல்
 8. டெல்டா விவசாயம் நெருக்கடியில்! விவசாயிகள் தற்கொலை! ரூபாய் நோட்டு பிடில் வாசிக்கிறார் மோடி!
 9. செல்லாத நோட்டு, கருப்புப் பணம், டிஜிட்டல் பணம் – யதார்த்தம் சொல்லும் பெண்கள்
 10. வங்கிப் பணத்தை எடுப்போம்! வங்கிக் கணக்கை முடிப்போம்!
 11. பணமதிப்பு நீக்கம் – மோடிக்கு பொறுப்பில்லையாம்!
 12. ரூபாய் நோட்டு சாவுகள் : இப்போது வேலைப் பளுவால் வங்கி மேலாளர் இறப்பு
 13. கருப்புப் பண ஒழிப்பு : ஆட்டோ தொழிலாளியின் சவுக்கடி
 14. மக்கள் மீது மோடியின் தாக்குதல் : கருப்புப் பணத்தை ஒழித்து விடுமா?
 15. ரூ 500, 1000 செல்லாது! மோடியின் கருப்புப் பண மோசடி!
 16. பண மதிப்பு நீக்கம் பற்றி ப. சிதம்பரம் – நீங்க நல்லவரா… கெட்டவரா…?
 17. பண மதிப்பு நீக்கமும், முதலாளித்துவமும் – ஐ.டி சங்கக் கூட்டம்
 18. மலையைக் கெல்லி எலியைக் கோட்டை விட்ட ‘திறமை’சாலி மோடி!
 19. “மோடியின் 2000 ரூபாய் திட்டம்” – உழைக்கும் மக்கள் சவுக்கடி, குமுறல் – வீடியோ
 20. பண மதிப்பு நீக்கம் : பணமும் இல்லை, வாழ்வும் இல்லை
 21. 5% வளர்ச்சியை 7% ஆகக் காட்டி மோசடி செய்யும் மோடி அரசு!
 22. நீரவ் மோடியின் 11,200 கோடி ஆட்டை – தேவை நரேந்திர மோடியின் “துல்லிய தாக்குதல்”

நியூஸ்18 தொலைக்காட்சியில் 14-11-2016 அன்று ஒளிபரப்பான “காலத்தின் குரல்” என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சுமார் 5 நிமிடங்களுக்கு பேசும் வாய்ப்பு பெற்றார் இசையரசு என்ற ஆட்டோ தொழிலாளர்.

“500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது” என்று அறிவித்து, அதை “வளர்ச்சி, முன்னேற்றம்” என்றும், “டிஜிட்டல் எக்கானமி, கேஷ்லஸ் எக்கானமி” என்றும், “கருப்புப் பண, கள்ளப் பண ஒழிப்பு” என்றும் படம் காட்டிக் கொண்டிருக்கும் மோடிக்கும், அவரது பக்த கோடிகளுக்கும் இந்த நாட்டின் 100 கோடி உழைக்கும் மக்களின் சார்பாக சவுக்கடிகளாக கருத்துக்களை கூறியிருக்கிறார்.

அந்தக் கருத்துக்களை தொகுத்து தந்திருக்கிறோம்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மற்ற அறிஞர்களும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும் திரு இசையரசுவின் கருத்துக்களை உள்வாங்கவோ, அவற்றுக்கு பதில் சொல்லவோ திராணியற்று இருப்பதை பார்க்கலாம்.

100 கோடி உழைக்கும் மக்களின் இந்தியாவுக்கு வெளியில் இருக்கிறது மோடியும், அவரது துதிபாடிகளும் முன்னேற்றப் போவதாக சொல்லிக் கொண்டிருக்கும் “இந்தியா” என்பதை முகத்தில் அறையும்படி சொல்லியிருக்கிறார் இசையரசு.

பாருங்கள், பகிருங்கள்!

இசையரசுவின் குரலை தொலைக்காட்சி நிலையத்துக்குள் ஒலிக்க விட்ட நிகழ்ச்சி தொகுப்பாளர் குணசேகரனுக்கு வாழ்த்துக்கள்!

27:30-லிருந்து 30:15 வரை

நான் எட்டாம் தேதியிலருந்து வயித்தெரிச்சலோட இருந்துகிட்டுருக்கேன். அதனால நீங்க பேசுனது வேடிக்கையாத்தான் இருக்குது.

இந்த நாடு என்னமோ ஒரு சமமா இருக்குற மாதிரியும், எல்லாருமே நெட்பேங்கிங் வச்சுகிட்டு, கிரெடிட் கார்ட் வெச்சிகிட்டு, டெபிட் கார்ட் வெச்சிகிட்டு இருக்கிற மாதிரியுமே எல்லாரும் பேசிக்கிறீங்க. எனக்கு வேடிக்கையாவும் இருக்கு ஒருபக்கம் வயித்தெரிச்சாலவும் இருக்கு.

என்னன்னா, மந்த வெளியில க்யூல நிக்கிறாங்க அந்த அம்மா, யூரின் போகணும், ஏ.டி.எம் வாசல்ல அங்க எதும் டாய்லெட்டே கிடையாது. அந்த அம்மா சொல்வும் முடியல. நான் ஆட்டோவ பக்கத்துல வெச்சிகிட்டு நிக்கிறேன்.

“என்னம்மா, சவாரியா”ன்னு போய் கேக்கிறேன்.

“இல்ல தம்பி காசில்ல, பாத்ரூம் இங்க பக்கத்துல எங்கணா இருக்கா”ன்னு கேட்டாங்க. “ஐநூறு ரூபா நோட்டு இருக்கு தம்பி, நான் ரெண்டு மணி நேரமா நின்னுகிட்டு இருக்கிறேன். ரொம்ப நேரமா அடக்க முடியல. எங்க பாத்ரூம் இருக்கு”ன்னு கேட்டாங்க.

“சரி நீங்க வாங்கம்மா காசு கொடுக்க வேண்டாம்”னு சொல்லிட்டு பாத்ரூம்-க்கு கூட்டிட்டு போய்ட்டு திரும்பி கொண்டு விட்டேன்.

இப்ப நீங்க பேசறது எல்லாமே அதாவது, திருட்டுப் பணம் எல்லாம் ஒழிஞ்சு கண்டு பிடிச்ச பிறகு, இந்தியாவில பாலாறும் தேனாறும் ஓடுற மாதிரி, கல்வி எல்லாருக்கும் இலவசமா கிடைச்சிற மாதிரி, எல்லாருக்கும் வேலை வாய்ப்பு கிடைச்சிர்ற மாதிரி, மருத்துவம் எல்லாருக்கும் கிடைச்சிர்ற மாதிரி ஒரு சீன கிரியேட் பண்ணிட்டு இருக்கீங்க.

சரி அத விட்டுருங்க. அன்றாடம் மக்கள் இதுனால பாதிக்கப்படறது என்னன்னா, ஏ.டி.எம் வாசல்ல நிக்கிறவன் யூரின் போறதுக்கு வழியில்ல, அழுற குழந்தைக்கு பால் வாங்க வழியில்ல, இதுதான் வித்தியாசம். இதுதான் இந்தியா. நீங்க பேசுற இந்தியா வேற, நாங்க அடித்தட்டுல இருக்குற மக்கள், நாங்க பாக்கிற இந்தியா வேற, பிரச்சனை, எல்லாருக்கும் பாதிப்பு ஒண்ணாகவே இல்லை.

இந்த நாடும் தீண்டத்தகாத தேசம், தீண்டத்தகும் தேசம் என்கிற மாதிரி சுரண்டப்படுகிறவர்களும், சுரண்டுகிறவர்களும் இருக்கிற தேசமாக இருக்குது. மொதல்ல அத நீங்க ஒத்துக்கணும். சமூக நீதி பார்வையே இல்லைய இங்க.

நீங்க பெண்கள்கிட்ட கேட்டீங்களா, யார்கிட்டயாவது? பெண்கள கூட்டிட்டு வந்து அன்றாடம், கீரை வியாபாரம் பண்றாங்க, பூ வியாபாரம் பண்றாங்க, என்னமா உங்க வீட்டுக்காரர் அடிக்கிறாரா, வீட்டில என்ன சண்ட நடக்குது, வீட்டில குடும்பத்துக்கு பணம் கொடுக்கிறாரா, பேசினோமா? பெண்கள கேட்டோமா?

அவங்கள கேட்கணும்ல. இப்போ நான் ஆட்டோ ஓட்றேன். 8-ம் தேதியில இருந்து இன்னி வரைக்கும் ஆட்டோ சரியா ஓடல, 200 ரூபா எடுத்துட்டு போறோம். எனக்குக் குடிப்பழக்கம் கிடையாது. பக்கத்தில இருக்கறவருக்கு குடிப்பழக்கம் இருக்குது. ஒயின் ஷாப்புல போனா பணம் மாத்த மாட்டேங்குறான் 500 ரூபா, கடன் வாங்கிட்டு போனாக் கூட.. கோபத்த எங்க காட்றாரு, நாம எல்லாம் பேசிர்றோம். வீட்டில மனைவிகிட்டதான் பேசுறாங்க. அவங்க பணம் கேக்குறாங்க.

“ஏய் இன்னாடி, வண்டியே ஓடல, சம்பாதிக்கல, என்ன பணம் கேட்குற” அடி.

பேசுற தேசப்பற்றிலருந்து எல்லாமே பெண்கள் தலையிலதான் விடியுது. அதை நாம ஏன் பேசல. அதுதான் இந்தியா. அந்த இந்தியா பத்தி பேசுங்க. தலித்துகள், பழங்குடிகள், கிராமத்து மக்களப் பத்தி பேசுங்க

நீங்க மறுபடியும் மறுபடியும் ஏதோ விஜயகாந்த் படம் பாக்கிற மாதிரியே, கள்ளப் பணம் ஒழிஞ்சிட்டா எல்லாம் வந்துரும், இதுதான் நான் வயித்தெரிச்சலோட வேடிக்கை பார்த்துகிட்டு இருக்கேன்.

59:30 – 1:03:10

இல்ல சார், பொழப்ப விட்டுட்டுதான் வந்தேன். இங்க பேசறதெல்லாம் கேட்கும் போது, இந்தியாவை விட தமிழ்நாடு ஒரு தனியான விஷயம். ரூபாய்க்கு 2 படி லட்சியம், 1 படி நிச்சயம் என்ற வரலாறு எல்லாம் பார்த்துட்டுத்தான் உட்கார்ந்திருக்கோம்.

நீங்க 15 லட்சம் போடப் போறீங்களா, 15 ஆயிரம் போடப் போறீங்களா, 15 ரூபா போடுறீங்கள எங்கிறது எல்லாம் நாங்க பார்த்துகினுதான் இருக்கப் போறோம். எங்க பொழப்புல மண்ணப் போடாதீங்க, சாதாரண மக்கள் வாழ்க்கையில கையை வைக்காதீங்க. நீங்க நினைக்கிற மாதிரி இந்தியா ஒரு இந்தியாவா இல்லை.

இப்ப நீங்க பேசும் போது, ரெண்டு பேரும் சொன்னாங்க, மீன்காரி, பூக்காரின்னு சொன்னாங்க. இது ஒரு இந்தியா. மீன்காரம்மா, பூக்காரம்மா! அந்த இந்தியால இருந்து நான் வந்திருக்கேன். நீங்க பேசும் போது கூட இப்படித்தான் இருக்கிறீங்க. இதுதான் அடிப்படை உளவியல் இந்தியாவில. நீங்க மீன்காரி, பூக்காரின்னு அந்த இந்தியாவில இருந்து எல்லா திட்டமும் கொண்டு வாறீங்க, எல்லா அறிவிப்பும் கொடுக்குறீங்க. நாங்க மீன்காரம்மா, பூக்காரம்மா என்று பேசுற இந்தியால இருக்குறோம்.

எங்கள சக மனுசனா மதியுங்க, எங்களுடைய வாழ்க்கையையும் உங்கள விட நாங்க மோசமா இருக்கோம். எல்லாமே ஒண்ணா சரிசமமா இருக்க முடியாது. நாங்க அதல பாதாளத்தில இருக்கிறோம், நீங்க ஃபர்ஸ்ட் ஃப்ளோர்ல இருக்குறீங்கோ. அதனால் இரண்டுக்குமே ஒரே சமமா வைக்க முடியாது, தயவு செஞ்சு கொஞ்சம் கண்ணத் தொறந்து பாருங்கன்னு சொல்றோம். அதனால, மீன்காரி, பூக்காரின்னு சொல்றத தயவு செஞ்சு நிறுத்திக்கோங்க, அந்த இந்தியாவில இருந்து நான் வந்திருக்கேன்.

இந்த அறிவிப்புக்கே அதோட தொடர்பு இருக்குது, அந்த வலியை சொல்லறேன்

எனக்கு இந்த ஃபோன்ல நெறைய பேங்க்ல இருந்து மெசேஜ் அனுப்புறாங்க, எல்லாமே இங்கிலீஷ்ல இருக்குது. நான் பத்தாம் கிளாசு. இங்கிலீசு எனக்கு தெரியாது. என் தாய்மொழி தமிழ். தாய்மொழில கொடுக்கல, ஏ.டி.எம்-ல கொடுக்குற ஃபார்மும் இங்கிலீஷ்லதான் இருக்கு. மொதல்ல இங்கயே நீ என்னோட மாநில உரிமையை மதிக்கல.

மத்திய அரசு என்ன நினைக்குது அதோட நோக்கம் என்னன்னு என்னோட மொழியில சொன்னாதான் எனக்குப் புரியும், நான் அதை எப்படி அக்சப்ட் பண்ணிக்கிறேன்னு. நீங்க ஒரு பக்கத்துக்கு விளம்பரம் கொடுத்துட்டீங்கன்னா, இங்கிலீஸ்லதான் கொடுக்குறீங்க. தமிழ்லயா கொடுக்குறீங்க, அதுல கொஞ்ச கொஞ்ச தமிழும் அரசு மொழியில இருக்கு, சாதாரண சாமானிய மக்கள் மொழியில இல்ல. அப்போ எனக்கு புரியிற மாதிரி சொல்லும்போதுதான் எல்லாமே தெரியும்.

—-

அது எப்படி (பணத்தை) கையில் வெச்சிக்காம இருக்க முடியும்! இப்ப நாலு நாள்ள ஆட்டோ ஓடல சொன்னா 500 ரூபா கையில பார்க்க முடியல என்னால. அதுதான் எங்க வாழ்க்கையில ஆதாரம். அந்த ஐநூறு ரூபாய்க்குள்ளதான் எங்க வாழ்க்கையே இருக்கு. அத நான் எடுத்துட்டு போய் டெபிட் கார்ட், கிரெடிட் கார்ட் எல்லாம் எப்படி போக முடியும். சமூகம் ஒண்ணும் அப்படி வளர்ந்திடலையே!

எல்லாத்தையும் பிரைவேட்க்கு கொடுத்தாச்சு, ஒரு பக்கம் மட்டும் பெருத்து வீங்கிகிட்டே போகுது, இன்னொரு பக்கம் எங்களோட அடிப்படை வாழ்வாதாரம் வேலை வாய்ப்பு பறிபோய்கிட்ட போகுது. நாங்க இன்னும் கீழதான போய்கிட்டு இருக்கோம். எப்பிடி நாங்க டெபிட் கார்டும் கிரெடிட் கார்டும் வர முடியும்.

எல்லாருடைய வாழ்க்கைய நிலையும் அப்படி உயரலைன்னுதான் சொல்ல வாரேன். வேலை வாய்ப்பும் எல்லாருடைய புரிதலும் அப்படி இல்லையே.

1:06:40 – 1:07:06

வரும் வரும். எல்லாம் குடுகுடுப்பை சொல்ற மாதிரிதான் இருக்குது. நீங்க கருப்புப் பணம், கள்ளப் பணம் எல்லாத்தையும் எடுத்துட்டு வந்திருங்க, அதுக்கா நாங்க தியாகம் பண்றோம். எங்க தியாகத்துக்கு நீங்க என்ன கொடுக்கணும்னா ரெக்கவரி பண்ற பணத்தில எல்லாம் எல்லாருக்கும் ஏற்றத் தாழ்வு இல்லாத எல்லாருக்கும் தரமான கல்வி, தரமான மருத்துவம், தரமான அடிப்படை வசதி எல்லாம் செஞ்சு கொடுத்திருங்க, இந்தியா நல்லா இருக்கும்!

Series Navigation<< ரூபாய் நோட்டு சாவுகள் : இப்போது வேலைப் பளுவால் வங்கி மேலாளர் இறப்புமக்கள் மீது மோடியின் தாக்குதல் : கருப்புப் பணத்தை ஒழித்து விடுமா? >>

Permanent link to this article: http://new-democrats.com/ta/chennai-auto-driver-teaches-economics-of-india-to-the-aristocrats/

Leave a Reply

Your email address will not be published.

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
மே தினம்

பிரிட்டிஷ் ஆட்சியின் கங்காணி முறை ஒப்பந்தத் தொழிலாளர் முறை என நவீன வடிவில் புகுத்தப்பட்டுள்ளது, ஏன்?

பெங்களூரு கூட்டு பாலியல் துன்புறுத்தல் – மனிதர்களா, விலங்குகளா?

நாடு முழுவதும் விவசாயிகள் தற்கொலை, பணமதிப்பு நீக்கத்தால் தொழில்கள் முடக்கம் என உழைக்கும் மக்கள் வாழ்வு பெருமளவு பாதிக்கப்பட்டிருக்கும் போது புத்தாண்டுக் கொண்டாட்டத்தை இழவு வீட்டில் விருந்தாகத்தான்...

Close