- கல்விக்கு காசு, மருத்துவத்துக்கு வாழ்நாள் கடன், குடிதண்ணீருக்கு காசு, வேலைக்கு உத்தரவாதம் இல்லை; கால நேரம் பாராது, ஓயாது ஒழியாது குடும்பத்தோடு கூடி உழைத்தால் கூட வாழ முடியாது என்னும் நிலை அனைத்து தரப்பு உழைக்கும் மக்களையும் அச்சுறுத்துகிறது!
- “தான் உண்டு தன் வேலை உண்டு” என்று வாழ்வதே மேலானது என்று போதிக்கப்பட்டிருந்த மத்தியதர மக்களையும் விவசாய நெருக்கடியாக, வேலையிழப்பாக, டாஸ்மாக் கொள்ளையாக கிழிந்து தொங்கும் “வளர்ச்சி” தெருவுக்கு இழுத்து வந்துள்ளது!
- சட்லெஜ் நதிக்கரையில் புதைக்கப்பட்ட பகத்சிங்கும் அவரது தோழர்களும் தூக்கிப் பிடித்த காலனிய ஆதிக்க எதிர்ப்புக் குரல் இன்று தமிழக உரிமைகளுக்காக, கார்ப்பரேட் கொள்ளையை எதிர்த்து போராடும் இளைஞர்களின் குரலாக மெரினா மணற்பரப்பில் உயிர்த்தெழுந்தது!
- அதன் தொடர்ச்சியாக ஹைட்ரோ கார்பன், மீனவர் படுகொலை, தாமிரபரணி நீர், கொந்தளிக்கும் விவசாயிகளின் மரணமும் துயரமும் என மறுகாலனியாக்கத்தின் தாக்குதல்கள் வரிசை கட்டி நின்று நமக்குப் போராட அறைகூவல் விடுக்கின்றன!
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதவாக குரல் கொடுக்க வரும் செவ்வாய் (18-04-2017) அன்று மாலை 4 மணி முதல் 7 மணி வரை பல்லாவரம் அம்பேத்கர் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடக்கவுள்ளது. மெப்ஸ், டைடல் பார்க், டி.எல்.எஃப் வளாக மற்றும் பிற ஐ.டி ஊழியர்கள் பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவுடன் இணைந்து போராட்டம் நடத்த உள்ளனர்.
இந்தப் போராட்டத்தில் பெருந்திரளாக, அலைகடலென கலந்து கொண்டு விவசாயிகளின் போராட்டத்துக்கு வலு சேர்ப்போம்! விவசாயிகள் நமது நாட்டின் முதுகெலும்பு என்பதை மறந்து கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்யும் அரசு குற்றவாளி என்றால் நாமும் அந்த அரசின் வரிசையில் இணைவது அவமானம்!
விவசாயிகளுக்கு ஆதரவாக தோள் கொடுப்போம் வாருங்கள்…
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஐ.டி ஊழியர்கள் பிரிவு
தொலைபேசி : 90031 98576
மின்னஞ்சல் – combatlayoff@gmail.com