85 ஆண்டுகளுக்கு முன்பு, நமது நாடு நேரடி பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் கீழ் இருந்த போது, இந்த இளைஞர்கள் தமது 20 வயதுகளில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கும் அவர்களது காலனிய ஆட்சிக்கும் எதிராக கிளர்ந்தெழுந்தனர்.
இப்போதோ, நாம் காலனிய ஆதிக்க சக்திகளின் மறைமுக சர்வாதிகாரத்தின் கீழ் சுரண்டப்படுகிறோம்
இன்றைய இளைஞர்களாகிய நாம், அந்த அன்னிய காலனிய ஆட்சியை எதிர்கொள்ள தயாராக வேண்டும்.
எப்படி..??
பகத் சிங் பற்றி கற்போம்!
அவரது எழுத்துக்களை, செயல்பாடுகளை, சாதனைகளை பரப்புவோம்!
உண்மையான தேசபக்தி நம் நாட்டின் கோடிக்கணக்கான உழைக்கும் மக்களின் விடுதலைக்கான போராட்டமே என்பதை புரிந்து கொள்வோம்!
பகத்சிங்கின் நினைவு நாளான மார்ச் 23, 2017 அன்று, அனைத்து ஆண், பெண் நண்பர்களும், சிவப்பு உடை உடுத்தி புரட்சியாளர் பகத்சிங், அவரது புரட்சிகர தோழர்கள் ராஜ்குரு, சுகதேவ் நினைவை போற்றுவோம்.