வழக்கறிஞர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் கைது செய்யப்பட்டதை கண்டித்து

ஜூன் 21, 2018

பத்திரிகை செய்தி

பொருள் : வழக்கறிஞர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் கைது செய்யப்பட்டதை கண்டித்து

மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் வாஞ்சிநாதனை தமிழ்நாடு போலீஸ் நள்ளிரவில் கைது செய்திருக்கிறது. வாஞ்சிநாதன் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.
நிலம், நீர், காற்று மூன்றையும் மோசமாக மாசுபடுத்தி, மக்களின் வாழ்வுக்கு அச்சுறுத்தலாக இருந்து வரும் ஸ்டெர்லைட் தாமிர ஆலையை மூடக் கோரிய தூத்துக்குடி மக்களின் போராட்டத்துக்கு வாஞ்சிநாதன் சட்ட ஆலோசகராக செயல்பட்டு வருகிறார். மே 22-ம் தேதி, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமைதியாக கூடிய பெண்கள், குழந்தைகள் உட்பட பொதுமக்கள் மீது போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர், நூற்றுக் கணக்கான பேர் காயமடைந்தனர். இது, ஆங்கிலேயர் காலனிய ஆட்சியில் நிராயுதபாணியான மக்கள் மீது ஜெனரல் டயர் நடத்திய கொலை வெறி தாக்குதலுக்கு நிகரானதாகும்.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு வாஞ்சிநாதன் மீது பொய் வழக்குகளை சுமத்தி அவரை சென்னை விமான நிலையத்தில் நள்ளிரவில் கைது செய்திருக்கிறது. இது வாஞ்சிநாதனின் ஜனநாயக உரிமைகளை மீறுவதாகவும், மக்கள் போராட்டங்களை ஒடுக்கும் நோக்கத்துடனும் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஜனநாய விரோத, எதேச்சதிகார கைது நடவடிக்கையை, ஐ.டி ஊழியர்கள் சார்பாக பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர்கள் பிரிவு வன்மையாக கண்டிக்கிறது. வாஞ்சிநாதனை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும், அவர் மீது சுமத்தப்பட்ட பொய் வழக்குகளை திரும்பப் பெறுமாறும் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.

செயலாளர்
பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு

Permanent link to this article: http://new-democrats.com/ta/condemn-the-midnight-arrest-of-advocate-vanchinathan-by-tamil-nadu-police-ta/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
தொழில்நுட்ப உலகத்தில் பாலின, நிற (மத, சாதி, வர்க்க) பாகுபாடுகள் ஒழிந்து விட்டனவா?

“தொழில்நுட்பம் எல்லோருக்குமானது. அது மனிதகுலத்தையே ஒரே போல பார்க்கிறது. தன்னை பயன்படுத்துவது ஆணா, பெண்ணா அல்லது அவரது தோல் கருப்பாக உள்ளதா, வெளுப்பாக உள்ளதா என்று அது...

மோடிக்கு மாற்று ராகுலா? ஜெட்லி போய் ப.சி. வந்தால் என்ன ஆகி விடும்!

தனியார் தாராளமயம் – தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகள் ஏராளம்! அவைகளிலிருந்து வெளிவந்த பல லட்சம் பட்டதாரிகள், வேலை வாய்ப்பின்றி இன்று ’ரிசர்வ் பட்டாளம்’!

Close