பொருளாதாரமும் குரோனோ வைரஸ் முட்டல் மோதல்.

உலகம் முழுவதும் மாபெரும்  அச்சத்தில் உறைந்துள்ளது. டிசம்பர் மாதத்தில் இறுதியில் சீனாவில் ஆரம்பித்த வைரஸ் தாக்குதலானது இன்று உலகின் பெரும்பாலான நாடுகளை சூறாவளியாக தாக்குகிறது.

சீன அரசாங்கம் இந்த வைரஸை தடுக்க மேற்கொண்ட முயற்சிகளும்,ஏற்படுத்திய திட்டங்களும் மற்ற நாடுகளில் ஏற்படுத்த முடியுமா  என்பதும் பெரும் கேள்விக்குறியாக உள்ளது.

இந்த வைரஸ் தாக்குதலின் போது சீன நாடு என்பது இத்துடன் முடிந்துவிட்டது என்று உலகம் கணித்தது. ஆனால் இன்று அதே வைரஸ் உலகின் பெரும்பாலான நாடுகளில் தாக்கம் ஏற்படுத்தி பெரும் உயிர்ச் சேதங்கள் மட்டுமல்ல பொருளாதார ரீதியாக பலத்த பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையானது மேலும் 3 முதல் 5 மாதங்களுக்கு மேல் உலகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கணிக்கப்படுகிறது.

உலகின் வல்லரசு நாடுகள் முதல் அடுத்தடுத்த கட்டங்களுக்கு உள்ள நாடுகளும் இதனால் பாதிக்கப் பட்டுள்ளது.

 

இந்த வைரஸ் தாக்குதல் ஆதார் அட்டை, CAA, NRC, குடும்ப அட்டை, ஜாதி ,மதம், இனம் , நாடு எனப் பாகுபாடு பார்க்காமல்  அனைவரையும் தாறுமாறாக தாக்கி கொண்டுள்ளது.

கோழி முட்டையின் விலை முதல் கோழியின் கறி விலை வரை வரலாறு காணாத வகையில் சரிந்து போய் உள்ளது.

நம்முடைய தெருக்களில் சாப்பாட்டு மூட்டையை தூக்கி சுழண்டு சுழண்டு வந்த தோழர்களும் உறைந்து போயுள்ளனர்

ஆட்டோ டிரைவர் முதல் கார் டிரைவர்கள் வரை வருமானம் இல்லாமல் கரைந்து போயுள்ளனர்.

விமானப் போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து , வெகு தொலைவில் செல்லும் பஸ் போக்குவரத்து ஆகியவையும் தற்போது முடங்கிப் போயுள்ளது.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் முதல் பங்கு மார்க்கெட் வரை தள்ளாடிக் கொண்டு உள்ளது.

ஹாலிவுட் கோலிவுட் பாலிவுட் என சினிமா துறையிலும் முடங்கிப் போயுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் முதல் ஜப்பானில் நடைபெறும் டோக்கியோ ஒலிம்பிக் வரை இதைக்கண்டு அல்லாடி கொண்டுள்ளனர்.

ஜவுளிக் கடைகளும், வண்ண வண்ண நகைகளை கொடுக்கும் நகைக் கடைகளும் மூடப்பட்டுள்ளது.

தேவாலயங்கள், மசூதிகளும், கோயில்களும் இந்த வைரஸில் பாதுகாக்கப்படுகிறது. கடவுளுக்கும் மாஸ்க் போட்டுப் தனிமைப்படுத்தி வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சிறு வணிகர்கள் முதல் பெரு நிறுவனங்கள், உலகளாவிய நிறுவனங்கள் வரை பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது என்பதை நாம் மறுக்க முடியாது.

இதனால் பெரும்பாலான நாடுகளின் பொருளாதாரத்தில் மா பெரும் சரிவை ஏற்படுத்தும் என்று உலக வல்லுநர்கள் கருதுகின்றனர்.

வெறிச்சோடிக் கிடக்கும் சென்னை தியாகராய நகர் ரங்கநாதன் தெரு

 

பல்வேறு நாடுகள் இந்த வைரஸை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், பொருளாதாரத்தில் ஏற்படும் மாற்றத்தை சரி செய்வதற்கு பல மாதங்களுக்கு மேல் ஆகும் என்று தெரிய வருகிறது.

இந்த வைரஸால் ஏற்படும் பொருளாதார வீழ்ச்சியானது தனி மனிதனையோ அல்லது தனி நிறுவனத்தையோ சார்ந்து இருப்பது இல்லை, இது ஒட்டுமொத்த சமுதாயத்தின் மீதும் அதன் வளர்ச்சியின் மீது தொடுக்கப்பட்டுள்ள தாக்குதல் இந்த தாக்குதலில் இருந்து அனைவரும் மீண்டு எழுந்து வர வேண்டும். முதலாளி முதல் தொழிலாளி வரை பரஸ்பரம் ஒத்துழைத்து ஒருவர் மற்றொருவரை காத்து மீண்டு எழுந்து வர வேண்டும்.

உலகின் பல்வேறு நாடுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது,  குறிப்பிடும்படி சொல்லவேண்டுமென்றால் கனடா நாட்டின் பிரதமர் அவர்கள் அவருடைய மனைவிக்கு வைரஸ் தொற்றுதல் இருக்கும் தருவாயிலும் நாட்டு மக்களுக்காக அவர் கொடுத்த முறையானது உரையானது மிகவும் மகிழ்ச்சி அடையச் செய்தது, அனைவருக்கும் வேலை பாதுகாப்பும் , அனைத்து மக்களும் காக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பை தொடர்ந்து வலி நிவாரணத் தொகை களையும் அவர் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவின் அதிபர் அவர்களும் அந்த நாட்டு மக்களுக்கு ஆயிரம் டாலர்களையும், குழந்தைகளுக்கு 500 டாலர்களையும் அறிவித்து ,பல்வேறு சலுகைகளை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாகவும், உலக மக்கள் தொகையில் இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவானது, கடந்த சில வருடங்களுக்கு முன்பாக மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பு முறையினால் மற்றும் GST முறை அறிமுகப்படுத்தி நாட்டின் பல்வேறு தொழில் வளர்ச்சியில் பல பாதிப்புகளை அடைந்திருக்கும் நிலையில். வங்கி துறையிலும் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வரும் இந்த சூழ்நிலையில் நாடு சந்திக்கும் மாபெரும் சமுதாயக் சிக்கலாக, பொருளாதாரச் சிக்கல் ஆக இந்த வைரஸ் தாக்குதல் இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.

இந்தியாவில் செயல்படும் கோ ஏர், ஏர்-இந்தியா ஆகியவைகள் ஊழியர்களுக்கு சம்பளத்தை குறைக்க முடிவு செய்துள்ளார்கள் என்ற செய்தியும் வருகிறது.

இந்திய நாட்டின் பிரதமர் அவர்கள் நாட்டு மக்களுக்கு ஆற்றிய தன்னுடைய முறையில் பால் உணவு மருந்துப் பொருட்கள் தற்போது தட்டுப்பாடு என்பது ஏற்படாது, சுமார் 130 கோடிக்கு மேல் மக்கள் தொகையைக் கொண்டுள்ள இந்தியாவில் இதை ஒரு தேசிய பிரச்சினையாக கருதி கட்டுப்படுத்தும் முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

இவருடைய பேச்சில் தனியார் நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களுக்கு  ஊதிய பிரச்சினைகளையும் தொடுத்த கூடாது என்று கோரிக்கை வைத்துள்ளார்.

பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் பொருட்டு நிதியமைச்சர் தனிமையில் பொருளாதார ஆய்வு குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு நாடுகளில் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் சூழ்நிலையில்  ஃபேஸ்புக் நிறுவனமும் தங்கள் ஊழியர்களுக்கு சுமார் 1000 டாலர் போனசாக வழங்க திட்டமிட்டுள்ளது, இந்த போனஸ் தொகை பேஸ்புக் நிறுவனத்தில் முழுநேரமாக பணிபுரியும் சுமார் 45 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட உள்ளது.

கார் முதல் கசாப்பு கடை வரை பிரச்சினையை ஏற்படுத்தி உள்ள இந்த வைரஸ் தொற்று இந்தியாவில் பணிபுரியும் தகவல்தொழில்நுட்ப ஊழியர்களையும் விரட்டிக் கொண்டு உள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளில் பயணித்த தகவல்தொழில்நுட்ப ஊழியர்கள் தற்போது ஏற்பட்டிருக்கும் பிரச்சனைகளில் இந்த அளவுக்கு பாதிப்படைந்துள்ளனர், அவர்களின் எண்ணிக்கை என்ன என்பது சரியாக கணிக்க முடியாமல் உள்ளது பெரும் வேதனையை தருகிறது.

இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு ஏற்படும் பொருளாதாரப் பிரச்சினைகளையும், தொழில் ரீதியான பிரச்சனைகளையும் புரிந்து அவர்களையும் , அவர்களுடைய குடும்பங்களையும் காக்கும் பொறுப்பை உணர்ந்து நல்லெண்ண நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், கார் தயாரிப்பு நிறுவனங்கள் என அனைத்து நிறுவனங்களும் தங்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக  உழைத்ததொழிலாளர்களுக்கு இந்த சூழ்நிலையில் தங்களால் இயன்ற உதவிகளை செய்ய முன்வர வேண்டும்.

இந்திய அரசும் பொருளாதாரத்தை , தொழில் நிறுவனங்களையும், மக்களையும் காக்கும் பொருட்டு சிறப்பு சலுகைகளை வழங்கி நாட்டு மக்களை காக்க வேண்டும்.

 

தமிழ் அன்பர்.

புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி ஐ.டி. ஊழியர் பிரிவு.

 

Permanent link to this article: http://new-democrats.com/ta/corona-and-economy/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
தனியார்மய ஆதரவாளர்களுக்கு சமர்ப்பணம் : ஓலா, ஊபர் வேலை நிறுத்தம்

தனியார் சேவைதான் சிறந்த சேவை, அரசு எதிலும் தலையிடக் கூடாது என்று ஓலா, ஊபரை வரவேற்றவர்களை நோக்கி நெதர்லாந்தில் தனியார் பேருந்து ஓட்டுனர்களின் வேலை நிறுத்தம் பற்றி...

தொண்ட குழிக்கு தண்ணி கேட்டோம் தப்பிருக்கா

இந்தியாவ கூறுபோட்டு விக்க திட்டமோ பங்கு தண்ணிய நீ கொடுத்தாதான் என்ன நட்டமோ வானம் பூமி காத்து மழையும் யாருக்குச் சொந்தம் இத கேட்க நாதியில்லாமதான் ரோட்டுக்கு...

Close