இக்கடிதம் மின்னஞ்சல் மூலம் பெறப்பட்டது. சம்பந்தப்பட்ட நபர் இந்த விசயம் தொடர்பாக வங்கிகளுடனும், கொரியர் நிறுவனத்திடமும் அலுவலக நிர்வாகத்திடமும் புகார் தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் உள்ள NASSCOM அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்ட இந்த செய்தியில் நகல் நமது சங்க மின்னஞ்சல் முகவரிக்கும் மத்திய அரசுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
NASSCOM-ம் அரசும் இந்த விஷயத்திலும் (மனிதவளத் துறையில் நடக்கும் ஆட்சேர்ப்பு மோசடி உட்பட தனியார் துறையிலுள்ள பிற ஊழல் பிரச்சினைகளிலும்) என்ன செய்யப் போகின்றன?
செக்யூரிட்டி-களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும் என்பதால் ஐ.டி. நிறுவனங்கள் ஊழியர்களுக்கு தனித்தனியாக கடிதங்கள் விநியோகிப்பதை நிறுத்திவிட்டதாக சிலர் கூறுகின்றனர். தங்களது வாழ்வின் பல மணிநேரங்களை அலுவலக வளாகத்தில் செலவிடும் ஊழியர்களுக்கு இந்த அடிப்படை சேவையைக் கூட நிறுவனங்கள் வழங்கத் தயாராக இல்லை.
நிறுவனங்கள் இதற்கு ஒரு தெளிவான கொள்கையை கொண்டு வர வேண்டும்.
அன்புடையீர்,,
கடந்த சில மாதங்களாக என் அலுவலக முகவரிக்கு அனுப்பப்பட்ட எனது வங்கிக் கணக்கு அறிக்கைகள் எனக்குக் கிடைக்கவில்லை. வங்கி இது சம்பந்தமாக ஒரு விசாரணையை நடத்தியுள்ளது. கொரியர் நிறுவனங்கள் உண்மையில் கடிதங்களை செக்யூரிட்டி அறையில் வழங்கியுள்ளன. அங்கு இருந்து தான் வேடிக்கை தொடங்குகிறது.
கொரியர் வந்த செய்தியை ஊழியர்களுக்கு தெரிவிக்காமல் அஞ்சல் அறையில் பணியாற்றும் சில நபர்களுடன் கூட்டு சேர்ந்து மறைத்து விடுகின்றனர். சில மாதங்களுக்குப் பிறகு முழு குவியலையும் குப்பையாக பணத்திற்கு விற்று விடுகின்றனர்.
தெரிந்த வட்டாரங்களில் விசாரித்ததில், சென்னையில் உள்ள வேறு சில சிறப்புப் பொருளாதார மண்டலங்களிலும்(SEZ) இந்த விவகாரம் நடப்பதாக தெரிய வந்துள்ளது.
NASSCOM அல்லது MEITY (Ministry of Electronics and Information Technology) இந்தப் பிரச்சினையைக் கவனிக்குமா?
நன்றியுடன்,
தீபக் குமார் வாசுதேவன் (தொழில்நுட்ப வடிவமைப்பாளர்)