Notice Period | Natpukkaga | Black Sheep – நட்பு மட்டும் போதுமா உரிமைகளை பாதுகாக்க!

து ஒரு நல்ல முயற்சி ஆனால் சொல்ல வரும் விஷயமும் திரைக்கதையும் பக்குவமின்றி உள்ளன. இது போன்ற படங்கள், “லே ஆஃப் என்பது இயல்பானது, அதை எதிர் கொள்வதற்கு யூனியன் தேவையில்லை” என்ற கண்ணோட்டத்தை கொடுக்கின்றன.

நேர்மறை அம்சம்

அலுவலக அரசியல், இலவசங்கள், பேரம் பேசுதல், லே ஆஃப் போன்றவை மெலிதாக பேசப்பட்டிருக்கின்றன.

எதிர்மறை அம்சங்கள்

  1. ராஜினாமா செய்வது கட்டாய ஆட்குறைப்பை எதிர்த்து போராடுவதற்கான சிறந்த வழி இல்லை. ராஜினாமா செய்வதை விட தனது மறுப்பு கடிதத்தை நிர்வாகத்துக்கு அனுப்பி விட்டு சட்ட ரீதியாகவும் யூனியன் ரீதியாகவும் போராட்டத்தை தொடரலாம். சட்டப்படி பார்த்தால் கட்டாய பணிநீக்கம் என்பது லாபகரமாக இயங்கும் ஒரு நிறுவனத்தில் சாத்தியமில்லை.
    ஆனால், இந்தப் படத்தில் அன்புதாசன் தனது நண்பன் லே ஆஃப் செய்யப்படுவதை எதிர்த்து தானும் ராஜினாமா செய்கிறார் (தளபதி படத்தின் நண்பேன்டா போல).
    கட்டாயப்படுத்தி பேப்பர் போடச் சொன்னால் ஏன் தொழில் தாவா சட்டத்தின் கீழ் தொழில் தகராறு தாக்கல் செய்ய வேண்டும், அதை ஏற்று ராஜினாமா செய்யக் கூடாது.
  2. ஒரு திருமணமான, குடும்பப் பொறுப்பு உள்ள ஊழியர் இது போல செய்ய முடியுமா? அவர் குடும்பத்தை எப்படி நடத்துவார்?
  3. இரண்டு ஊழியர்களுமே உடனடியாக அடுத்த வேலை கிடைத்து விடும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள். உண்மையில் இதுதான் நிலைமையா? அப்படியானால் கட்டாய பணி நீக்கம் செய்யப்பட்ட 1 லட்சம் ஐ.டி ஊழியர்கள் ஏன் இன்னும் வேலை கிடைக்காமல் தவிக்கிறார்கள்?
  4. சக ஊழியர்களை அவமானப்படுத்துவது, ராஜினாமா கடிதம் கொடுத்த பிறகு அலுவலகத்தில் வேலை செய்யாமல் இருப்பது. பெண் ஊழியரின் உரிமை கொச்சப்படுத்தப்படுகிறது. சக பெண் ஊழியரை பாலியல் ரீதியாக துன்புறுத்துவது விஷாகா வழிகாட்டல்களின் படி குற்றமாகும். குற்றத்தின் தீவிரத்தை பொறுத்து ஜெயில் தண்டனை கூட கிடைக்கலாம்.

மொத்தத்தில், ஐ.டி ஊழியர்கள் தமது உரிமைகளுக்காக போராடாத அளவுக்கு விபரம் தெரியாதவர்களாக இருப்பதை படம் காட்டுகிறது.

சரியான தீர்வு என்ன?

பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு அல்லது வேறு ஒரு யூனியனில் சேருங்கள். அல்லது புதிதாக ஒரு யூனியனை தொடங்குங்கள். அதன் மூலம் சட்ட விரோத பணி நீக்கத்தை எதிர்த்தும் அலுவலக அரசியலை எதிர்த்தும் போராடுங்கள். ஆலைகளிலும், வங்கிகளிலும், காப்பீட்டு நிறுவனங்களிலும் ஊழியர்கள் இதைத்தான் செய்கிறார்கள்.

  1. Forced Resignation – A Brilliant Short Film “Human RESOURCES – Indian Indie Film (English) – 4K Ultra HD | By Sasidhar”
  2. Read IT fun or Life Series to get knowledge about layoffs.

– விமர்சனம் – காசிராஜன்

More from New Democrats

Permanent link to this article: http://new-democrats.com/ta/critique-of-blacksheep-short-film/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
ஐ.டி ஊழியர் செய்தியும் கருத்தும் – ஏப்ரல் 27, 2017

சாராயக் கடையை எதிர்த்து போராடிய பெண்களின் மீது தாக்குதல் நடத்திய அதிகாரிகளுக்கு பாராட்டுவிழா கூட நடத்தும் அளவு கேடுகெட்ட அரசு நிர்வாகம்தான் இப்போது இந்தியாவில் நடந்து கொண்டிருக்கிறது.

சி.டி.எஸ்-க்கு பிரச்சனையா? உண்மையாகவா?

தான் லஞ்சம் கொடுத்தது தொடர்பான ஆதாரங்களை வெற்றிகரமாக மறைத்து உயர்மட்ட மேலாளர்களுக்கோ, முதலீட்டாளர்களுக்கோ எந்த சேதமும் இன்றி சி.டி.எஸ் தப்பித்து விடலாம். சி.டி.எஸ் ஊழியர்களும், பொதுமக்களும் மட்டும்தான்...

Close