கஜா புயல் : ஒட்டு மொத்த அழிவு, எளிய மக்கள் மீது அதிக சுமை

1. பொதுவான நிலைமை

இந்தப் பேரழிவு பற்றி ஊடகங்களும் அரசும் காட்டும் தவறான சித்திரத்தை புரிந்து கொள்ள வேண்டும். முதலில் “தீவிரமான தயாரிப்புப் பணிகள், மக்கள் முகாம்களுக்கு மாற்றப்பட்டு விட்டார்கள், உணவு வழங்கப்படுகிறது” என்று தொடர்ந்து பிரச்சாரம், அதைத் தொடர்ந்து தி.மு.க தலைவர் ஸ்டாலினும் அதை அங்கீகரித்து அறிக்கை வெளியிட்டார். இது ஓரளவு உண்மைதான். பெருமளவு உயிர்ச் சேதம் நடக்காமல் தவிர்த்தது இந்த முன் தயாரிப்பு நடவடிக்கை மூலம்தான்.

முதலில் மெயின் ரோடு இணைப்புகளை சரி செய்து விட்டுத்தான் உள்ளே தள்ளியிருக்கும் தாழ்த்தப்பட்ட, பொருளாதார ரீதியில் சுரண்டப்படும் மக்களை போய்ச் சேரும். அதற்கு 6 மாதங்கள் வரை பிடிக்கும் என்கிறார்கள்.

ஆனால், புயலுக்குப் பிறகு மீட்புப் பணி, நிவாரணம் வழங்குவது, மறுவாழ்வு பணி எல்லாமே மிகவும் மோசமான, இரு துருவ நிலைப்பாடுகளாக வெளியில் பேசப்பட்டன. ஒரு பக்கம் அரசு தரப்பில் “சிறிதளவு சேதம்தான், நாங்களே எல்லாவற்றையும் சரி செய்து வருகிறோம், விரைவில் இயல்பு நிலை திரும்பி விடும்” என்ற பிரச்சாரம். இன்னொரு பக்கம் ஜூனியர் விகடன் போன்ற பத்திரிகைகளில் “தண்ணீரில் மிதக்கும், அழிவில் சிக்கிய டெல்டா” என்று புகைப்படங்களுடனும், கண்ணீர் கதைகளுடனும் வெளியாகும் கட்டுரைகள்.

அப்படி நினைத்துக் கொண்டு போனால், சுமார் 10 நாட்களுக்குப் பிறகு சாலைகளும், ரயில் போக்குவரத்தும் வேகமாக இயல்பு நிலையில் இருந்தன. மன்னார்குடிக்கு கிழக்கே சாலையின் இரு புறங்களிலும் மரங்கள் சரிந்து கிடப்பது, வாழைத் தோப்புகள் அழிந்து இருப்பது தெரிந்தாலும் சாலை போக்குவரத்து செயல்பட்டது. செல்பேசி இணைப்பில் எந்தப் பிரச்சனையும் இல்லை. பட்டுக்கோட்டையிலிருந்து போகும் போது மின்இணைப்பு துண்டிப்பு, இயல்பு வாழ்க்கை பாதிப்பு என்பதை எல்லாம் பேருந்து நடத்துனரிடமோ, கிராமங்களிலிருந்து வருபவர்களிடமோ கேட்டால்தான் தெரிந்தது. கார்களும், பேருந்துகளும் இயல்பாக ஓடிக் கொண்டிருந்தன.

மன்னார்குடியிலிருந்து பட்டுக்கோட்டை போகும்போதே பேருந்தில் இருந்து புயலின் சேதங்களை பார்க்க முடிந்தது. மரங்கள் விழுந்திருந்தது, மின் கம்பங்கள் சரிந்திருந்தது தெரிந்தது. பட்டுக் கோட்டையில் இருந்து போகும் பேருந்தில் நடத்துனர், இன்னொரு ஓட்டுனர் இருவரும் பேசிக் கொண்டு வந்தனர். மிக மோசமான பாதிப்பு என்றனர். அவர்கள் ஊரிலிருந்து வெளியில் வருவதற்கே 3 நாட்கள் ஆகி விட்டது. ஆனால், துறையிலோ 5 நாட்கள் absent போட்டு விட்டார்கள் என்கிறார். அரசையும், நிர்வாகத்தையும் கடுமையாக விமர்சித்தார்.

மின்சாரம் எல்லா இடங்களிலும் துண்டிக்கப்பட்டிருக்கிறது.

மின்சாரம் எல்லா இடங்களிலும் துண்டிக்கப்பட்டிருக்கிறது. குடிநீர் ஒரு சில இடங்களில் மட்டும் ஜெனரேட்டர் மூலம் இறைத்து குழாயில் வருகிறது. பல இடங்களில் குடிநீர் கிடைப்பதில்லை. பல குடிசைகள் மீது மரம் சாய்ந்து கூரை சிதைந்தும், ஒட்டு மொத்தமாக இடிந்து கிடக்கின்றன.

உணவு இல்லை, சாப்பாடு இல்லை, கரண்ட் இல்லை. பிரதான சாலைகளில் எல்லாம் கம்பங்களை தூக்கி நிறுத்தி கம்பிகளை மாற்றிக் கொண்டிருந்தார்கள். முதலில் மெயின் ரோடு இணைப்புகளை சரி செய்து விட்டுத்தான் உள்ளே தள்ளியிருக்கும் தாழ்த்தப்பட்ட, பொருளாதார ரீதியில் சுரண்டப்படும் மக்களை போய்ச் சேரும். அதற்கு 6 மாதங்கள் வரை பிடிக்கும் என்கிறார்கள்.

2. நிவாரண பொருள் வினியோகம்

பொட்டலம் போட்டு வைத்திருந்த பொருட்கள், தண்ணீர் பாட்டில், பள்ளிச் சிறுவர், சிறுமியர் உடைகள் எடுத்துக் கொண்டோம். விசாரித்து, எந்த இடத்துக்கு என்ன தேவை, எந்த இடத்துக்கு நிவாரண பொருட்கள் போய்ச் சேரவில்லை என்று தெரிந்து கொண்டு அதற்கேற்ப திட்டமிட்டு அந்தப் பகுதி இளைஞர் ஒருவரையும் இணைத்துக் கொண்டு வினியோகத்துக்கு ஏற்பாடு செய்தார்கள்.

முதலில் போனது ரயில்வே காலனி என்ற இடத்துக்கு. ரயில் பாதைக்கு அப்பால் போக வேண்டும். பெரிய வண்டிகள் போவதற்கான பாதை கூட இல்லை. பைக் போகலாம். ஏதோ ஒரு நீர்வழிப்பாதைக்கான வேலை நடந்து கொண்டிருக்கிறது. ரயில் பாதையைச் சுற்றி மின் கம்பங்கள் விழுந்து கிடந்தன. மரங்கள் விழுந்து கிடந்தன. அந்தப் பக்கம் இருக்கும் வீடுகள் எல்லாம் கிட்டத்தட்ட துண்டிக்கப்பட்டுத்தான் இருந்தன என்று சொல்ல வேண்டும்.

வீடு வீடாக போய் கொடுக்க வேண்டும் என்று திட்டம். மற்றவர்களின் எல்லோரையும் ஒரே இடத்துக்கு வரச் சொல்வது, சாலையில் இருந்து கொண்டே அழைப்பது எல்லாம் தவறான அணுகுமுறை. மக்களை இழிவுபடுத்துவது மட்டுமின்றி, அது எல்லோருக்கும் போய்ச் சேர்வதையும் தடுக்கிறது. பொருட்களை சுமந்து சென்று வீடு வீடாக சென்று கையில் கொடுத்தோம்.

ரயில் பாதையைச் சுற்றி மின் கம்பங்கள் விழுந்து கிடந்தன. மரங்கள் விழுந்து கிடந்தன. அந்தப் பக்கம் இருக்கும் வீடுகள் எல்லாம் கிட்டத்தட்ட துண்டிக்கப்பட்டுத்தான் இருந்தன என்று சொல்ல வேண்டும்.

அடுத்த பகுதியில் மிக மோசமான பாதிப்புத்தான். குறுக்கும் நெடுக்குமாக தெருக்கள் இருந்த. தென்னை மரங்கள் டஜன் கணக்கில் விழுந்து கிடந்தன. ஒரு சில குடிசைகள் கூரை சிதைந்திருந்தன.

ஒரு வீட்டில் ஒரு அம்மா பொருளை வாங்கியவுடன் கையெடுத்து கும்பிட்டு “நீங்கெல்லாம் தெய்வம் மாதிரி வந்து பொருள் கொடுக்கிறீங்க. எல்லாமே போயிருச்சி. வீட்டில பொருள் எல்லாம் போச்சு. மிக்சி, பீரோ எல்லாத்திலையும் தண்ணீ ஏறி கெட்டுப் போச்சு என்ன செய்யப் போறேன்ன்னு தெரியலை, இந்த இரண்டு பொண் குழந்தைங்களையும் வைத்துக் கொண்டு” என்று கண்ணீர் விடுகிறார். “ஏதோ இருக்கிறத வெச்சி வாழ்ந்துகிட்டு இருந்தோம். இப்போ எல்லாத்தையும் பிடுங்கி விட்டு போய் விட்டது” என்று கண் கலங்கினார்.

எல்லா தோழர்களுமே கலங்கி விட்டார்கள். என்ன செய்வார்கள்? உணவும், உறைவிடமும் சீர் செய்வதே பெரும் பாடாக உள்ளது. இழந்து போன வாழ்க்கையை எப்படி மீட்பது?

அடுத்த முறை மிகவும் உள்ளடங்கி இருக்கும் பகுதிகளுக்குச் சென்றோம். ஒரு எம்.எல்.ஏவுக்கு சொந்தமான தோப்புக்குள் 15 வீடுகள். இன்னொரு மணல் பகுதிக்குள் 7-8 வீடுகள். எல்லா வீடுகளையும் தேடிப் போய் பார்த்துக் கொடுத்தோம். ஆவுடையார் கோயில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்கிறார்கள்.

இவற்றை எல்லாம் எப்படி மீட்டெடுத்து, என்றைக்கு இயல்பு நிலையை கொண்டு வரப் போகிறார்கள் என்று ஆயாசமும், கோபமும் ஏற்பட்டது

ஒரு மீனவர் பெண் பேசினார். “படகு, வலை எல்லாம் பறி போய் விட்டது. இதை எல்லாம் எழுதி கொடுத்திருக்கிறோம், என்ன வருகிறது என்று பார்க்கலாம்” என்றார்.

அந்தப் பகுதியிலும், மின் கம்பங்களும், தென்னை மரங்களும் சரிந்து கிடந்தன. இவற்றை எல்லாம் எப்படி மீட்டெடுத்து, என்றைக்கு இயல்பு நிலையை கொண்டு வரப் போகிறார்கள் என்று ஆயாசமும், கோபமும் ஏற்பட்டது. தெருவில் போய் ஒவ்வொரு வீடாக, ஒவ்வொரு குடும்பமாக விட்டுப் போகாமல் கொடுத்தோம்.

சில அமைப்புகள் சாலையில் இருந்தே கொடுத்து விட்டு போவது என்பதோடு ஒப்பிட்டு பார்க்கும் போது மேலே செய்த அணுகுமுறை மிகச் சரியானது. ஆனால், நாம் செய்வது தேவையில் ஒரு துளி மட்டுமே, இது மிகப்பெரிய பணியாக இருக்கிறது.

வசதியான கான்கிரீட் வீடுகளுக்கும் பொருட்களை கொடுத்தோம். அதைத் தவிர்த்து குடிசை வீடுகளுக்கு மட்டும் கொடுத்திருக்கும்படி திட்டமிட்டிருக்கலாம். பொதியில் கணிசமான அளவு பொருட்கள் இருக்க வேண்டும். வர்க்கரீதியாக முன்னேறியவர்களுக்கு வேலை செய்ததில் சோர்வு ஏற்படுகிறது, அதனால் என்ன நோக்கத்துக்கு வேலை செய்கிறோம் என்ற தெளிவு இல்லாமல் போகிறது. மேலும் முறையான கருவிகள் இல்லை.

இருப்பினும், எல்லோரும் தோழமை உணர்வுடனும் பொறுப்புடனும், சலிப்பில்லாமலும் வேலை செய்தார்கள்.

– ராம்

(அடுத்த பகுதியில் தொடரும்)

Series Navigation<< கஜா : அரசியலை புரிய வைப்பதே நீண்ட கால கடமைகஜா புயல் : யார் முறையான நிவாரணம் வழங்க முடியும்? >>

Permanent link to this article: http://new-democrats.com/ta/cyclone-gaja-total-damage/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
கொடைக்கானல் பாதரச நச்சு : யூனிலீவரின் இனவெறி கொள்கை

இங்கிலாந்தில் பாதரசம் நச்சுக்கான வரம்பு 100 கிராமுக்கு 1 மி.கி-க்கு மிகாமல் இருக்க வேண்டும் - குடியிருப்பு பகுதிகளில். ஆனால், கொடைக்கானலில் 100 கிராமுக்கு 20 மி.கி...

வங்கிப் பணத்தை எடுப்போம்! வங்கிக் கணக்கை முடிப்போம்!

கடுகு டப்பா சேமிப்பையும் வழிப்பறி செய்யுது மோடி அரசு! கார்ப்பரேட் முதலாளி கொள்ளைக்காக வங்கிக்குள் போகுது நமது பணம்! நாம் சம்பாதித்த, நாம் சேமித்த பணத்தை எடுக்க...

Close