“ஆட்குறைப்பு இல்லை, திறமை குறைவுதான்” – நாஸ்காம், “அரசு தலையிட வேண்டும்” – பு.ஜ.தொ.மு : விவாதம்

“ஐ.டிகனவு கலைகிறதா?”

“ஐ.டி கனவு கலைகிறதா?”

பங்கேற்பவர்கள்

  1. புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் தோழர் விஜயகுமார்
  2. ஐ.டி ஊழியர் ராம்
  3. கல்வியாளர் நெடுஞ்செழியன்
  4. நாஸ்காம் இயக்குநர் புருஷோத்தமன்
  5. தொழில்நுட்ப மன்றத்தைச் சேர்ந்த ராஜன் காந்தி

ஐ.டி ஊழியர் ராம் பணி பாதுகாப்பின்மை பற்றியும், ரேட்டிங் முறையில் இருக்கும் பிரச்சனைகள் பற்றியும் பேசுகிறார். “நாங்கள் தொடர்ந்து உழைக்கிறோம், திறனை மேம்படுத்திக் கொண்டே இருக்கிறோம். இது போன்ற பிரச்சனைகளை கையாள்வதற்கு யூனியன் நிச்சயம் தேவை. தமிழ் நாட்டின் போக்குவரத்துத் தொழிலாளர்கள் சமீபத்தில் செய்தது போல போராட்டத்தின் மூலம்தான் உரிமைகளை உறுதி செய்ய முடியும்.”

பு.ஜ.தொ.மு விஜயகுமார் : “ஐ.டி துறையில் ஊழியர்கள் கொத்துக் கொத்தாக தூக்கி எறியப்படுகின்றனர். 3 மாதங்களுக்கு முன்பு சிறந்த சாதனையாளர் என்று விருது வாங்கிய ஒருவருக்கு 4-வது ரேட்டிங் கொடுக்கிறார்கள். இந்த ரேட்டிங் செயற்கையாக எத்தனை பேரை வேலையை விட்டு நீக்க வேண்டும் என்று நிறுவனம் முடிவு செய்த பிறகு தரப்படுகிறது.

நிறுவனத்துக்காக இரவு பகலாக பல ஆண்டுகள் உழைத்த ஊழியர்களை திடீரென்று தூக்கி எறிவது நியாயம் கிடையாது.

மூத்த ஊழியர்களை அனுப்பி விட்டு புதிய இளைஞர்களை எடுப்பதன் மூலம் செலவைக் குறைக்க பார்க்கிறார்கள். இது தவறு. லட்சக்கணக்கான கோடி ரூபாய் மானியங்கள் அரசுகளால் இந்த நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது அவை வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்ற காரணத்தைச் சொல்லித்தான். இப்போது வேலைகளை வெட்டும் போது நாம் என்ன செய்ய வேண்டும்?

அரசு தலையிட வேண்டும். வேலை வாய்ப்புகளை உருவாக்கத்தான் மானியங்கள் கொடுக்கப்பட்டன. வேலை இழப்பு நடக்கும் போது தலையிட்டு, யூனியன், நிறுவனம், தொழிலாளர்துறை என்ற முத்தரப்பு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்.”

ஊழியர்கள் தரப்பை முன் வைப்பதையும், கார்ப்பரேட்டுகளின் செயல்பாடுகளை அம்பலப்படுத்துவதையும் சிறப்பாக செய்திருக்கிறார். பல ஆண்டு அனுபவமும், அரசியல் தெளிவும் இருந்தால்தான் நாஸ்காம் மற்றும் கார்ப்பரேட்டுகளை எதிர் கொள்ள முடியும் என்பது உறுதியாகிறது.

நாஸ்காம் இயக்குநர் : பொதுவாக சில கருத்துக்களை சொல்கிறார். “ஆட்குறைப்பே கிடையாது, கட்டாய பணி விலகலும் நடப்பதில்லை, எல்லாமே வதந்தி. எந்த ஆதாரமும் கிடையாது.”

கல்வியாளர் நெடுஞ்செழியன் : கல்வித் தரம் பற்றியும் தனியார் கல்லூரிகள் தரத்தை சீரழத்தது பற்றியும் பேசுகிறார். [ஏற்கனவே வேலையில் இருக்கும் ஊழியர்கள் வேலை இழப்பதைப் பற்றிய இந்த விவாதத்தில் பொருத்தமற்றதுதான்]. கேம்பஸ் ஆள் எடுப்பில் ஊழல் பற்றியும் பேசுகிறார்.

கல்வியாளரும், நாஸ்காம் பிரதிநிதியும் உள்நாட்டு சந்தை பற்றி பேசுகிறார்கள். இந்திய நிறுவனங்களின் பலவீனத்தையும் அவை வெளிநாட்டு நிறுவனங்களை பெருமளவு சார்ந்திருப்பதையும், குறைந்த அளவே ஆராய்ச்சி துறையில் முதலீடு செய்வதையும் சுட்டிக் காட்டுகிறார் விஜயகுமார்.

தொழில்நுட்ப மன்றத்தின் ராஜன் காந்தி ஐ.டி ஊழியர்கள் தொழிலாளர் என்ற வகைக்குள் வருவார்கள் என்பது தொடர்பான சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு பற்றி சொல்கிறார். சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் செயல்படும் நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய விதிகளைப் பற்றி அவர் பேசியது நாஸ்காம் பிரதிநிதிக்கு வாய்ப்பாக கிடைத்தது. அதை வைத்து எப்படி ஐ.டி நிறுவனங்கள் எல்லா சட்டங்களையும் பின்பற்றுகின்றன என்று பேசினார். ராஜன் அதன் பிறகு நாஸ்காம் கருப்புப் பட்டியல் பற்றி பேசினார். அப்படி ஒன்று இல்லவே இல்லை என்று சொல்லி விட்டார் நாஸ்காம் பிரதிநிதி.

பு.ஜ.தொ.மு-வின் தொடர்ச்சியான முயற்சிக்குப் பிறகுதான் 2016-ல் தமிழ்நாடு அரசு தொழிலாளர் சட்டங்கள் ஐ.டி துறைக்கு பொருந்தும் என்று அறிவித்தது என்று நினைவூட்டினார், விஜயகுமார்.. நாஸ்காம் கருப்புப் பட்டியலைச் சொல்லி எச்.ஆர்-ஆல் ஊழியர்கள் மிரட்டப்படுகிறார்கள் என்று சொன்ன விஜயகுமார் இந்தப் பிரச்சனை உள்ளிட்டு ஐ.டி ஊழியர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு தொழிலாளர் துறை செயலருக்கு மனு கொடுத்திருப்பது பற்றி குறிப்பிட்டார்.

Series Navigation<< ஆட்குறைப்புக்கு எதிராக தொழில்தாவா தயாரிப்பு – பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர்கள் பிரிவுபுகார் கொடுத்த சி.டி.எஸ் ஊழியர்களுக்கு புராஜக்ட் ஒதுக்கவும் – தொழிலாளர் துறை >>

More from New Democrats

Permanent link to this article: http://new-democrats.com/ta/debate-on-it-layoff-issues-with-vijayakumar-of-ndlf/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
உண்மையான மனிதர் திரு பகத்சிங் : பெரியார்

திரு. காந்தியவர்கள் என்றையதினம் கடவுள்தான் தன்னை நடத்துகின்றார் என்றும், வருணாச்சிரமந்தான் உலக நடப்புக்கு மேலானதென்றும், எல்லாம் கடவுள் செயல் என்றும் சொன்னாரோ அன்றே பார்ப்பனீயத்திற்கும், காந்தீயத்திற்கும் வித்தியாசமில்லை...

டி.சி.எஸ்-ன் “சதுரங்க வேட்டை”!

டி.சி.எஸ்-ன் "சதுரங்க வேட்டை"! டிரெயினிங்குடன் வேலை என மோசடி! வேலை தேடுவோரிடம் ரூ 1 லட்சம் கொள்ளை! ரூ 6,700 சம்பளம்; 12 மணி நேர வேலை...

Close