டெல்டா விவசாயம் நெருக்கடியில்! விவசாயிகள் தற்கொலை! ரூபாய் நோட்டு பிடில் வாசிக்கிறார் மோடி!

 1. கருப்புப் பணத்தின் மீது மோடியின் “சர்ஜிகல் ஸ்டிரைக்”
 2. டாலர்-ரூபாய், அமெரிக்கா-இந்தியா பற்றி இந்துத்துவ பிதற்றல்கள்
 3. ரூபாய் நோட்டு செல்லாததானது – உழைப்பாளிகளுக்கு ஐ.டி சங்கத்தின் மடல்
 4. கருப்புப் பண ஒழிப்பு மோசடி – மக்கள் அதிகார நிலைப்பாடு
 5. கருப்புப் பணத்தை ஒழிக்க முடியுமா?
 6. “10 நாட்களில் பிறக்குமா புதிய இந்தியா” தொலைக்காட்சி விவாதம்
 7. வங்கியில் பணத்தை எடுப்போம், வங்கிக் கணக்கை முடிப்போம் – மக்கள் அதிகாரம் அறைகூவல்
 8. டெல்டா விவசாயம் நெருக்கடியில்! விவசாயிகள் தற்கொலை! ரூபாய் நோட்டு பிடில் வாசிக்கிறார் மோடி!
 9. செல்லாத நோட்டு, கருப்புப் பணம், டிஜிட்டல் பணம் – யதார்த்தம் சொல்லும் பெண்கள்
 10. வங்கிப் பணத்தை எடுப்போம்! வங்கிக் கணக்கை முடிப்போம்!
 11. பணமதிப்பு நீக்கம் – மோடிக்கு பொறுப்பில்லையாம்!
 12. ரூபாய் நோட்டு சாவுகள் : இப்போது வேலைப் பளுவால் வங்கி மேலாளர் இறப்பு
 13. கருப்புப் பண ஒழிப்பு : ஆட்டோ தொழிலாளியின் சவுக்கடி
 14. மக்கள் மீது மோடியின் தாக்குதல் : கருப்புப் பணத்தை ஒழித்து விடுமா?
 15. ரூ 500, 1000 செல்லாது! மோடியின் கருப்புப் பண மோசடி!
 16. பண மதிப்பு நீக்கம் பற்றி ப. சிதம்பரம் – நீங்க நல்லவரா… கெட்டவரா…?
 17. பண மதிப்பு நீக்கமும், முதலாளித்துவமும் – ஐ.டி சங்கக் கூட்டம்
 18. மலையைக் கெல்லி எலியைக் கோட்டை விட்ட ‘திறமை’சாலி மோடி!
 19. “மோடியின் 2000 ரூபாய் திட்டம்” – உழைக்கும் மக்கள் சவுக்கடி, குமுறல் – வீடியோ
 20. பண மதிப்பு நீக்கம் : பணமும் இல்லை, வாழ்வும் இல்லை
 21. 5% வளர்ச்சியை 7% ஆகக் காட்டி மோசடி செய்யும் மோடி அரசு!
 22. நீரவ் மோடியின் 11,200 கோடி ஆட்டை – தேவை நரேந்திர மோடியின் “துல்லிய தாக்குதல்”

    கர்நாடகாவில் இருந்து காவிரி நீர் திறந்து விட மறுக்கப்பட்டதை அடுத்து டெல்டா மாவட்ட விவசாயிகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கின்றனர். பல விவசாயிகள் மனம் உடைந்து இறப்பதும் தற்கொலை செய்து கொள்வதும் தொடர்கிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் அதை அமல்படுத்தாமல் வஞ்சனை செய்தது மோடி அரசு. தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்து விடக் கூடாது என்று கர்நாடகாவில் வன்முறையை தூண்டி விட்டது, மோடியின் பா.ஜ.க .

பொதுவான விவசாய பொருளாதார அழிப்பினால் நாடு முழுவதும் விவசாயிகள் மீதான நெருக்கடி கடுமையாகி வருகிறது. அடுத்தடுத்த பட்ஜெட்டுகளில் கார்ப்பரேட்டுகளுக்கு சலுகைகளை அள்ளி வழங்கி விவசாய பொருளாதாரம் புறக்கணிக்கப்படுகிறது. கார்ப்பரேட்டுகள் வங்கிகளுக்கு கட்டாமல் ஏய்க்கும் வாராக் கடன்களை தள்ளுபடி செய்யும் அதே நேரம் விவசாயத் தேவைகளுக்கு வங்கிக் கடன்கள் வழங்காமல் 36% முதல் 60% வீதத்தில் கந்து வட்டிக் கடன் வாங்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

அரசின் அலட்சியத்தாலும், புறக்கணிப்பாலும் துவண்டு போயிருக்கும் தமிழக விவசாயிகள் மீது பருவ மழை பொய்ப்பு இடியாக இறங்கியிருக்கிறது. தஞ்சை டெல்டாவில் நேரடி விதைப்பில் 7 லட்சம் ஏக்கர் பயிர் செய்யப்பட்டுள்ள நெல்பயிர் வாடி அழிந்து போகும் நிலையில் உள்ளது.

இந்த நிலையில்தான் ‘கருப்புப் பணத்தை ஒழிக்கிறேன்’ என்று போலி ‘சர்ஜிகல்’ தாக்குதல் நடத்தி, ஏற்கனவே தள்ளாடிக் கொண்டிருக்கும் விவசாயப் பொருளாதாரத்தில் வேலைப் பாய்ச்சியிருக்கிறது மோடி அரசு. கிராமப்புற கூட்டுறவு வங்கிகளை முடக்கி போட்டிருக்கிறது.

தஞ்சை டெல்டாவில் விவசாயிகள் தற்கொலை பற்றி timeofindia-வில் வெளியான செய்திகளை மொழிபெயர்த்து தந்துள்ளோம்.

ஞ்சாவூர் டெல்டா மாவட்டங்களில் விவசாயத்துக்கு காவிரி தண்ணீர் போதிய அளவுக்கு  கிடைக்காததால் விவசாயிகள் மாரடைப்பாலும், தற்கொலை செய்து கொண்டும் உயிர் இழப்பது நாளுக்குநாள்அதிகமாகி கொண்டிருகிறது. பருவமழை பொய்த்துப் போனதால், கடன் சுமை தாங்க முடியாமல் இதுவரை ஐந்து விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர்

பல விவசாயிகள் தனியாரிடம் 30% – 60% வட்டிக்குக் கடன் வாங்கி விவசாயம் செய்துள்ளனர். விவசாய நிலங்களுக்கு நீர் போதிய அளவு கிடைக்காததால் பயிர்கள் வாடத் தொடங்கியுள்ளன. கடனில் மூழ்கி மனம் நொந்து போன விவசாயிகள் வேறு வழியில்லாமல் தற்கொலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

டெல்டா மாவட்டங்களில் மட்டும் இதுவரை மூன்று விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். ஈரோட்டில் இரண்டு விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

பருவ மழை பெய்வது இன்னும் தாமதமானால், சுமார் 7 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் பாதிக்கப்படும். மேட்டூர் அணையில் இருந்து காலதாமதமாக பாசன நீர் திறந்ததைத் தொடர்ந்து 70 சதவீதம் நிலத்தில் நேரடி விதைப்பு முறையில் பயிர் செய்யப்பட்டது. ஆனால், அவையெல்லாம் சீரான முறையில் விளைந்து அறுவடை செய்வதற்கு போதிய அளவுக்கு நீர் கிடைக்காமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

farmerஞ்சாவூரில் பொன்னாவரயன்கோட்டை பகுதியை சேர்ந்த விவசாயி மாசிலாமணி(49) கடன் பிரச்சனை சமாளிக்க முடியாமல் நவம்பர் 20-ம் தேதி பூச்சு கொல்லி மருந்து அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் விவசாயம் செய்வதற்கு தனியாரிடம் 22,000 ரூபாயை 60% வட்டிக்கு பணம் பெற்றுள்ளார். அதை திருப்பி கொடுக்க முடியாமல் போனதால் தற்கொலை செய்து கொள்ளும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் . இவரின் குடும்பத்தின் வருங்காலமே கேள்விக்குறியாகி விட்டிருக்கிறது.

“எனது அப்பா 3.3 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து அதில் பயிர் செய்ய கடன் வாங்கியிருந்தார். கடன் கொடுத்தவருக்கும் அப்பாவுக்கும் கடந்த ஞாயிறு அன்று சண்டை நடந்ததுள்ளது, அதற்கடுத்து வீட்டிற்கு வந்தவர், தான் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து விட்டதாய் சொன்னதை அடுத்து அவரை மருத்துவமனைக்கு வேகமாய் அழைத்துச் சென்றோம், போகிற வழியிலே தந்தையின் உயிர் பிரிந்தது “ என்று அவரது மகன் கூறியுள்ளார்.

“மாசிலாமணியிடம் தற்கொலை செய்துகொள்வதற்கான எந்த அறிகுறிகளும் தென்படவில்லை. ஆனால் அவரைப்போலவே நெருக்கடியில் வாழும் தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டின விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது அவரை பாதித்திருக்கலாம்” என்கிறார் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் பொதுச்செயலாளர் தனபாலன் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் “இரண்டு மாதங்களாய் கடுமையான உழைப்போடு பல ஆயிரம் ரூபாய் பணத்தை செலவு செய்து வளர்ந்திருக்கும் பயிர்கள் வீணாகப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. களைகள் பயிரை விட வேகமாக வளர்ந்திருக்கின்றன. அடுத்த சில நாட்களில் மழை பெய்யா விட்டால் எங்கள் உழைப்பு எல்லாம் வீணாகி விடும்” என்கிறார்.

திருத்துறைப்பூண்டியில் உள்ள ரகுநாதபுரத்தை சேர்ந்த கோவிந்தராஜ் என்ற விவசாயி நவம்பர் 3-ம் தேதியன்று தற்கொலை செய்து கொண்டார். அவருடைய மருமகளை பிரசவத்திற்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதால் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மூன்று நாட்களுக்கு பிறகு அவருடைய உடல் வயல்வெளியில் கண்டெடுக்கப்பட்டது. பிரேத பரிசோதனையின்படி விஷம் அருந்திதான் இறந்துள்ளார் என்பது தெரியவந்தது.

கோவிந்தராஜ் மகன் கூறுகையில், “எனது அப்பா கூட்டுறவு வங்கியிலும் வேறு சிலரிடமும் தன்னுடைய நிலத்தில் நெல் பயிர் செய்வதற்காக கடன் வாங்கியுள்ளார். இப்போது கடனை திருப்பி கொடுக்கும்படி ஒவ்வொருத்தராய் வரப் போகிறார்கள்“ என்கிறார்.

கடந்த ஐந்து வருடங்களாய் பருவமழை பொய்த்துப் போனதாலும் விளைச்சலுக்கு போதிய நீர் இல்லாததாலும் பயிர் சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் “மகாத்மாகாந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை“ வைத்து தன்னுடைய வாழ்க்கையை நடத்திக்கொண்டு இருப்பதாய் கூறுகிறார்கள் அந்தப்பகுதி கிராமப்புற மக்கள். “வாரத்திற்கு ஒருமுறைதான் குடிநீர் வருகிறது, குடிப்பதற்கும் விவசாயம் செய்வதற்கும் போதிய அளவுக்கு தண்ணீர் ஏற்பாடு செய்தாலே போதும். வேறெந்த உதவியும் அரசாங்கத்திடம் நாங்கள் எதிர்பார்க்கவில்லை“ என்கிறார் கதிரேசன் என்பவர்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் தலைநாயர் பகுதியைச் சேர்ந்த முருகையனின் விவசாயம் செய்யும் முயற்சி தற்கொலையில் முடிந்துள்ளது. இவர் மூன்று ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்ய முயற்சித்துள்ளார். 22,000 ரூபாய் அரசு மானியம் பெற்ற பிறகும் அவர் கடும் இழப்புகளை எதிர்கொண்டதைத் தொடர்ந்து தனது வீட்டிலே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். மனைவி, மகள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டுள்ள மகன் மீது இப்போது சுமை விழுந்துள்ளது.

விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டதால் கடந்த ஒரு மாத காலமாய் டஜன் கணக்கில் விவசாயிகள் மாரடைப்பாலும், தற்கொலை செய்து கொண்டும் உயிரிழந்துள்ளார்கள் என்று தனபாலன் கூறுகிறார்.

“விவசாயிகள் கடன் சுழற்சியில் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது தற்கொலைகளுக்கு காரணமாக உள்ளது” என்கிறார் ஜனகராஜன் ( Chennai institute of development studies) கூறியுள்ளார். இவர் மேலும் கூறுகையில் “70 சதவீத விவசாயிகள் அதிக வட்டிக்கு பணம் வாங்கி பயிர் செய்வதால் தற்கொலைக்கு தள்ளப்படுவதாகவும், போர்க்கால அடிப்படையில் விவசாயிகள் அனைவருக்கும் குறைந்த வட்டிக்கான கடன், விதைகள், உரம் மற்றும் பாசன நீர் கிடைக்க ஏற்பாடு செய்தால் இந்தப் பிரச்சினையை சரிசெய்ய முடியும்” என்றார்.

நன்றி : டைம்ஸ் ஆஃப் இந்தியா

In Tamil Nadu’s rice bowl, life comes to a boil

Series Navigation<< வங்கியில் பணத்தை எடுப்போம், வங்கிக் கணக்கை முடிப்போம் – மக்கள் அதிகாரம் அறைகூவல்செல்லாத நோட்டு, கருப்புப் பணம், டிஜிட்டல் பணம் – யதார்த்தம் சொல்லும் பெண்கள் >>

Permanent link to this article: http://new-democrats.com/ta/delta-farmers-suicide-governments-abject-neglect/

Leave a Reply

Your email address will not be published.

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
காவிரி பிரச்சனை – பு.ஜ.தொ.மு பத்திரிகை செய்தி

பத்திரிகை செய்தி காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக, கன்னட வெறியர்கள் கர்நாடகா வாழ் தமிழர்கள் மீது தாக்குதல்...

“கிரிக்கெட் வெற்றியை கொண்டாடுவது இந்திய மக்களை இழிவுபடுத்துகிறது” – சரிதானா?

கிரிக்கெட் போன்ற போதை பொருள்கள் மேலே கூறப்பட்ட உண்மையான பிரச்சனைகளைப் பற்றி மக்களை சிந்திக்க விடாமல் திசை திருப்புகின்றன.

Close